ஒற்றைப் பத்தி - அம்பேத்கர் வென்றார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 28, 2020

ஒற்றைப் பத்தி - அம்பேத்கர் வென்றார்!


உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் காலத்தில் பீம் (அம் பேத்கரின் இயற்பெயர்) மற்றும் அவருடைய அண் ணன் ஆகி யோர், சமஸ்கிரு தத்தை இரண் டாவது மொழியாகப் படிக்க அனுமதிக்கப் படவில்லை. வேதங்களைப் படிப்பதற்குத் தேவையான அம்மொழியைச் சூத்திரர், மற்றும்  அதிசூத்திரர் கேட்கவோ படிக்கவோ கூடாது. பழைமைவாதிகளிடம் செல்வாக்குப் பெற்றிருந்த திலகர் போன்ற இந்து மதத் தலைவர்கள், வேதத்தில் நம் பிக்கையுள்ளவன் எவனோ அவனே இந்து என வரையறை செய்தனர். ஆனால், இந்துக் களில் எழுபது விழுக்காட்டினர் அதைப் படிக்கவோ, கேட் கவோ தடை செய்யப்பட்டனர். டாக்டர் எம்.ஆர். ஜெயகருக்கு நிகழ்ந்தது போன்றே, பீம் மற்றும் அவருடைய  அண் ணன் சமஸ்கிருதம் படிப்பதைப் பார்ப்பன ஆசிரியர்கள் தடுத்து விட்டனர். ஆகையால், அவர் கள் தம்முடைய விருப்பத்திற்கு மாறாகப் பாரசீக மொழியைப் பயின்றனர். (During his High School days both Bhim's elder brother and he were not allowed to take up Sanskrit as the second language. It was the key to the study of the Vedas which were neither to be heard nor to be read by the Shudras and the Atishudras - the Untouchables. Hindu leaders like Tilak, who were popular among the orthodox sections, defined a Hindu as one who had faith in the Vedas, but the pity of it was that seventy percent of the Hindus were forbidden to study, much less to listen to the Vedas! Poor Bhim and his brother were torn as under from Sanskrit by the Brahmin teachers as was also done in the case of Dr. M.R.Jayakar in his school days and were compelled to take persian against their will) - Pages 18 and 19. Dr. Ambedkar; Life and Mission by Dhananjay Keer, Third Edtion, 1971. 


வேதியப் பண்டிதரான பிர பாகர் ஜோஷி என்பவர் தனது 84 ஆம் வயதில், பார்வையற்ற நிலையிலும், டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை சமஸ்கிருதத்தில் எழுதியுள்ளார் எனும் செய் தியை 2010 ஜூலை 11 ஆம் நாள் ‘‘டைம்ஸ் ஆஃப் இந்தியா'' நாளிதழ் வெளியிட்டிருக்கின் றது. 2004 ஆம் ஆண்டில் இதை எழுதத் தொடங்கினார். அப்பொழுது பார்வை மங்க லாக இருந்தது. பின்பு பார்வை போய்விட்டது. இருப்பினும் எடுத்த வேலையை முடித்து விட்டார். அவர் எழுதியுள்ள நூல், அம்பேத்கரின் வாழ்க் கையை 1.577 சமஸ்கிருத சுலோகங்களில் கூறுகிறது.


அன்று அண்ணல் அம் பேத்கரை சமஸ்கிருதம் படிக் காமல் தடுத்தனர் பார்ப்பனர் கள்; இன்றோ அம்பேத்கர் அவர்களின் வரலாறோ சமஸ் கிருதத்தில் வெளிவந்துவிட்டது. வென்றார்


அண்ணல் அம்பேத்கர்!


 - மயிலாடன்


No comments:

Post a Comment