ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
'துக்ளக்’-கிற்கு நமது பதில்கள் இங்கே!
August 22, 2020 • Viduthalai • மற்றவை

நமது கேள்விகளுக்கு பதில் எங்கே?

மின்சாரம்

இவ்வார துக்ளக்கில் (28.8.2020) திருவாளர் சாமிநாதன் குருமூர்த்தி அளித்த பதில்களுக்குப் பதிலடியும், கேள்விகளும் இங்கே!

கேள்வி: புலி, சிறுத்தை, கருப்பர் கூட்டம், காவிக்கூட்டம், கருப்பு - சிவப்புக் கூட்டம் இதில் நீங்கள் எந்தக் கூட்டம்?

துக்ளக் பதில்: புலி, சிறுத்தை,  கருப்பர் கூட்டம், கருப்பு - சிவப்புக் கூட்டங்கள் என்னைக் கண்டாலே ஓடும். கிரகஸ்தனான நான், காவிக் கூட்டத்துக்கு தகுதியில்லாதவன். எனவே, நான் எந்த கூட்டத்திலும் இல்லை.

நமது பதிலடி: உங்களைக் கண்டால் ஓட அவ்வளவு துர்நாற்றமோ! கிரகஸ்தன் என்பவன் காவிக் கூட்டத்துக்குத் தகுதியில்லாதவன் என்பதுதான் இவர் நிலையா?

அப்படியானால், காவிக் கூட்டத்தில் உள்ளவர்கள் எல்லாம் கிரகஸ்தர்கள் இல்லை என்று பொருளா? இதற்கு குருமூர்த்தி உத்தரவாதம் கொடுக்க முடியுமா? பூரி சங்கராச்சாரியாரே, சம்சாரம் சகிதமாக குழந்தைக் குட்டியுடன் குதூகலிக்கிறாரே-அது எப்படி?

கேள்வி: தமிழகத்தில் பரவலாக பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளை அவமதிக்கும் நிகழ்வுகள் நடந்து வருகின்றனவே?  இதனால் மக்களிடம் பா.ஜ.க. ஹிந்து மத, சங்பரிவார் அமைப்புகள்மீது இது தவறான அபிப்ராயத்தைத் தோற்றுவிக்க வழிவகை செய்வதாக அமைந்து விடாதா?

துக்ளக் பதில்: காவி பூசிய பழி யாருடையது,  அதன் பாவம் யாருடையது என்பதை விடுங்கள். தெருவுக்குத்தெரு இருக்கும் அந்தச் சிலைகளைச் சுற்றி செய்யப்படும் அசுத்தங்களைவிட, காவி பூசுவது அந்தச் சிலைகளுக்கு பெரும் அவமானம் இல்லை என்று தோன்றுகிறது.

நமது பதிலடி: தலைவர்களின் சிலைகள்மீது காவி பூசுவதை இதன் மூலம் இவர் ஆதரிக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும் - எத்தகைய ‘நாகரிகக் கொழுந்துகள்' இதுகள்! சிலைகளைச் சுற்றி அசுத்தங்கள் இருக்கிறதாம்! அதுதான் முக்கியமாம்.

இதற்குப் பெயர்தான் பார்ப்பன ‘சமத்து’ என்பது! இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அனுமதியின்றிக் கட்டப்பட்ட கோயில்கள் அதிகம்.  அந்த எண்ணிக்கை 77,450. இவை அகற்றப்பட வேண்டும். இதனைச் செய்யாத மாநில அரசின் தலைமைச் செயலாளர்கள் நேரில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் (14.9.2010) என்று உச்சநீதிமன்றம் கறாராக தீர்ப்பு அளித்ததே - உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணை மதிக்கப்பட்டதா?

இந்த 77,450 புறம்போக்குக் கோயில்களைச் சுற்றி, சுத்தம் அப்படியே ஜவ்வாதாக மணக்கிறதா? நடைபாதைக் கோயில்கள் சமூக விரோதிகளின் கூடாரமாக இருப்பது பற்றி ஜூனியர் விகடன் நீண்டதோர் கட்டுரையை ஆதாரப் பூர்வமாக வெளியிடவில்லையா? அதுகூட ஒருபுறம் இருக்கட்டும்; அதிகாரப் பூர்வமாகக் கட்டப்பட்ட கோயில்களின் யோக்கியதைதான் என்ன?

