* பிரதமருடன் ஒன்பது மாநில முதல்வர்கள் மட்டும்தான் பேசுவர் என்ற அறிவிப்பால், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தன் ஆலோசனைகளை அறிக்கையாகக் கொடுத்துவிட்டார்.
* இராசபாளையம் அம்மா உணவகத்தில் பார்சல் வழங்குவது தொடர்பாக அ.தி.மு.க.வினருக்கிடையே அடிதடியாம்!
* சுங்க வசூலைத் தள்ளி வைக்கக் கோரும் மனுவினை சட்டப்படி பரிசீலிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
* கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பு நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 1.9 விழுக்காடாக மட்டுமே இருக்கும்.
* வங்க சேத்தில் முசுலிம் மதக் குருவுக்குக் கரோனா தொற்று!
வி அகவிலைப்படி நிறுத்தத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், ஆசிரியர் சங்கம் கண்டனம்.
வி கரோனா நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் பணியாளர்கள் அணியும் கவச உடையால் நீர் அருந்தவோ, இயற்கை உபாதைகளைக் கழிக்கவோ முடியாதாம்
* அவினாசியில் டாஸ்மாக் கடையை உடைத்து 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் கடத்தல் - இதைச் செய்தவர்கள் யார் தெரியுமா? மதுபானக் கடை ஊழியர்களே!
* திருச்சியிலிருந்து மகாராட்டிரத்துக்கு 10 பேர் நடந்தே செல்லுகின்றனர்.
* மே 6 அன்று நடக்கவிருந்த திருவண்ணாமலை - சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்குத் தடை!
* குடிபெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க மத்திய அரசிடம் உள்ள திட்டம் என்ன என்று உச்சநீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.
* இராணுவச் செலவினத்தில் முதலிடம் அமெரிக்கா இரண்டாம் இடம் சீனா மூன்றாம் இடம் இந்தியாவாம்!
* இந்தியாவில் சிக்கிம், நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் கரோனா தொற்று இல்லை.
* பரிசோதனைக் கருவி கொள்முதல் ஊழல் - பிரதமர் தலையிட ராகுல் காந்தி கோரிக்கை.
* கரோனா பெரும் பரவல் காரணமாக சென்னை கோயம்பேடு பூ மற்றும் பூச்சந்தை மாதாவாரத்துக்கு மாற்றம்.
* ஊரடங்கு காரணமாக நொறுக்குத் தீனிகளின் விற்பனை 50 - 150 விழுக்காடுவரை அதிகரித்துள்ளதாம் (குழந்தைகள் ஜாக்கிரதை!)
* வரும் செப்டம்பரில் கரோனாவுக்குத் தடுப்பூசி இந்திய மருத்துவ நிறுவனம் நம்பிக்கை.
* நிதி ஆயோக் (திட்டக் கமிஷன்) அதிகாரிகளுக்குத் தொற்று ஏற்பட்டதால், அலுவலகத்துக்குச் ‘சீல்' வைப்பு!
* பெண் குழந்தைகளுக்காக ராஜஸ்தானில் 5 லட்சம் மரங்களை கிராமத்தினர் நட்டனர்.
No comments:
Post a Comment