ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
‘‘விளிம்பு நிலை மக்களின் விடிவெள்ளி தந்தை பெரியார்!''
September 19, 2020 • Viduthalai • கழகம்

பன்னாடுகளிலிருந்தும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக் குவியல்!

சென்னை, செப்.19 ‘‘விளிம்பு நிலை மக்களின் விடிவெள்ளி தந்தை பெரியார்'' பன்னாடுகளிலிருந்தும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக் குவியல்!

தந்தை பெரியார் அவர்களின் 142 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா முன்னெப்போதையும்விட வெகு விமரிசையாக இந்த ஆண்டு (செப்டம்பர் 17) கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு மட்டுமின்றி இந் தியத் துணைக் கண்டத்தின் பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வெகுசிறப்பாகக் கொண்டாடினர்.

தந்தை பெரியாரின் 142 ஆம் ஆண்டு பிறந்த நாளில் பிற மாநிலத்திலிருந்து, அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளின் தலைவர்கள் பலரும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியினை பதிவிட்டு, மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தங்களது வாழ்த்துச் செய்தியுடன், தந்தை பெரியாரின் கொள்கை சார்ந்த குறிப்புகளையும், அரிய பல ஒளிப்படங்களையும் இணைத்துப் பதிவிட்டுள்ளனர். தலைவர்கள் சிலர் தங்களது வாழ்த்துச் செய்திப் பதிவிற்கேற்ப தனியாக பெரியார் கருத்துப் படத்தையும் சேர்த்து பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஆண்டு பெரியார் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி எண்ணிக்கை கூடுதலாக டுவிட்டர் கோவை (hashtag)  வகையிலும் பதிவாகிப் பரவியது மிகுந்த சிறப்புக்குரியதாக இருந்தது.

இந்திய தேசிய காங்கிரசு

‘‘பெரியார், சுயமரியாதை இயக்கத்தை நிறுவியவர்; திராவிடர் இயக்கத்தின் தந்தை ஆவார். ஜாதிய பாகுபாடு, பாலியல் சமத்துவமின்மைக்கு எதிராக கடுமையாகப் போராடியவர். பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை உணர்வின் ஒளிவிளக்கு. சமுதாயத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு இன்றைய சூழலில் நடத்தப்படும் எண்ணிறந்த போராட்டங்களுக்கும் உந்து சக்தியாக திகழ்பவர் பெரியார். பிறந்த நாள் வாழ்த்துகள்.'' வாழ்த்துச் செய்தியுடன் தந்தை பெரியாரின் படத் துடன், அவரது கீழ்க்கண்ட பொன்மொழியும் பதி விடப்பட்டிருந்தது.

‘‘அடக்குமுறைக்கும், அடக்குமுறையாளர் களுக்கும் இடம் கொடுக்கும் வரையில், இன்னலும், இன்னலுக்கு ஆளாகும் மக்களும் இருப்பார்கள். வறுமையும்,  வறுமை சார்ந்த நோயும் இந்த நாட்டில் நிரந்தரமாகவே நீடிக்கும்.''

தந்தை பெரியாரின் இந்த பொன்மொழியை இந்திய தேசிய காங்கிரஸ் பதிவு செய்துள்ளது.

பிரகாஷ் அம்பேத்கர்

அண்ணல் அம்பேத்கரின் பெயரன் பிரகாஷ் அம்பேத்கரின் வாழ்த்துச் செய்தி வருமாறு:

‘‘பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் தலைசிறந்த பகுத்தறிவாளர். பார்ப்பனீயத்தால் கட்டமைக்கப்பட்ட ஜாதி முறையில் அடிமைகளாக இழிவுப்படுத்தப் பட்டோருக்கு சுயமரியாதை உணர்வினை ஊட்டி எழுச்சியூட்டியவர். பெண்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்ட போராளித் தலைவர். அனைவருக்கும் பெரியாரின் 142 ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துகள். பெரியாரின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் வல்லமையை இந்நாளில் பெறுவோம், வாழ்த்துகள்!''

சசிதரூர் எம்.பி.,

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சசிதரூர் பதிவிட்ட வாழ்த்துச் செய்தி வருமாறு:

‘‘சமூகநீதிக்காகப் பாடுபட்ட அந்த மாபெரும் தாடிக்காரப் பெரியவரைக் கொண்டாடிடுவோம்' எனும் வாசகம் பொறித்த பெரியார் படத்துடன் கூடிய கருத்துப் படத்தினை பதிவிட்டிருந்தார்.

சூரஜ்குமார் பவுத்

‘‘பெரியாரின் சுயமரியாதை இயக்கமானது ‘தீண்டத்தகாதார் எழுச்சியின்' அடையாளமாகும். பகுத்தறிவும், அறிவியல் அணுகுமுறையும் கொண்ட சமுதாயத்தைப் படைக்கப் பாடுபட்டார் பெரியார் அய்யா. இதயம் கனிந்த வணக்கங்கள்.''

ஹன்ஸ்ராஜ் மீனா

‘‘தங்களது இறுதி மூச்சு அடங்கும்வரை, சமுதாயத்தில் நிலவிவரும் சமூக சமத்துவமின்மையை எதிர்த்தும், சமூகநீதி கிடைத்திடவும் உறுதியாகப் பாடுபட்ட போராளித் தலைவர்கள் அம்பேத்கரும், பெரியாரும் ஆவர். 142 ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துகள்! (தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் அமர்ந்து உரையாடும் ஒளிப்படம் வாழ்த்துச் செய்தியில் பதிவிடப்பட்டு இருந்தது).

சுயம் சைனிக் தள் (இந்தியா)

‘‘மனிதரின் சுயமரியாதையை மதிக்காத போலித் தலைவர்கள் பெருகிவிட்ட தற்போதைய சூழலில் பெரியார் போற்றப்படும் போராளியாவார். வாழ்த் துகள்!''

பன்னாட்டு மனிதநேயர்கள் (ICYMI)

‘‘நேற்று (செப்டம்பர் 17) பெரியார் என்று அழைக்கப்படும்  வெங்கட்ட ராமசாமி அவர்களின் பிறந்த நாளாகும். பெரியார் சுயமரியாதை இயக்கத்தை நிறுவிய இந்திய மனிதநேயத் தலைவர், சமூக, அரசியல் செயல்பாட்டுத் தலைவர். ஜாதி முறையை எதிர்த்து கடும் பிரச்சாரம் செய்த தலைவர். மனிதநேயத்தையும், பகுத்தறிவையும் போற்றிக் கடைப்பிடிக்கச் செய்தவர். தந்தை பெரியாரின் கொள்கை சார்ந்த மரபு, தென் ஆசியா முழுவதிலும் ஒரு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது; வாழ்த்துகள்!''

திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ்

‘‘மானுட பித்தலாட்ட கற்பிதங்களின் மீது கல்லெறிந்ததற்காக உன் நினைவேந்துகிறேன்.''

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட

மாணவர் சங்கம்

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட மாணவர் சங்கம் சார்பில் @ணீவீஷீதீநீsணீ தந்தை பெரியார் படத்துடன் வாழ்த்துச் செய்தி பதிவிடப்பட்டு இருந்தது.

தந்தை பெரியாரின் 142 ஆம் ஆண்டு பிறந்த நாளில் அடியிற்கண்ட டுவிட்டர் கோவையில் (ஹேஸ் டேக்) பல செய்திகளும், பதிவிடப்பட்ட சுட்டுரைகளும் உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

# PeriyarForever

# HBDPeriyar142

#LandOfPeriyar

#PeriyarNightmare4Brahmanism

#பெரியார்142

#பெரியார்