காஞ்சிபுரம் மச்சேந்திரநாதன் கோயில் கர்ப்பக்கிரகம், காமக் களியாட்ட விபச்சாரக் கூடமாக ஊர் சிரித்ததே! தேவநாதன் எனும் பார்ப்பான்,  பக்தைகளிடம் ஆடிய ஆட்டத்தை செல்போனில் படம் எடுத்து, அதைக் காட்டிக் காட்டி, மிரட்டி மிரட்டிப் பெண் பக்தர்களைச் சூறையாடிய கழிசடைத்தனம் சுத்தத்திலும் பரிசுத்தமோ!

குஜராத் மாநிலம், தபோவில் உள்ள சுவாமி நாராயணன் கோயில் வளாகக் குடியிருப்பில், அர்ச்சகப் பார்ப்பனர்கள் ஆடிய சல்லாபங்கள், அசல் ‘அக்மார்க்' சுத்தமோ?

இவை எல்லாம் கோயிலுக்கு அவமரியாதை இல்லை என்று அய்யர்வாள், அரட்டை அடித்தாலும் அடிப்பார்!  பூதேவர்கள் அல்லவா! புத்தி அப்படிதான் மேயப் போகும்!

கேள்வி: கந்தசஷ்டி கவசம் இப்போது பிரபலம் ஆகிவிட்டது குறித்து? (அதிகம் பேர் காலை வேளையில் கேட்பதாகக் கேள்வி).

துக்ளக் பதில்: தமிழகத்துக்குக் கருப்பு கலர் தந்த ஈ.வெ.ரா., பிள்ளையார் சிலையை உடைத்ததன் விளைவு, தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் பல்லாயிரம் பிள்ளையார் கோவில்கள் உருவாயின. கருப்பு உடை அணிந்த தி.க. அய்யப்பனை நிந்தனை செய்தது. விளைவு, அதே கருப்பு உடையுடன் ஒரு கோடி தமிழர்கள் சபரிமலை போகிறார்கள். (விபூதி, குங்குமத்தை வெறுத்த) கருப்புப் பாசறையின் முக்கிய பிம்பமான கருணாநிதி, கட்சியிலிருந்து எம்.ஜி.ஆரை நீக்க, அவர் அதிமுகவை உருவாக்கி அவர் மூகாம்பிகைக் கோவிலுக்குப் போகவே, தமிழகம் முழுவதும் நெத்தியில் திருநீறு, குங்குமம்; இப்போது கருப்பர் கூட்டம் கந்த சஷ்டி கவசத்தைக் கொச்சைப்படுத்த அது புயலாகி விட்டது. கருப்பிற்கு நல்ல கைராசி.

நமது பதிலடி: கருப்பைப் பற்றிப் பேசுகிறார் குருமூர்த்தி, பிறகு பிள்ளையாரைப் பற்றியும் எழுதுகிறார்.

ஆமாம் - பிள்ளையாரே பார்வதிதேவியின் அழுக்கிலிருந்துதான் பிறந்தான் என்கிறது புராணம். அந்த அழுக்கு கருப்பா? சிகப்பா?

சரி, பெரியார், பிள்ளையாரை உடைத்ததால் தான் பல்லாயிரம் பிள்ளையார் கோவில்கள் உருவாகின என்று தன் பூணூலை ஒரு முறை உருவி விட்டுக் கொண்டு புளகாங்கிதம் அடைகிறார் அய்யர்வாள்!

அப்படியென்றால், பெரியார், பிள்ளையாரை உடைத்ததை வரவேற்க வேண்டியதுதானே - ஏன் புலம்பல் - ஒப்பாரி?

ஏன், குருமூர்த்திக் கும்பல்கூட பிள்ளையார் பொம்மைகளை உடைக்கலாமே - மேலும் பல்லாயிரக்கணக்கில் பிள்ளையார் கோயில்கள் பெருகுமே - பார்ப்பனர்களுக்கு அர்ச்சகத் தொழிலும், கணஜோராக ஜாம் ஜாமென்று நடக்குமே- செய்வார்களா?

எம்.ஜி.ஆர். மூகாம்பிகை கோயிலுக்குப் போனதுபற்றி, பொங்கி மகிழ்கிறது மடி சஞ்சிக் கூட்டம்.

