ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
6 மாதம் ஆகிறது புலம் பெயர்ந்த மக்களின் நிலை
September 23, 2020 • Viduthalai • தலையங்கம்

6 மாதம் ஆகிறது புலம் பெயர்ந்த மக்களின் நிலை?

ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து ஆறு மாதங்கள் ஓடிய பிறகும்கூட புலம்பெயர்ந்த மக்களின் நிலை மிகவும் பரிதாபமே!

முழு ஊரடங்கு காலத்தில் வெளிவந்த பல போலிச் செய்திகளினால் அச்சம் அடைந்த ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளியேறத் தொடங்கினர் . மேலும் மக்கள், குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இடம்பெயர இது வழிவகுத்தது, உணவு, குடிநீர், சுகாதார சேவைகள் மற்றும் தங்குமிடம் போன்ற அடிப்படைத் தேவைகள் போதுமான அளவில் கிடைக்குமா என்பது குறித்து கவலை அடைந்தனர். மத்திய அரசு இதை அறிந்திருந்தது , அதனால் தவிர்க்கமுடியாத ஊரடங்கு காலகட்டத்தில் எந்தவொரு குடிமகனும் உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை இழக்காமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கை களையும் எடுத்தது.

மேற்கண்ட கருத்தோடு, இந்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் நாடாளுமன்றத்தில் இரண்டு சொற்களில் குறிப்பிடப்படும் ஓர் அறிக்கையை வெளியிட்டார், பிரிவினைக்குப் பிறகு, இந்திய வரலாற்றில் மிகப்பெரிய மனித நெருக்கடி ஏன் ஏற்பட்டது , அதற்கு அவர் சொன்ன அந்த வார்த்தைகள் - போலிச் செய்திகள். புலம்பெயர்ந்த தொழிலா ளர்களின் இடம்பெயர்வுக்கு போலிச் செய்திகளை இந்திய அரசு குற்றம் சாட்டியது இது முதல் முறை அல்ல. ஊரடங்கு தொடங்கியதிலிருந்து, பல வாரங்கள் வரை உச்ச நீதிமன்றத்தில் இருந்து தொலைக்காட்சிகள் வரை புலம்பெயர்ந்த தொழிலா ளர்கள் இடம்பெயர்ந்ததற்கு, எதிர்க்கட்சிகள் மற்றும் போலிச் செய்திகளே காரணம் என்று மத்திய அரசு குற்றம் சாட்டியது. இத்தகைய சூழ்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சித்திரவதைக்கு போலிச் செய்திகள்தான் உண்மையில் காரணமா என்ற கேள்வி எழுகிறது.

மார்ச் 24, செவ்வாய்க்கிழமை, மாலை எட்டு மணிக்கு,  நரேந்திர மோடி, "நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும், முழுமையான லாக்டவுன் அமல்படுத்தப்படும். இந்தியாவை காப்பாற்ற, இந்தியா வின் ஒவ்வொரு குடிமகனையும் காப் பாற்ற, உங்களை காப்பாற்ற, உங்கள் குடும்பத்தை காப்பாற்ற, இன்று இரவு 12 மணி முதல், வீடுகளை விட்டு வெளியேறுவதற்கு முழு தடை உள்ளது," என்றார்

 "இந்த நேரத்தில் நீங்கள் நாட்டில் எங்கிருந்தாலும் அங்கேயே இருங்கள். தற்போதைய நிலைமையில் , நாட்டில் இந்த லாக் டவுன் 21 நாட்கள் இருக்கும். இது மூன்று வாரங்கள் இருக்கும். அதனால் வீட்டில் இருங்கள், வீட்டில் மட்டும் தங்கி இருங்கள்," என்றும் சொன்னார். ஆனால், பல மாடி கட்டடங் களை நிர்மாணிக்கும் கட்டுமானத் தொழிலாளிகள், குடிசை அல்லது நடை பாதைகளிலோ படுத்து உறங்கும் மக்கள் பற்றி அவர் எதுவும் கூறவில்லை. அந்த நேரத்தில், அடுத்த 21 நாட்களுக்கு சமூகத்தின் இந்தப் பிரிவு எவ்வாறு வாழப் போகிறது என்பதைப் பற்றி சிந்திப்பது, கரோனா தொற்றுநோய் பரவாமல் தடுக்க கவலைப்படுவதை விட முக்கியமானதாகத் தெரியவில்லை. பொதுவாக, ட்விட்டரில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் பிரதமர்  புலம்பெயர்ந்த தொழிலாளர் களுக்கு தனது அரசாங்கம் என்ன ஏற்பாடுகளை செய்யப் போகிறது என்பது குறித்து எதுவும் கூறாமல் இருந்தார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கவலைகள் குறித்து மத்திய அரசு எச்சரிக்கையாக இருந்ததாக மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் தனது அறிக் கையில் கூறியிருந்தார். ஆனால் மார்ச் 25 அன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அளித்த அறிக்கையை கேட்டால், மார்ச் 25 வரை கூட புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து, மத்திய அரசிடம் சொல்வதற்கு அதிகம் ஏதும் இருக்கவில்லை என்பதற்கான அறிகுறிகள் உள்ளன. முழு ஊரடங்கிற்கு பிறகு மார்ச் 25 அன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தினக்கூலி தொழிலாளர்கள் குடிபெயர்வதை தடுக்க அல்லது அவர் களுக்கு வசதி செய்து தருவ தற்கான எந்தவொரு அரசாங்கத் திட்டத்தையும் ஜவடேகர் குறிப்பிடவில்லை.

இந்த செய்தியாளர் கூட்டத்தில், டில்லி முதல் சூரத் வரை மற்றும் அனைத்து நகரங்களிலும், குடிபெயர்ந்த தொழிலாளர் கள் அவதிப்பட்டுக் கொண்டி ருக்கிறார்கள்,அவர்களை அனுப்ப அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுக்குமா என்று ஒரு பத்திரிகையாளர் அவரிடம் கேட்டார்.

இந்த கேள்விக்கு, ஜவடேகர், "இந்த நிலைமை குறித்து அரசு கண்காணித்து வருகிறது” என்றதோடு சரி!

பிபிசி பல்வேறு மட்டங்களிலிருந்து தரவுகளை சேகரித்து, மார்ச் 24 முதல் ஜூன் 1 வரை 304 பேர் இறந்துள்ளனர். இவர்களில் சோர்வு காரணமாக 33 பேர், ரயில் விபத்துக்களில் 23 பேர், பிற காரணங்களால் 14 பேர், தொழிலாளர் சிறப்பு ரயில்களில் 80 பேர் இறந்ததாக தெரிவித்துள்ளது.

6 மாதங்கள் ஓடி விட்டன. இன்னும் விடிவுதான் கிடைக்க வில்லை.