ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
‘‘சமூகநீதி என்பது - சமூக விஞ்ஞானமே!''
August 23, 2020 • Viduthalai • கழகம்

காணொலியில் கழகத் தலைவர் -3

* கலி. பூங்குன்றன்

“மூன்று நூற்றாண்டுகளில் சமூகநீதி” எனும் தலைப்பில் மூன்றாம் சொற்பொழிவை திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேற்று (22.8.2020) மாலை 6.30 மணியளவில் நிகழ்த்தினார்.

(1) பார்ப்பனர்களுக்குப் பயன்படும் வரையில் பார்ப்பனர் ஆதிக்கக் காங்கிரசு பிரிட்டிஷாருக் குத் துதி பாடிய போக்கு - அதில் மாற்றம் வந்த நிலையில் எதிர்ப்புக் குரல் - சுயராஜ்யம் கோரல்.

(2) மகாத்மா ஜோதிபாபூலே மக்கள் மத்தியில் இந்த வேறுபாட்டைச் சுட்டிக் காட்டிய விவரம்.

(3) ஜாதியால் நசுக்கப்பட்ட மக்களின் உரிமை வாழ்வுக்குக் காங்கிரசு பாடுபடாதவரை - காங்கிரசு மக்களுக்கு வழிகாட்டும் அமைப்பாக இருக்க முடியாது.

(4) பார்ப்பனக் காங்கிரசைவிட பிரிட்டி ஷாரை நம்பலாம் என்ற ஜோதிபாபூலேயின் நிலைப்பாடு.

(5) மகாராட்டிரத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் எந்த அளவு இருந்தது - புரோகி தர்களைப் புறக்கணித்தாலும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய தட்சணையைக் கட்டாயம் பார்ப்பனரல்லாதார் கொடுக்க வேண்டும் என்ற நிலை.

(6) வங்காளம், சென்னை, மகாராட்டிரத்தில் எழுந்த பார்ப்பனர் எதிர்ப்பு உணர்ச்சி வரலாறு.

இவற்றை மய்யப்படுத்தி திராவிடர் கழகத் தலைவரின் உரை அமைந்திருந்தது.

(1) காங்கிரசு வெள்ளைக்கார அதிகாரியால் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் குறிப்பாக எட்டு ஆண்டுகள் பிரிட்டிஷ் அரசுக்கு நன்றி விசுவாசம் கூறும் தீர்மானம் தொடர்ந்து நிறை வேற்றப்பட்டது. காங்கிரசு மாநாடு நடந்தபோது வெள்ளைக்கார கவர்னர்கள் காங்கிரஸ் பிரமுகர்களுக்கு விருந்து அளிக்கும் அளவுக்கு வெள்ளைகாரர்களுக்கு-பிரிட்டிஷ் அரசுக்கு பார்ப்பன காங்கிரசு அவ்வளவு இணக்கமாகவும், நெருக்கமாகவும் இருந்தபோக்கு.

Ôநாங்கள் பிரிட்டிஷ் அரசிலிருந்து சுயராஜ் யம் கோரமாட்டோம்Õ என்று பாலகங்காதர திலகர் பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் கூறினார் என் பதிலிருந்தே இதனை நன்கு புரிந்துகொள்ளலாம்.

(2) ‘சத்திய சோதக் சமாஜ்’ மூலம் மக்கள் மத்தியில் இதனைக் கொண்டு சென்றார் ஜோதி பாபூலே. ஜாதியால் நசுக்கப்பட்ட மக்களுக்கான நல்வாழ்வுக்கும், உரிமைக்கும் காங்கிரசு பாடுபட முன்வராதவரை - காங்கிரசால் மக்களுக்கு வழிகாட்ட முடியாது. மக்கள் மத்தியில் நம்பிக் கையையும் பெற முடியாது - பார்ப்பன ஆதிக்கம் நிறைந்த காங்கிரசை நம்புவதைவிட பிரிட்டிஷ் ஆட்சியையே நம்பலாம் என்று ஜோதிபாபூலே எடுத்துரைத்தார்.