ஒரு விநாயக சதுர்த்தியன்று, தன் மனைவிக்கு வைத்தியம் பார்க்க முடியாத நிலையில், மரணம் அடைந்தபோது, சிவசேனை நிறுவனர் பால்தாக்கரே, தன் வீட்டிலிருந்த கடவுள் படங்களையெல்லாம் தூக்கிக் கடாசினாரே! அதற்கு என்ன பதில் பஞ்சகச்சங்களே?

கருப்புடையுடன் சபரிமலைக்குச் செல்லுவோர் அதிகரித்து விட்டனர் என்று கூறி, கருப்புச் சட்டையினரைக் கேலி செய்கிறார் கோயங்கா வீட்டுக் கணக்கப் பிள்ளை!

கருப்புதான் உங்களுக்கு வெறுப்பாயிற்றே - நியாயமாக அய்யப்பப் பக்தர்கள் கருப்பை அணியக் கூடாது என்று கூறிடத் தயாரா?

அய்யப்பன்கோயில் தலைமைக் கண்டகரு, விபச்சாரி வீட்டில் பிடிபடவில்லையா? கோயில் வளாகத்துக்குள் உள்ள அர்ச்சகர் குடித்து விட்டுப் போட்ட சாராய பாட்டில்கள் குவிந்து கிடந்தனவே ! அந்தச் செய்திகள் எல்லாம் இந்தப் பூதேவர்களின் கண்களுக்குப் புலப்படவே புலப்படாதா?

"திருப்பதி திருமலையில், 20 முதல் 25 செக்ஸ் மய்யங்கள் இயங்கி வருகின்றன. இதில் 400 விபசாரி அழகிகள் உள்ளனர். இங்கு எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த மே மாதம் திருப்பதியில் 7,604 ஆண்களிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவர்களில் 268 பேருக்கு எச்.அய்.வி. கிருமி தொற்றியிருப்பது தெரிய வந்துள்ளது” என்று செய்தி வெளியிட்டது ‘விடுதலை’ அல்ல - ‘தினத்தந்தி’ (21.6.2008, பக்கம் 17)

இதுதான் உங்கள் கோயில் சுத்தபத்தத்தின் சூப்பர்லேட்டிவ் டிகிரியா?

UP Temple Towns under  AIDS threat என்ற செய்தி வெளிவந்தது தி பயோனிர் இதழில் (21.7.1997) என்ன குருமூர்த்தியாரே - குஷி தானே!

சென்னையில் 12,13.6.1976 ஆகிய இரு நாள்களிலும், பாலியல் நோய் பற்றி ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. சென்னைப் பொது மருத்துவமனையின் பாலியல் நோய்த் துறை இயக்குநர் டாக்டர் சி.என். சவுமணி அக்கருத்தரங்கில் கூறியது என்ன?

“பக்தர்கள் அடிக்கடி கூடும் புண்ணிய ஸ்தலங்களில்தான் விபச்சாரம் பெரிய அளவில் நடக்கிறது. இந்தப் பகுதியில் உள்ள ஒரு விபச்சாரி மூலம், சராசரி மூன்று பேர்களுக்கு இந்த நோய் பரவுகிறது” என்று சொன்னாரே!

இந்த லட்சணத்தில் அரி - அரன் எனும் இரு ஆண் கடவுள்கள் கூடி அரிஹரனை (அய்யப்பனை) பெற்றதைப் பெருமையாகக் கூறலாமா குருமூர்த்தியாரே!

மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனியிலிருந்து 15 மைல் தொலைவில் கால பைரவர் கோயில் உள்ளது. அங்கு சாமிக்கு சாராய நைவேத்யம் செய்கின்றனர். பைரவர் வாயிலும் ஊற்றுகின்றனர். மீதியை பிரசாதமாகப் பக்தர்களுக்கு வழங்குகிறார்கள்.- ராணி இதழ் 1.2.2009

என்ன சவுண்டிகளே - சபாஷ்தானா? சுத்தத்தின் சூத்திரம் இதுதானா? கேள்விகள் இன்னும் உண்டு. முதலில் இவற்றிற்குப் பதில் சொல்லுங்கள், பார்க்கலாம்!