ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
2019_தேர்தல் வெற்றிக்கு சீனநிறுவனங்களுடன்தான் கைகோர்த்துச்செயல்பட்டுள்ளார் நரேந்திரமோடி
August 11, 2020 • Viduthalai • இந்தியா

அம்பலப்படுத்துகிறார்  தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் சாஹேத் கோகலே

புதுடில்லி, ஆக.11 கடந்த மக் களவைத் தேர்தலில், சீன நிறுவனங்களின் ஒத்துழைப் போடுதான் பாஜக தேர்த லைச் சந்தித்து வெற்றி பெற் றதாக, சமூக வலைதள மற் றும் தகவல் அறியும் உரி மைச் சட்ட ஆர்வலர் சாஹேத் கோகலே ஆதா ரங்களை வெளியிட்டுள் ளார்.

2019 தேர்தலின் போது ரூபாய் 325 கோடிக்கும் அதி கமான தொகையை தொலைக்காட்சி, பத்திரிகை கள், இணைய தளம் மற்றும் பிற வகைகளில் விளம்பரத் திற்காகச் செலவு செய்ததாக தேர்தல் ஆணையத்திடம் பாஜக கணக்குக் கொடுத் துள்ளது. அந்தச் செலவுக் கணக்குகளை அடிப்படை யாக வைத்தே சாஹேத் கோகலே குற்றச்சாட்டுக் களை எழுப்பியுள்ளார்.

இந்தியாவின் இறை யாண்மைக்கும், பாதுகாப் பிற்கும் பங்கம் விளைவிக்கும் விதமாகச்  செயல்படுகின்றன; இந்திய மக்களைப் பற்றிய தரவுகளை சீன ராணுவத் துடன் பகிர்கின்றன என்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத் தித்தான் அண்மையில் யுசி பிரவுசர், ஷேர் இட், டென்-செண்ட் ஆகிய சீன நிறு வனங்களின் செயலிகளுக்கு மோடி அரசு தடை விதித் தது.

ஆனால், அதே ஷேர் இட், யு.சி. பிரெவுசர், டென்-சென்ட் ஆகிய செயலி களைத் தான் தனது 2019 தேர்தல் பிரச்சாரத்திற்காக பாஜக ஒப்பந்தம் செய்திருந் தது. இதில், இணையதளம் வாயிலாக விளம்பரம் செய் வதற்கு சீனாவைச் சேர்ந்த ‘அலிபாபா’ நிறு வனத்திற்கு சொந்தமான யு.சி. பிரவுசர், காமா கானா, டென்செண்ட் ஆகிய நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் பணத் தையும் பாஜக அள்ளிக் கொடுத்துள்ளதாக சாஹேத் கோகலே தெரிவித் துள்ளார்.

அமெரிக்க அதிபர்  தேர் தலில் டிரம்ப் வெற்றி பெறு வதற்காகவே சீனாவுடன்  மோதல் போக்குக் கடை பிடிக்கப்படுவதாகவும், ஆனால், இதே சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள்தான் டிரம்பின் வெற்றிக்காக உழைத்து வருவதாகவும் அமெரிக்க அதிபருக்கு எதி ராக அந்நாட்டில் குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், டிரம்ப் பின் நண்பரான நரேந்திர மோடியும், 2019 தேர்தல் வெற்றிக்கு சீன நிறுவனங் களுடன்தான் கைகோர்த் துச்  செயல்பட்டுள்ளார் என்று சாஹேத் கோகலே கூறியுள்ளார்.