ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகளால் மூளைச்சலவை செய்யப் பட்ட இளைஞர்கள் இந்தியாவின் எதிர் காலத்தை மட்டும் சீரழிக்கவில்லை. தங் களின் வாழ்க்கையையும் சீரழித்துக் கொண்டு இருக்கின்றனர்.
இதில் கருநாடகாவைச்சேர்ந்த இந்து ஜாகருதாசமிதி என்ற அமைப்பைச் சேர்ந்த வர் மரணதண்டனைக்குரிய குற்றமாக கருத் தப்படும் இஸ்லாமிய புனித தலம் மற்றும் அந்த நாட்டு மன்னரை இழிவு படுத்தி யுள்ளார். இதனால் அவர் மரணதண்டனைக் காக காத்துக்கொண்டு இருக்கிறார்.
உடுப்பியில் உள்ள குந்தாபூரில் இருந்து சவுதி அரேபியாவின் தம்மாம் நகருக்கு ஒரு நிறுவனத்தின் தொழிலாளியாக சென்ற ஹரீஸ் பங்காரியா. ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் துணை அமைப்பான இந்து ஜாகருதா சமிதி முக்கிய பொறுப்பாளர் (இந்த அமைப்பு கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்புடையது) இவர் தன்னுடைய மொபைல் பேஸ்புக் அப்ளிகேசனில் இருந்து ஒரு பதிவை எழுதியுள்ளார். அதில் அங்கே பாபரி விழுந்தது அடுத்து இங்கே மக்கா விழும். அந்த இடத்திலும் ராமர் கோவில் எழும், மோடி இதைச் செய்து முடிப்பார் செய்து முடிக்க தயாராவோம் என்று எழுதியிருந்தார். அப்படியே மோடி செய்யும் காரியத்தை சவுதி மன்னர் வேடிக்கை பார்ப்பார் என்று சவுதி மன்னரை காங்கிரஸ் காரனுக்கு வாலாட்டும் நாய் என்று பதிவிட்டிருந்தார்.
இது குறித்து புகார் வர அவரது மொபைலை பரிசோதித்த காவல்துறையினர் ஹரீஸ் பயன்படுத்திய சவுதி சிம் இணைய தள இணைப்பில் அவரது கைபேசியில் இருந்துதான் அந்த பதிவு ஏற்றப்பட்டது தெரிய வந்து உடனடியாக கைது செய்யப் பட்டார். காவல்துறை கைதுசெய்வதற்கு முன்பாக அவர் இணையதளத்தில் தன்னை மன்னித்துவிடும் படி மன்றாடியுள்ளார். அதில்
”எனது இஸ்லாமிய சகோதரர்களே என்னை மன்னித்துவிடுங்கள், எனது குடும்பம் என்னை நம்பித்தான் உள்ளது, இங்கு வந்த பிறகு நான் பல வகையில் நன்மை அடைந்துள்ளேன். என்னை மன்னி யுங்கள் இஸ்லாமிய சகோதரர்களே, எனது நிறுவனத்தில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது, நான் செய்தது தவறுதான், என்னை மன்னி யுங்கள் என் குடும்பத்தை சிறிது நினைத்துப் பாருங்கள் "நான் அனுப்பும் ரியாலில் தான் அவர்களது அடுப்பு எரிகிறது. நான் ஒரு மாதம் ரியால் அனுப்பாவிட்டால் எனது குடும்பத்தினர் பட்டினியாக கிடந்து சாக வேண்டியதுதான் என்னை மன்னியுங்கள்” என்கிறார்.
உடுப்பியில் உள்ள அவரது குடும்பம் இன்றளவும் வறுமையில் தான் உள்ளது. சமீபத்தில் தான் அவர் கடன்வாங்கி சவுதி சென்றுள்ளார். இன்னும் அந்த கடன் கூட அடைக்காத நிலையில் மதவெறிமூளையில் ஏற இவ்வாறு எழுதியிருக்கிறார். மன்னரை இழிவுபடுத்துவது, உலக இஸ்லாமியர்களின் புனித இடம் என்று கருதப்படும் மக்காவை பழிப்பது மிகபெரும் துரோகம் ஆகும். இதில் அவருக்கு கடுமையான தண்டனை உண்டு, இது போன்ற விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறையும் தலையிட முடியாது.
இந்த தகவல் கிடைத்ததும் ஹரீஸ் பங் காரியாவின் மனைவி மங்களூர் காவல் துறைக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள் ளார். அதில் அவர் எனது கணவர் ஒன்று மறியாத அப்பாவி. இங்குள்ள சில இயக் கங்கள் அவரை தொடர்ந்து மூளைச்சலவை செய்துவருகிறது, இதன் காரணமாக அவர் இப்படி எழுதிவிட்டார். ஆகவே அவற்றை அழித்து இங்கிருந்து அவருக்கு தொடர்ந்து மூளைச்சலவை செய்துவந்த இந்து அமைப் பினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் அவர் சவுதி இளவரசருக்கு தனது ஊரிலுள்ள இஸ்லாமிய அமைப்பினரின் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். அதில் இந்த கோரிக்கையை உங்கள் சகோதரியின் கோரிக்கையாக எடுத்துக்கொள்ளுங்கள் எனது குடும்பம் எனது கணவர் அனுப்பும் வருவாயில் தான் வாழ்கிறது, அவர் இல்லையென்றால் நாங்கள் பட்டினியால் சாகவேண்டியது தான் என்று அரபுமொழி யில் கடிதம் எழுதியுள்ளார், அக்கடிதம் தஜானுத்தீன் என்ற சமூக அமைப்பின் மூலம் மன்னருக்கு அனுப்பட்டுள்ளது. மேலும் கே.சி.எஃப். என்ற இஸ்லாமிய இளைஞர் அமைப்பு கர்நாடக முதல்வரிடம் நேரில் சென்று இந்த விவகாரம் குறித்து கூறி மத்திய வெளியுறவுத்துறையிடம் பேசி ஹரீஸ் பங்காரியாவை விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து இதுவரை இந்திய வெளியுறவுத்துறை அல்லது இந்திய அரசின் சவுதி தூதரகத்தில் இருந்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. இதை ஹரீஸின் குடும்பத்தினரும் உறுதிப் படுத்தியுள்ளனர்.
சவுதி அரேபிய நாட்டைப் பொறுத்த வரை இஸ்லாம் மதத்தை பழிப்பவர்களுக்கு மரணதண்டனை உண்டு. அகமது அல் சமரி என்பவர் இஸ்லாம் மதத்தை தோற்றுவித்த முகமது நபிகள் குறித்து சர்ச்சைப் பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட அவருக்கு பிப்ரவரி 2015 அன்று மதீனாவிற்கு அருகில் உள்ள ஹவர் அல் பதின் என்ற ஊரில் பொது இடத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment