ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
6 மாதங்களாகப் பணத்தை எடுக்காவிட்டால் ஓய்வூதியத்துக்குத் தடையாம்
August 20, 2020 • Viduthalai • தமிழகம்

சென்னை,ஆக.20, ஆறு மாதங் களாக வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்காதவர்களின் ஓய்வூ தியத்தை நிறுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான கடிதத்தை கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் சி.சமயமூர்த்தி அனைத்து மண்டல இணை இயக்குநர்கள் மற்றும் கருவூல அலுவலர்களுக்கு அண்மை யில் அனுப்பியிருந்தார்.

ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களது வங்கிக் கணக்குகளில் ஓய்வூதியம் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த வங்கிக் கணக்கில் இருந்து கடந்த ஆறு மாதங்களாக பணப் பரிவர்த்தனைகள் நடைபெறா விட்டால், அதுகுறித்த தகவலை சம்பந்தப்பட்ட வங்கியானது, கரு வூலத் துறைக்குத் தெரிவிக்க வேண் டும். ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்வுச் சான்றிதழ் அளிக்கவோ அல்லது கணக்கு குறித்த விவரங் களை ஆய்வு செய்வதற்கு வசதி யாகவோ ஓய்வூதியம் வழங்குவது நிறுத்தப்பட வேண்டும்.

வாழ்வுச் சான்றிதழை சமர்ப் பிக்காவிட்டாலோ அல்லது கணக்கு குறித்த விவரங்கள் ஆய்வு செய்யப்படாவிட்டாலோ ஓய்வூ தியதாரர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திரும்பப் பெற வேண்டும். சேமிப்பு உள்ளிட்ட இதர அம்சங்களைத் தவிர்த்து, ஓய்வூதியத் தொகையை மட்டும் திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும். இது கருவூலத் துறையில் வரையறுக்கப்பட்ட விதியாகும்.

கருவூலத் துறை அலுவலகங்களில் நடத்திய ஆய்வுகளின் அடிப் படையில் கணக்காயத் தலைவர் தனது அறிக்கையில் சில அம்சங் களைச் சுட்டிக் காட்டி வருகிறார். அதன்படி, வாழ்வுச் சான்றிதழ் சமர்ப்பிப்பதில் தவறுதல் மற்றும் கணக்கு விவரங்கள் ஆய்வு போன்ற நடவடிக்கைக்காக ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்க வேண்டுமெனக் கூறியுள் ளார். மேலும், ஓய்வூதியதாரர், குடும்ப ஓய்வூதியதாரர் இறப்புக்குப் பிறகும், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் செலுத்தப்படுகிறது. இதனைத் தடுத்து, அந்தத் தொகையை அரசின் கணக்கில் வரவு வைக்க வேண்டுமென கணக் காயத் தலைவர்தனது அறிக்கை களில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த தகவல்களை, கருவூலத் துறை அலுவலகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் தங்களுக்குக் கீழுள்ள அலுவலகங்களில் பணி யாற்றும் அலுவலர்களுக்குத் தெரிவித்து உரிய நடவடிக்கைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும், கடந்த ஆறு மாதங்களாக ஓய்வூ தியத்தை எடுத்துப் பயன்படுத்தாத விவரங்களைச் சேகரித்து பட்டிய லிட வேண்டும்.

ஆறு மாதங்களாக வங்கிக் கணக்கில் இருந்து எடுத்து பயன் படுத்தாத ஓய்வூதியத் தொகையை மீளப்பெற்று அதனை வங்கிக் கணக்கில் சேர்க்க வேண்டும். இது தொடர்பான பணிகளை கருவூலத் துறையின் மண்டல இணை இயக் குநர்கள் உன்னிப்பாகக் கவனித்து அவ்வப்போது உரிய அறிவுறுத்தல் களை வழங்க வேண்டுமென தனது கடிதத்தில் சமயமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

கரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் வாழ்வுச் சான்றினை சமர்ப்பிக்கத் தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், வங்கி பற்று அட்டை இல்லாதோர், வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் வசிப்போர் வங்கிகளுக்குச் சென்று பணத்தை எடுப்பது இயலாத காரியம். மூத்த குடிமக்கள் பலரும் கரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாகவே வங்கிகளுக்குச் செல்லவில்லை. எனவே, இந்த பெருந் தொற்று காலத்தில் ஓய்வூதிய தாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர் களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டுமென ஓய்வூதியதாரரகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.