ஒற்றைப் பத்தி - சிறைப் பறவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 23, 2020

ஒற்றைப் பத்தி - சிறைப் பறவை


திராவிடர் இயக்க வரலாற்றில் இந்தி எதிர்ப்பு என்பது மிக முக்கியமான போர்க்களம் - ஆரியர் - திராவிடர் போராட்டத் தின் அடையாளச் சின்னம்.


‘‘நாம் இந்தியை எதிர்ப்பது என்பது இன்று அது தேசிய மொழியாகி விட்டது என்பதற்காக மாத்திரம் அல்ல; ஆரியர்களின் கலை, மதம், சாத்திரம் முதலிய வைகளை இந்த நாட்டில் புகுத்த அது ஒரு சாதனமாகக் கையா ளப்படுகிறது என்பதற்காகவே'' (‘விடுதலை', 8.8.1953) என்று கூறுகிறார் தந்தை பெரியார்.


இந்தியை 1937 ஆம் ஆண் டில் புகுத்திய சென்னை மாநிலப் பிரதமர் ராஜாஜிகூட சமஸ்கிருதத் தைப் படிப்படியாகப் புகுத்தவே இந்தியைப் புகுத்துகிறேன் என்று சென்னை இலயோலா கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.


1938 நவம்பர் 13 இல் சென் னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில்தான் ‘‘பெரியார்'' என்ற பட்டம் அளிக்கப்பட்டது. அது இந்தி எதிர்ப்புப் போராட்டக் காலகட்டம்.


அந்த மாநாட்டில் தந்தை பெரியார் ஆற்றிய உரைக்காக இரண்டு பிரிவுகளில் அவர்மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.


பெரியார், பெண்களை மறி யல் செய்யத் தூண்டினார் என்பது தான் முக்கிய குற்றச்சாட்டு. இந்த வழக்கு சென்னை ஜார்ஜ் டவுன் போலீஸ் கோர்ட்டில் 4 ஆவது நீதிபதி மாதவராவ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.


எதிர் வழக்காடுவதில்லை என்ற நிலைப்பாடுடைய பெரியார், நீதிமன்றம்முன் கொடுத்த வாக்குமூலம் பலருக் கும் அதிர்ச்சியைக் கொடுத்த ஒன்றாகும்.


‘‘இந்த நீதிமன்றம் காங்கிரஸ் மந்திரிகள் நிர்வாகத்திற்கு உட் பட்டது. நீதிபதியாகிய தாங்களும் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர். இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைத் திடீர் என்று வந்து புகுந்த திரு டர்களுக்கு ஒப்பிட்டு கனம் முதல் மந்திரியார் கடற்கரை கூட்டத்தில் பேசியிருக்கிறார்.


அடக்குமுறைக் காலத்தில் இம்மாதிரி கோர்ட்டுகளில் நியா யம் எதிர்பார்ப்பது பைத்தியக் காரத்தனம். ஆகவே, கோர்ட்டார் அவர்கள் தாங்கள் திருப்தி அடையும் வண்ணம் அல்லது மந்திரிமார்கள் திருப்தி அடையும் வண்ணம் எவ்வளவு அதிகத் தண்டனையைக் கொடுக்க முடி யுமோ அவைகளையும், பழிவாங் கும் உணர்ச்சி திருப்தியடையும் வரைக்கும் எவ்வளவு தாழ்ந்த வகுப்பு உண்டோ அதையும் கொடுத்து இவ்வழக்கு விசாரணை நாடகத்தை முடித்துவிடும்படி வணக்கமாகக் கேட்டுக்கொள் கிறேன்'' என்றார்.


நீதிபதியோ, ‘‘இவர் செய்த குற்றங்கள் இரண்டு. ஒவ்வொன் றுக்கும் ஒவ்வோராண்டுக் கடுங் காவல், ஒவ்வோராயிரம் அபரா தம். அபராதம் செலுத்தாவிடில் மீண்டும் ஆறு மாதம் தண் டனை. இரண்டு தண்டனைகளை யும் இரண்டு தனித்தனி காலத்தில் அடையவேண்டும்'' என்று தீர்ப்பு.


அதன்படி கோடை வெப்பம் தகிக்கும் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார். திரு.வி.க. எழுதுகிறார்: ‘‘முதுமைப் பருவம்! காவல்! கடுங்காவல்! எங்கே? இந்நிலையை எண்ண எண்ண உள்ளம் உருகுகிறது. திரு.நாயக் கருடன் மிக நெருங்கிப் பழகிய சிலர் மந்திரிப் பதவியில் வீற்றி ருக்கின்றனர். அவர்தம் மனமும் கசிந்தேயிருக்கும். வயதின் முதிர்ச்சி எவரையும் அலமரச் செய்யும்'' (‘நவசக்தி', 9.12.1938). கடும் நோயால் பாதிக்கப்பட்ட தாலும், மக்கள் மத்தியில் மூண் டெழுந்த கொந்தளிப்பாலும் 167 நாட்களுக்குப் பின் பெரியார் விடுதலை செய்யப்பட்டார். அந்நாள்தான் இந்நாள் (22.5.1939).


சிறைப் பறவை என்று தந்தை பெரியாரை விளித்தார் திரு.வி.க.


 - மயிலாடன்


No comments:

Post a Comment