ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
“ஊசி மிளகாய்” - பா.ஜ.க.வில் ‘24 கேரட்’ தேச பக்தர்கள் இதோ!
September 1, 2020 • Viduthalai • இந்தியா

பா.ஜ.க. மாதிரி ஒரு தனித் தன்மையான கட்சி வேறு எங்கும் காணவே முடியாது என்று அந்த காவிக் கட்சித் தலைவர்கள் தங்கள் முதுகைத் தாங்களே தட்டிக் கொள்ளுவது உண்டு. அதன் முழுப் பொருளை - இதற்கு முன் பல மாற்றுக் கட்சியினர் கூறிய போதெல்லாம் புரிந்து கொள்ள மறுத்தவர்களுக்கு மிக அருமையான விளக்கம் போல் நேற்று தமிழ்நாட்டின் புதிய தலைவர் ‘முருகன்ஜி’ முன்னிலையில் நடந்தேறியுள்ளது!

நாளும் ஆள் பிடித்து கட்சியை வளர்க்கும் இந்த ‘மிஸ்டுகால் கட்சி’ என்ற பெயருள்ள கட்சிக்கு பலர் ஓடோடி வந்து, திடீர் தேச பக்தர்களாக, பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆட்சியின் அன்றாட சாதனைகளால் வெகுவாக கவரப்பட்டு, அக்கட்சியை தமிழ்நாட்டில் பலப்படுத்துவதுதான் ஒரே வழி, அதன் மூலம் அடுத்து வரும் தேர்தலில் அவர்கள் தயவில்லாமல் வேறு எக்கட்சியும் ஆட்சியை அமைக்கவே முடியாது என்று தோள் தட்டி துடை தட்டுகின்ற காட்சி ஒரு பக்கம், ஜெகஜோதியாக மிரட்டப்பட்டு தன் வசமாக்கப்பட்ட கார்ப்பரேட் முதலாளிகள் தொலைக்காட்சிகளில் ஒளி வீசும் காட்சிகளாகப் பரப்பப்பட்டு வருகிறது!

நாளும் புதுப்புது அறிஞர்கள், மேலோர் எல்லாம் பா.ஜ.க.வின் தாமரைத் தடாகத்தை நோக்கி வந்து குவிந்த வண்ணமே உள்ளனர் என்ற செய்திக்குப் பஞ்சமில்லை.

அப்படி ஒரு Classical நிகழ்ச்சி இதோ!

இங்கிலீஷ் ‘இந்து’ சென்னைப் பதிப்பு 6ஆம் பக்கம் (1.9.2020) செய்தி தனியே காண்க:

பா.ஜ.க.வில் சேர ஒரு Notorious Gangster பிரபல கொள்ளையர் - ரெட்ஹில்ஸ் சூரியா, முருகன்ஜி முன்னால் வந்து கட்சியில் சேர தனது சக சிறை தியாக சமேதரராக வந்தபோது, காவல்துறைக்குத் தகவல் தெரிந்து அந்த பெரிய மனுஷாளைத் தேடி அங்கே வந்து நிற்பதைப் பார்த்து ஓட்டம் பிடித்து விட்டாராம்! கொலை, கொள்ளை முதலிய - 50 கிரிமினல் வழக்குகள் இந்த பா.ஜ.க.வைப் பலப்படுத்த வந்த தேச பக்தர், ஹிந்து மகாராஷ்டிரக் காப்பாளராகிடத்துடித்த சூர்யாமீது உள்ளதாம்!

கத்தியுடன் வந்து நின்ற 6 பேர்களையும் கைது செய்துள்ளதாம் போலீஸ் - காரில் பறந்து விட்டார் இந்த கூட்டத்தின் தலைவன் சூர்யா.

இதே ‘இந்து’ செய்தியில், கடைசி வரியில் கொள்ளை யர்கள் கல்வெட்டு ரவி, சத்தியராஜ், முதலியவர்களும் பா.ஜ.க. கட்சியில் சேர்ந்ததாக காவல்துறையினர் தெரி வித்தனர்.

பா.ஜ.க. தமிழகத்தில் எப்படி நாளும் வளர்ந்து வருகிறது பார்த்தேளா?

பா.ஜக.வில் சேர்ந்தவுடன் பதவிகள் தரப்பட்டு, காவல் துறை பாதுகாப்புடன் பவனி வரும் தலைவர்களாகி தேச சஞ்சாரம் செய்து  வருவார்கள். 60 இடங்களுக்கு ரிசர்வ் செய்து விட்டார்களாம்!