(3) மகாராட்டிரத்தில் எந்த அளவுக்குப் பார்ப்பன ஆதிபத்தியம், சனாதனம் வேர் பிடித்திருந்தது? தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்குப் பார்ப்பனப் புரோகிதர்களை அழைக்காதீர் என்ற ஜோதிபாபூலேவின் வேண்டுகோள் பெரும் செல்வாக்கைப் பெற்றது. ஆனாலும், தங்களை அழைக்காவிடினும், தங்களுக்குச் சேர வேண்டிய தட்சணைத் தொகை தந்தாக வேண்டும் என்கிற அளவுக்குப் பார்ப்பனத் திமிர் பிடித்த ஆதிக்கம் தலைதூக்கி நின்றது. விவசாயிகள் தங்களுடைய வருவாயில் 20 விழுக்காட்டை பார்ப்பனர்களுக்குக் கொட்டி யழ வேண்டும் என்ற நிலை.

தமிழ்நாட்டில் நமது அரசர்கள் வேதம் படித்த பார்ப்பனர்களுக்கு ‘பிரமதேயம்‘ என்ற பெயரால் இறையிலி கிராமங்களைத் தானமாக வார்க்கவில்லையா?

பார்ப்பனர்களின் இந்தப் புரோகித சுரண்டல் ஆந்திராவின் சித்தூர் பகுதிவரை பரவியிருந் தது. அதனை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்றதுண்டு. சித்தூர் வழக்கு என்பது புகழ் பெற்ற ஒன்று. மார்க்க சகாய ஆசாரி (இவர் களுக்கு விசுவ பிராமணர்கள் என்ற பெயருண்டு - பத்தர் ஆசாரி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்) அந்த வழக்கை நடத்தினர் என்பது வரலாறு.

(4) பார்ப்பனர்களின் ஆதிக்கப் போக்கை எதிர்க்கும் மனப்போக்கு மகாராட்டிரத்திலும், சென்னையிலும், வங்காளத்திலும் தலை தூக்கியது. வங்காளத்தில் முசுலீம்கள் மத்தியில் எதிர்ப்புக் குரல் புறப்பட்டது. சென்னையில் நீதிக்கட்சி தோன்றி பார்ப்பனர் அல்லாதார் மக்களின் கல்வி, உத்தியோக உரிமைக்குக் குரல் கொடுத்த நிலையில், பார்ப்பனர் அல்லாத மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டது. அந்த அமைப்பின் தலைவர்கள் வசதி வாய்ப்பு பெற்றவர்களாகவும், நிலச்சுவான்தார்களாகவும், கற்றவர்களாகவும் இருந்தனர்.

இந்த வரிசையில் மகாராட்டிரத்தில் உணர்வு பெற்றவர்கள் பெரும்பாலும் ஏழை, எளியவர் களாகவும் வாய்ப்பற்றவர்களாகவும் இருந்தனர். ஆனாலும் மக்கள் எழுச்சி தவிர்க்க முடியாத தாகி விட்டது.

(5) பிரிட்டிஷ் ஆட்சியின் போக்கிலும் சில மாறுதல்கள் ஏற்படத் தொடங்கின. 1927இல் மகாராட்டிர சட்டப் பேரவையில் 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யப்பட்டது.

டாக்டர் அம்பேத்கர் வரவேற்றுப் பேசினார்.

(இதே காலகட்டத்தில் சென்னை மாகாணத் திலும் சட்டமன்றத்தில் சமூகநீதி தொடர்பான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. 1922இல் முதல் ஆணை (ஆணை எண் 128 நாள் 15.8.1922) பிறப்பிக்கப்பட்டது. 1928இல் பிறப்பிக்கப்பட்ட ஆணை செயல்பாட்டுக்கு வந்தது. (ஆணை எண் 744 நாள் 13.9.1928).

கோலாப்பூரில் சாகு மகாராஜ் 1902ஆம் ஆண்டிலேயே சமூகப் புரட்சிக்கு வித்திட்டார். இடஒதுக்கீடு ஆணை பிறப்பித்தார். வெள் ளைக்காரக் கல்வித்துறை இயக்குநர் சாகு மகா ராஜின் கல்வித் தொண்டையும், மாணவர் களுக்காக விடுதிகள் திறக்கப்பட்டதையும் பாராட்டி கடிதம் எழுதும் அளவுக்கு மாற்றங்கள் தென்படத் தொடங்கின.

