பெற்றோர்களே பிள்ளைகளைக் கவனியுங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 21, 2020

பெற்றோர்களே பிள்ளைகளைக் கவனியுங்கள்


கருங்கல்பாளையம்,மே21, ஈரோடு கருங்கல் பாளையம் கமலாநகரை சேர்ந்தவர் குமார். இவரது மகன் சதிஷ்குமார் (வயது16). நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். மாணவர் சதிஷ்குமார் செல்பேசியில் 'பப்ஜி' விளை யாட்டை ஆன் லைனின் நண்பர் களுடன் குழுவாக விளையாடுவது வழக்கம்.


சம்பவத்தன்று வீட்டின் அருகே உள்ள மாட்டுச்சந்தை திடலில் அமர்ந்து அவர் 'பப்ஜி' விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். அவரது குடும்பத்தினர் சதிஷ் குமாரை ஈரோடு அரசு மருத் துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு சதிஷ்குமார் மாரடைப்பு காரணமாக வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினார்கள்.


புலம் பெயர் தொழிலாளர்களின் ரத்தம் - வியர்வையில் தான் நாடு இயங்கி வருகிறது


மத்திய பா.ஜ.க. அரசுமீது பிரியங்கா காந்தி சாடல்



புதுடில்லி,மே21, புலம் பெயர் தொழிலா ளர்கள் நாட்டின் முது கெலும்பு என்றும் அவர் களின் ரத்தம், வியர் வையில் தான் நாடு இயங்கி வருவதாகவும் பிரியங்கா காந்தி பா.ஜ.க. அரசை விமர்சித்துள்ளார்.  புலம் பெயர் தொழிலாளர் களின் ரத்தம் மற்றும் வியர்வையில் தான் நாடு இயங்கிக் கொண்டிருப்பதாகவும் அவர்களின் நலனை பேணுவதற்கு அனைவருக்கும் பொறுப்பு உள்ளதாகவும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். அரசியல் செய்வதற்கு உரிய நேரம் இதுவல்ல என்று பா.ஜ.க.வை அவர் விமர்சித்துள்ளார்.


காங்கிரஸ் வழங்கிய பேருந்துகளை பா.ஜ.க தான் ஏற்பாடு செய்தது என்று விளம்பரப்படுத்த விரும்பினாலும், செய்து கொள்ளுங்கள் என்றும் பிரியங்கா கூறியுள்ளார்.


மேலும் காலதாமதம் செய்யாமல் புலம் பெயர்ந்து செல்லும் தொழிலாளர்கள் அதனை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்தை பிரியங்கா கேட்டுக் கெண்டுள்ளார்.


 


கேரளாவில் பேருந்து சேவை தொடக்கம்



திருவனந்தபுரம்,மே21, கேரளாவில் 56 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சேவை தற்போது மீண்டும் தொடங்கப்பட் டுள்ளது.


கேரள மாநிலத்தில் 56 நாள்களுக்குப் பிறகு இன்று பேருந்து சேவை தொடங் கியது. பேருந்துக் கட்டணம் 50 சதவீதம் உயர்த்தப்பட் டுள்ளது. காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் மத்திய அரசு அறிவித்தக் கட்டுப்பாடுகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் என்று கேரள மாநில போக்கு வரத்து கழகம் அறிவித்துள்ளது.


பேருந்துகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.


ஒரு சில நகரப் பகுதிகளில் மட்டுமே பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் இருந்தது.  பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் சமூக இடை வெளியை கடைப்பிடித்து பயணிகள் அமர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment