இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டுமாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 21, 2020

இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டுமாம்!

கிரண்பேடி சொல்கிறார்


புதுச்சேரி, மே 21 புதுச்சேரி மாநி லத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும்  இலவச மின்சாரம் ரத்து செய் யப்பட வேண்டும் என்று, மாநில ஆளுநர் கிரண்பேடி தெரிவித்து உள்ளார்.


புதுச்சேரியில் முதல்வர் நாராயண சாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு அவ்வப்போது தொல்லைக் கொடுத்து வரும்  ஆளுநர் கிரண்பேடி, தற்போது இலவச மின்சாரம் விவ காரத்திலும் மூக்கை நுழைத்துள்ளார்.


மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்திருத்தத்துக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் நிறுத்தப்படக் கூடாது என்று போர்க்கொடி தூக்கி உள்ளன. காங்கிரஸ் கட்சியும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது என வலியுறுத்தி வருகிறது.


இந்த நிலையில்,  புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தனது டிவிட்டர் வலை தளத்தில், இலவச மின்சாரத்தை ரத்து செய்துவிட்டு, அதற்கான மானியத்தை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.


மேலும், புதுவை மாநில அரசின் நிர்வாகம் அரசுக்கு சொந்தமானவற்றை மீட்டெடுப்பதை நோக்கி முன்னே றுகிறது.  அரசுக்கு வர வேண்டிய நிலுவைத் தொகையை மீட்டெடுக் கவும், வாடகைகள் திருத்தப்பட்டு கணினி மயமாக்கப்பட்டு உள்ளன. அனைத்து மதுபான உரிமங்களும் ஏலத்தின் மூலம் ஒரே சீரான கொள்கையில் இருக்கும். கசிவுகளை தடுக்க அனைத்து விஷயங்களும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.


கடந்த கால மதுபான புகார்கள் தொடர்பாக சி.பி.அய். விசாரணை நடத்தி வருகிறது. கலால் மற்றும் நகராட்சிகள் சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்படும். கலால் மற்றும் இதர துறைகளில் மத்திய தணிக்கைத் துறை அளித்த ஆட்சேபணைகள் அனைத்தும் ஒருங்கே தொகுக்கப் படும். தணிக்கையின் மூலம் குறை பாடுகள் தவிர்க்கப்படும்.


இது மக்களின் பணம். இவை அனைத்தும் மக்களின் நலவாழ்வு மற்றும் அவர்களின் கவனிப்புக்காகவே திரும்பச் செல்ல வேண்டும். குறிப்பாக மோட்டார் வாகன சட்ட விதிகள் அரசாணையில் வெளியிடப்படாததை கவனத்தில் கொள்வோம். மோட்டார் வாகன சட்ட விதிகளில் வசூலிக்கப் படும் தொகை சாலைப் பாதுகாப்புக் காக செலவிடப்பட வேண்டும். இவ்வாறு  கூறியுள்ளார்.


No comments:

Post a Comment