ஒற்றைப் பத்தி : களப்பிரர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 6, 2020

ஒற்றைப் பத்தி : களப்பிரர்!

களப்பிரர் காலத்தை இருண்ட காலம் என்று கதைப்பார்கள். அதற்கு முக்கியக் காரணம் உண்டு. அவர்கள் அந்தக் கால கட்டத்தில் ஆதிக்கம் கொண்டி ருந்த வைதீகத்தையும், வேதிய ஆதிக்கத்தையும் களப்பிரர் ஆட்சி எதிர்த்ததே இதற்குக் காரணம்.


இதுகுறித்து ‘‘தமிழகத்தில் வேதக் கல்வி வரலாறு'' எனும் நூலில் ஆய்வாளர் சி.இளங்கோ பின்வருமாறு குறிப்பிடுகிறார்.


‘‘களப்பிரருக்கும், பாண்டிய ருக்கும் நடைபெற்ற போரினைச் சமணத்திற்கும், வைதீகச் சமயத் திற்கும் ஏற்பட்ட போராகவே கருதலாம். கொல்லாமையும், தீங்கு செய்யாமையும் உயிர்க் கொள் கைகளாகக் கொண்ட சமணச் சமயத்தினர் வைதீகச் சமயத்தை ஆதரித்து, உயிர்ப் பலியிட்டு யாகங்கள் செய்ய உறுதுணை புரிந்த வேந்தனையும், சிற்றரசர் களையும் வெறுத்திருத்தல் வேண் டும். இந்நிலையில் சமணத்தின் உயர்ச்சியில், பாண்டிய நாட்டு குறுநில மன்னர் பலர் சமணச் சமய ஆதரவாளர்களாக மாறியி ருத்தல் கூடும். இத்தருணத்தில் பாண்டிய நாட்டில் பேரரசர் யாரு மில்லாத காரணத்தால் குறுநில மன்னர் பலர் தத்தமது அதிகா ரத்தை விரிவுப்படுத்தும் பொருட்டு போரிட்டுக் கொண்டனர். இவ் வாறு அரசியல் குழப்பம் மிகுந் திருந்த சமயத்தில் களப்பிரர் பாண் டிய நாட்டின்மீது படையெடுத்த னர். பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த சமணச் சார்புடைய குறுநில வேந்தரும், மக்களும் சமணச் சார்புடைய களப்பிரர் படையுடன் சேர்ந்து கொண்டு வைதீகச் சமயக் குறுநில மன்னர்களையும், தகுதி யற்ற பாண்டிய மரபினரான சிற் றரசர் பலரையும் வென்று களப் பிரர் ஆட்சி அமையத் துணைப் புரிந்திருத்தல் வேண்டுமென்று ஊகிக்கலாம். இதன் காரண மாகவே திரு. நீலகண்ட சாஸ்திரி யாரும் மத எதிர்ப்பின் காரண மாகவே களப்பிரர் அரசியல் புரட் சியை உருவாக்கினர் என்று கூறி யுள்ளார். எனவே, களப்பிரரின் வெற்றி சமய வெற்றியேயாகு மென்பதனை அறியலாம்.


வேதம், வேள்வி இவற்றுடன் தொடர்புடைய அந்தணரையும், வைதீகச் சமயத்தையும் களப்பிரர் வெறுத்தனர்; முன்னர், பிராமணர் களுக்கு அளிக்கப்பட்டிருந்த பிர மதேயங்களைக் கைப்பற்றினர். எனவேதான், பல்யாகசாலை முது குடுமிப் பெருவழுதியால் கொற் கைக்கிழான் நற்கொற்றன் என் பானுக்கு அளிக்கப்பட்ட ‘வேள் விக்குடி' என்னும் ஊரினைக் களப்பிர வேந்தன் கைப்பற்றிக் கொண்டான். வேத வேள்வியில் வெறுப்பு கொண்ட களப்பிரர் வேள்வி இயற்றியதற்காக அளிக் கப்பட்ட ஊரினைக் கைப்பற்றி யதில் வியப்பேதுமில்லை. கார ணம், அவர்கள் பின்பற்றிய சம ணச் சமயமே, வேள்வியினையும், வைதீகச் சமயத்தினையும் எதிர்த் துத் தோன்றியதுதானே! மதுரை மாநகரினை ஆண்டு வந்த களப் பிர வேந்தன்  சமண சமயத்தினைச் சார்ந்திருந்தானென்பதனைப் பின்வரும் கல்லாடச் செய்யுளும் நன்குணர்த்துகின்றது.


‘‘படைநான் குடன்று பஞ்சவன் துறந்து


மதுரை வவ்விய கருநடர் வேந்தன்


அருகர்ச் சார்ந்து நின்று''


                (கல்லாடம் 56)


களப்பிரர் காலத்தில் வைதீகச் சமயம், சைவம் ஆகியவை ஒடுக் கப்பட்டன. பவுத்தம் ஓரளவு ஆதரவு பெற்றிருந்தது. இருப் பினும், சமணமே அரசரின் ஆதரவு பெற்றுத் தலைசிறந்து விளங்கியது.''


இப்பொழுது புரிகிறதா? களப்பிரர் காலத்தை இருண்ட காலம் என்று பார்ப்பனர்கள் பரப்பியதற்கான காரணம்?


- மயிலாடன்


No comments:

Post a Comment