ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
1954ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் எச்சரித்தார்
August 14, 2020 • Viduthalai • தலையங்கம்

"என்ன தைரியம்? எங்கள் நாட்டில் பார்ப்பானுக்குச் சமமாக வாழ எங்களுக்குத் தகுதி இல்லை; திறமையில்லை என்கிறார்கள்! படிக்கவும் வசதி செய்து தர மாட்டேன் என்கிறார்கள்! பெரிய படிப்பு படிக்க வசதியில்லை - விட மாட்டேன் என்கிறார்கள். கொஞ்சம் மனிதனாகலாம் என்றாலும் அதற்கும் விடாமல் - 'கல்வித் திட்டம்' என்ற பேரால் அவனவன் ஜாதித் தொழிலுக்குப் போங்கள் என்று அதற்கும் வெடி வைக்கிறார்கள். அடக்குவது என்றால் இப்படியா? எதிரி என்றால் வாழவே கூடாது என்றா நினைப்பது? இதுதான் பெரிய பண்பு என்பதா? உள்ளபடி இந்தக் கல்வித் திட்ட எதிர்ப்பு என்பதை ஒரு அரசியல் போராட்டமாகக் கருதி இதை நாங்கள் எதிர்க்கவில்லை. இதைச் சமுதாயப் போராட்டமாக, இன வாழ்வுப் போராட்டமாகக் கருதியே எதிர்க்கி றோம். எங்கள் இனத்துக்கு - திராவிட இனத்துக்கு, இந்த இனத்தையே தீர்த்துக் கட்டுவதற்காக வைக்கப் படும் பெருத்த வெடிகுண்டு என்று கருதியே இக் கல்வித் திட்டத்தை எதிர்க்கிறோம். இந்த எதிர்ப்பை, போராட்டத்தை நாங்கள் எங்களுடைய ஜீவாதார மான, உயிர்நிலைப் போராட்டமாகக் கருதுகிறோம். உள்ளபடி ஆச்சாரியாருக்குச் சொல்ல விரும்புகிறேன். அவர் இந்தத் திட்டத்தை (குலக் கல்வி) மாற்றவில்லை யானால் நிச்சயமாக (அவர் பதவியை விட்டுப் போகிறாரோ, இல்லையோ அது வேறு விஷயம்) இது அவருடைய இனத்தின் அழிவுக்கே ஒரு காரணமாய் இருக்கப் போகிறது. சும்மா நான் Ôடூப்Õ விடவில்லை. இதை நன்றாக உணர்ந்து கொள்ளட்டும். திராவிட மக்கள் இன்னும் இந்தக் கொடுமைகளையும் அக்கிர மத்தையும் நிச்சயமாகச் சகித்துக் கொண்டிருக்க மாட் டார்கள். இனியும் அவர்களை அடக்கி வைத்திருப் பதும் தவறான காரியம், தற்கொலைக்கு ஒப்பான காரியம் என்றே சொல்லுவேன்"

- தந்தை பெரியார், (31.1.1954)

இன்றைக்கு 66 ஆண்டுகளுக்கு முன் - ஆச்சாரியார் குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தபோது தந்தை பெரியார் கூறிய அந்த எழுத் துக்கள் ஒவ்வொன்றும் இன்றைக்கும் நம் கண்களில் ஒத்திக் கொள்ளத்தக்கவை - அந்த உணர்வை மீண்டும் இந்தக் கால கட்டத்தில் பெற வேண்டியவை என்பதிலும் அய்யமுண்டோ!

அரைநேரம் படித்தால் போதும் - மீதி அரைநேரம் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்று அன்று ஆச்சாரியாரான ராஜாஜியால் கொண்டு வரப்பட்ட திட்டத்தைக்கூட - இப்பொழுது சொல்லுவதுபோலவே அப்பொழுதும் தொழிற்கல்வி என்றே கண்ணாடி விரியனைக் கண்ணாடி போட்டு மூடிச் சொன்னவர் கள்தாம் இதே பார்ப்பனர்கள்.

கல்வியாளர்கள் கேட்கிறார்களே - கிராமப் பகுதியில் எந்தத் தொழிற்சாலை இருக்கிறது-தொழி லைக் கற்றுக் கொள்வதற்கு?

சவரத் தொழிலும், சலவைத் தொழிலும், தச்சுத் தொழிலும், விவசாயமும், கொத்து வேலையும் அல்லாமல் வேறு அங்கு என்ன வாழ்கிறதாம்?

அதே நேரத்தில் பார்ப்பனர் வீட்டுப் பிள்ளைகளின் நிலை என்ன? அவர்களின் சமூக அந்தஸ்தும், கல்வி அந்தஸ்தும் என்ன? அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் தகப்பனார் செய்யும் மருத்துவக் கிளினிக்கிலும், வக்கீல் வீட்டுப் பிள்ளைகள் அவர் அலுவலகத்திலும் குலாவுவார்கள். கற்றுக் கொள்வார்கள். இதுதானே எதார்த்தனமான நிலை. இந்தக் குலத் தொழிலை ஒழித்துக் கட்ட, பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பு என்னும் உணர்வைத்தான் ஆயுதமாகக் கொள்ள வேண்டும் - இது வன்முறையல்ல - நன்முறையில் மக்களைப் பக்குவப்படுத்துவதே! 1954இல்  நாம் வெற்றி பெற்ற தைப் போலவே இப்பொழுதும் வெற்றி பெற்றிட இதுதான் நமது போர் முறை - நினைவிருக்கட்டும்!