தமிழ்நாட்டில் ஈ.வெ.ராமசாமி, காமராஜ் போன்றவர்கள் காங்கிரசுக்குள் இருந்து கொண்டே பார்ப்பனர் அல்லாதார் உணர்ச்சி யுடன் கிளர்ந்து எழுந்தனர். இந்தத் தகவல் களையெல்லாம், அமெரிக்க மாதான கெயில் ஆம்வெட் தனது ஆய்வுப்பட்ட நூலில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1932ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி இங்கிலாந்து நாட்டுப் பிரதமர் ராம்சே மெக் டொனால்டு பிரிட்டிஷ் இந்திய சட்டமன்றத்தில் வகுப்புரிமை வழங்கிடும் ஆணையைப் பிறப்பித்தார்.

பிரிட்டிஷ் பிரதமரின் ஆணைப்படி இந்தியச் சட்டமன்றங்களில் மதம் மற்றும் வகுப்புவாரி அடிப்படையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டன. இதன் அடிப்படையில் மத்திய சட்ட மன்றத்தில் பட்டியலிடப்பட்ட ஜாதியினரான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங் கப்பட்டது.

(6) மகாத்மா ஜோதிபாபூலேயானாலும், தந்தை பெரியார் ஆனாலும்,  டாக்டர் அம் பேத்கரானாலும் காங்கிரசு என்ற பெயராலே பார்ப்பனர் ஆதிக்க நிலையைவிட பிரிட்டிஷ் ஆட்சி மேலானது என்ற கருத்தில் ஒருமித்த நிலையிலே இருந்தனர்.

காங்கிரஸ் பெயராலே பிரிட்டிஷ் ஆட்சியின் எல்லாப் பயன்களையும் அனுபவித்த பார்ப்ப னர்கள் பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தின் எழுச்சியைக் கண்டனர்.

(7) பார்ப்பனர் எதிர்ப்புணர்ச்சி ஒரு பக்கத் திலும், பிரிட்டிஷாரின் போக்கில் மாற்றம் இன்னொரு பக்கத்திலும் ஏற்பட்ட நிலையில், அதுவரை பிரிட்டிஷாரைத் தூக்கிப் பிடித்த Ôவிசுவாசக்காரக்Õ காங்கிரசு பார்ப்பனர்கள், பிரிட்டிஷாரின் விசுவாசிகள் என்றும், நாட்டைக் கட்டிக் கொடுப்பவர்கள் என்றும் பார்ப்பன எதிர்ப்புணர்வை தூக்கிப் பிடித்தவர்களைப் பார்த்து வசை பாட ஆரம்பித்தனர்.

(8) காங்கிரசின் நிர்மாண திட்டங்களால் வயப்பட்டு காங்கிரசில் சேர்ந்த தந்தை பெரியார் அவர்கள், காங்கிரசில் பார்ப்பனர்களுக்கு ஆதரவாகவே இருந்து வந்திருக்கின்றார்.

தந்தை பெரியார் காங்கிரசில் சேர்ந்து பணி யாற்றத் தொடங்கிய அந்தக் கால கட்டத்தில் சென்னை மாகாணத்தில் பார்ப்பனர் அல்லாதார் கட்சி பிட்டி தியாகராயர், டாக்டர் சி.நடேசனார், டாக்டர் டி.எம். நாயர் ஆகியோர் தலைமையில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. இவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் காங்கிரசில் இருந்த வர்கள்தாம். சென்னையில் நடைபெற்ற காங் கிரசு மாநாட்டுக்கு செயலாளராகவே இருந்துள் ளார் பிட்டி தியாகராயர். மாநாட்டுக்கு நன் கொடையாக அந்தக் காலத்திலேயே 200 ரூபாய் நன்கொடை வழங்கினார்.

