6 கோடி பேர் வறுமைக்கு ஆளாவர் உலக வங்கி எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 21, 2020

6 கோடி பேர் வறுமைக்கு ஆளாவர் உலக வங்கி எச்சரிக்கை!

வாசிங்டன், மே21, ‘கரோனா தாக்கத்தால், உலகளவில், ஆறு கோடி பேர் கடுமையான வறுமை நிலைக்கு தள்ளப் படுவர்’ என, உலக வங்கி எச் சரித்து உள்ளது. இது குறித்து, உலக வங்கி தலைவர் டேவிட் மால்பாஸ் கூறியதாவது:


கரோனா பரவல் கார ணமாக, உலகளவில், ஆறு கோடிக்கும் அதிகமானோர், கடுமையான வறுமை நிலைக்கு ஆளாவர். இது, வறுமையை ஒழிப்பதில், போராடி கிடைத்த முன்னேற்றத்தை வீணாக்கிவிட்டது.


இதையடுத்து, கரோனா தடுப்பு, சுகாதாரம், பொருளா தார வளர்ச்சி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக, உலக வங்கி, நிதியுதவி வழங்கி வருகிறது. இந்த வகையில், 100 வளரும் நாடுகளுக்கு, அடுத்த, 15 மாதங்களில், 12 லட்சம் கோடி ரூபாய் நிதி யுதவி வழங்கப்படும். இந் நாடுகளில், உலக மக்கள் தொகையில், 70 சதவீதம் பேர் வசிக்கின்றனர். மொத்த நிதி உதவியில், மூன்றில் ஒரு பங்கு, உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள, ஆப்கன், சாத், ஹைதி, நைஜர் உள் ளிட்ட நாடுகளுக்கு தரப் படும். வளரும் நாடுகள், மீண்டும்  வளர்ச்சிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்பது தான், உலக வங்கியின் முக்கிய நோக்கம்.


அத்துடன், ஏழைகளுக்கு ரொக்க உதவி, போதிய சுகா தார சேவைகள் கிடைப்பதை உறுதிப்படுத்துவது, தனியார் துறையை பாதிப்பில் இருந்து காப்பது, பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்பது உள்ளிட்டவற்றுக்கும், உலக வங்கி முக்கியத்துவம் அளிக் கிறது. உலக வங்கி திட்டத்தின் கீழ், வளரும் நாடுகளுக்கு உயிர் காக்கும் மருந் துகள், சுகாதார பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடைகள், மருத் துவக் கருவிகள் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இவ் வாறு, அவர் கூறினார்.


No comments:

Post a Comment