டாக்டர் டி.எம். நாயரைக் கண்காணிக்க பிரிட்டிஷ் அரசு ஒரு சி.அய்.டி.யையே தனியாக அமைத்துக் கண்காணித்தது என்றால் எந்த அளவுக்குப் பிரிட்டிஷாருக்கு எதிராக இவர்கள் இருந்தனர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

நீதிக்கட்சி பார்ப்பனர் அல்லாதார் உணர்வுடன் மக்கள் செல்வாக்கைப் பெற்று செயல்பட்ட நிலையில் காங்கிரசும் பார்ப்பனர் அல்லாதாருக்குப் பாடுபடக் கூடிய கட்சிதான் என்று காட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. காங்கிரசில் உள்ள பார்ப்பனர்கள் என்ன செய்தார்கள்?

சென்னை மாகாண சங்கம் என்றும், தேசிய சங்கம் என்றும் இரண்டை உண்டாக்கினர்.

கேசவப்பிள்ளை தலைவராகவும், பெரியார் துணைத் தலைவராகவும் கூட இருந்திருக்கிறார். இரண்டு ஆண்டு மாநாடுகள் நடைபெற்றன. இரண்டாவது மாநாடு, ஈரோட்டில் பெரியார் முயற்சியால் சிறப்பாகவே நடைபெற்றது. மூன்று ஆண்டுகளுக்குமேல் தாக்குப் பிடிக்கவில்லை பார்ப்பனர்களால் ஆட்டுவிக்கப்பட்ட சங்கம் என்பதைப் புரிந்து கொண்டனர்.

தந்தை பெரியார் காங்கிரசில் இருந்து சென்னை மாகாண சங்கத்திலும், காங்கிரசு மாநாடுகளிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்மானங்களைத் தொடர்ந்து கொண்டு சென்றவண்ணமே இருந்தார்.

1924ஆம் ஆண்டில் திருவண்ணாமலையில் பெரியார் தலைமையிலேயே காங்கிரசு மாநாடு நடைபெற்றது.

அம்மாநாட்டில் தலைமை உரையில் பெரியார் ஆற்றிய உரை குறிப்பிடத்தக்கது.

“தென்னிந்தியாவில் ஹிந்து, முஸ்லிம் ஒற்றுமை குலையாதிருப்பினும், ஹிந்துக்களுக்குள் ஒற்றுமை குறைந்து வருவது உண்மை. முதலாவது பிராமணர் - பிராமணரல்லாதார் நிலையைச் சிறிது சிந்திப்போம்.

ஒரு மதத்தைச் சேர்ந்த இவர்களுக்குள் வேற்றுமையுணர்வு தோன்றுவானேன்? வேற்றுமைக்கு அடிப்படையான காரணங்கள் இருத்தல் வேண்டும். அக்காரணங்களை உணர்ந்து ஒற்றுமைக்கு உழைக்க தேச பக்தர்கள் முயல வேண்டும்.

காங்கிரசுவாதியாயிருந்த டாக்டர் நாயர் திடீரென ஒரு கட்சியைத் தோற்றுவிக்கக் காரணங்களாய் நின்றவை எவையோ, அவை இன்னும் நிற்கின்றனவா, இல்லையா? என்பதை நேயர்கள் கவனிப்பார்களாக. அக்காரணங்கள் அழிந்து விட்டதாக எனக்குத் தோன்றவில்லை. அவை தமிழ்நாட்டில் ஊர்ந்து கொண்டிருக்கும் வரை, தமிழ்நாட்டில் பிராமணர்- பிராமணரல்லாதார் ஒற்றுமை நிலவுவது அரிதே! தேச சேவையில் ஈடுபட்டுத் தமிழ்நாட்டுக் காங்கிரசில் காரியதரிசியாகவும், தலைவராகவும் இருந்து பெற்ற அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டே இங்கே பேசுகிறேன்” (‘நவசக்தி’, 1924 நவம்பர் 21) என்று தந்தை பெரியார் காங்கிரசில் இருந்து கொண்டே நேருக்கு நேர் வெளிப்படையாக முழங்கினார்.

காங்கிரசில் இருக்கும்போதே 1925இல் சேலம் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் தெரிவித்த கருத்தினை ‘இந்து’ ஆங்கில ஏடு தன் நூற்றாண்டு விழாவையொட்டி வெளியிட்ட தொகுப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:

While Speaking at a public meeting at salem E.V. Ramasamy naiker said that they must settle The Brahmin Question even while the British Supremacy lasted, otherwise they would have to suffer under the tyranny of what he called Brahminocracy

(A Hundred of the “Hindu’ page 337).

வெள்ளைக்காரர்கள் இங்கு இருக்கும்போதே நாட்டில் நிலவும் பார்ப்பன ஆதிக்கத் தொடர்பான பிரச்சினைக்கு ஒரு முடிவை ஏற்படுத்த வேண்டும்; இல்லையெனின் இங்கே ‘ஜனநாயகம்' (Democracy) இருக்காது. மாறாக “பிராமண நாயகம்'' (Brahmi nocracy) தான் இருக்கும் என்று தந்தை பெரியார் சொன்னதை திராவிடர் கழகத் தலைவர் மிகப்பொருத்தமாக எடுத்துக்காட்டினார்.

95 ஆண்டுகளுக்குமுன் தந்தை பெரியார் கூறினார் என்றால், இன்றைக்கும் அது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி திரு. அரிபரந்தாமன் அவர்கள் முகநூலில் (31.5.2019) பதிவு செய்த புள்ளி விவரம் ஒன்றே இங்கே போதுமானது.

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பிஜேபி அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 58 அமைச்சர்கள் யார் யார்?

உயர் ஜாதியினர் - 32

பிற்படுத்தப்பட்டோர் - 13

பட்டியல் இனத்தவர் - 6

பழங்குடியினர் -4

சீக்கியர் - 2

இஸ்லாமியர் - 1

மேலும் பல முக்கிய பார்ப்பன ஆதிக்க (Brahminocracy) தகவல் இதோ:

(2019 Economic Times  - மே 12-19)

1) பணக்காரர்கள்

பார்ப்பனர்கள் - 49.9%

பிற்படுத்தப்பட்டவர்கள் - 9.5.%

பட்டியல் இனத்தவர் - 9.5%

2) ஏழைகள்

பார்ப்பனர்கள் - 4.6%

பிற்படுத்தப்பட்டவர்கள் - 18.9%

பட்டியல் இனத்தவர் - 28.4.%

I. குடியரசுத் தலைவர்

அலுவலகச் செயலகத்தில் மொத்த இருக்கைகள் - 49

பார்ப்பனர்கள் - 39

ஓபிசி - 6

எஸ்.சி., எஸ்.டி., - 4

II. துணைக் குடியரசுத் தலைவர்

செயலகத்தில் பதவிகள் - 7

பார்ப்பனர்கள் - 7

எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி - இல்லை.

III. காபினெட்

செயலாளர்கள் - 20

பார்ப்பனர்கள் - 17

ஓபிசி - 2

எஸ்.சி. எஸ்.டி. - 1

IV. பிரதமர் அலுவலகம்

மொத்தம் பதவிகள் - 35

பார்ப்பனர்கள் - 31

ஓபிசி - 2

எஸ்.சி., எஸ்.டி., - 2

Vஷி. விவசாய திணைக்களம்

மொத்த இருக்கைகள் - 274

பார்ப்பனர்கள் - 259

ஓபிசி - 10

எஸ்.சி., எஸ்.டி. - 5

VI. பாதுகாப்பு அமைச்சகம்

மொத்தப் பதவிகள் - 1379

பார்ப்பனர்கள் - 1300

ஓபிசி - 31

எஸ்.சி., எஸ்.டி., - 48

VII. சமூக மற்றும் சுகாதார அமைச்சகம்

மொத்த இருக்கைகள் - 209

பார்ப்பனர்கள் - 132

ஓபிசி - 60

எஸ்.சி., எஸ்.டி., - 17

VIII. நிதி அமைச்சகம்

மொத்த இருக்கைகள் - 1008

பார்ப்பனர்கள் - 942

ஓபிசி - 46

எஸ்.சி., எஸ்.டி. - 20

IX. பிளானட் அமைச்சகம்

மொத்தம் பதவிகள் - 409

பார்ப்பனர்கள் - 327

ஓபிசி - 63

எஸ்.சி., எஸ்.டி. - 19

X. தொழில் அமைச்சகம்

மொத்த இருக்கைகள் - 74

பார்ப்பனர்கள் - 59

ஓபிசி - 9

எஸ்.சி., எஸ்.டி. - 4

XI. கெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோலியம் அமைச்சகம்

மொத்த இருக்கைகள் - 121

பார்ப்பனர்கள் - 99

ஓபிசி - 22

எஸ்.சி., எஸ்.டி., - பூஜ்ஜியம்

XII. ஆளுநர் மற்றும் துணை ஆளுநர்  - 27

பார்ப்பனர்கள் - 25

ஓபிசி - 2

எஸ்.சி., எஸ்.டி., - இல்லை

XIII.  தூதுவர்கள்

பதவிகள் - 140

பார்ப்பனர் - 140

ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி., - இல்லை

XIV. மத்திய பல்கலைக் கழகம்

துணைவேந்தர்கள் - 108

பார்ப்பனர்கள் - 100

ஓபிசி - 5

எஸ்.சி., எஸ்.டி. - 3

XV. மத்திய செயலாளர்கள் - 26

பார்ப்பனர்கள் - 18

ஓபிசி - 7

எஸ்.சி., எஸ்.டி. - 1

XVI.  உயர்நீதிமன்ற நீதிபதிகள் - 330

பார்ப்பனர்கள் - 306

ஓபிசி - 20

எஸ்.சி., எஸ்.டி - 4

XVII. உச்சநீதிமன்ற நீதிபதிகள் - 26

பார்ப்பனர்கள் - 23

ஓபிசி - 2

எஸ்.சி., எஸ்.டி. - 1

XVIII. அய்.ஏ.எஸ். அதிகாரிகள் - 3,600

பார்ப்பனர்கள் - 2,750

ஓபிசி - 350

எஸ்.சி., எஸ்.டி. - 300

Ref: டில்லியினை அடிப்படையாகக் கொண்ட ‘யங் இந்தியா’ எனப்படும் நிறுவனத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2018இல் கிடைத்த தகவல்.

மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் முகநூல் பதிவில்

மத்திய அரசு காபினட் அமைச்சர்கள் உட்பட பிரதமர் மற்றும் 58 அமைச்சர்கள்

அமைச்சர்கள்

உயர்ஜாதி - 32

பிற்படுத்தப்பட்டோர் - 13

பழங்குடியினர்- 4

பட்டியல் இனத்தோர் - 6

சீக்கியர் - 2,

இஸ்லாமியர் - 1 (மக்கள் தொகையில் இஸ்லாமியர் 14%)

 

முகநூலில் பதிவு  (31.5.2019 தேர்தல் முடிவடைந்த நிலையில் நீதிபதி பதிவிட்டது)

தந்தை பெரியார் 1925 இல் எச்சரித்த அந்த ‘பிராமினோகிரசி’ என்பது எத்தகைய தொலைநோக்கு!

அனைவருக்கும் அனைத்தும் - சமப் பகிர்வு என்பதுதானே இந்திய அரசமைப்புச் சட்டம் கூறும் ஜனநாயகமும், சோசலிசமும்! சிந்தியுங்கள். அடுத்து நான்காம் உரை 26.8.2020.

 

பிராமணர்களின் அதிகாரம் வளர்ச்சி

அடைந்ததற்கு முக்கிய காரணம்?

பிராமணர்களின் அதிகாரமும், செல்வாக்கும் அவர்களுக்கு மானியங்களாக வழங்கப்பட்ட நிலங்களிலிருந்துதான் உண்டாயின. படித்தவனாக இருந்தாலும் சரி, படிப்பு இல்லாதவனாக இருந்தாலும் சரி, பிறப்பின் காரணமாக பிராமணன் நில மானியம் பெறும் உரிமை பெற்று விடுகிறார். பிராமணன் விம்சதி என்ற ஒரு வரியை மக்கள் பிராமணருக்குச் செலுத்தவேண்டும் என்ற பழக்கமும் இடைக்காலத்தின் ஆரம்பத்தில் நிலவிற்று. இது இடைக்கால அய்ரோப்பாவில், தேவாலயங்கள் வசூலித்த வரியைப் போன்றதாகும். உற்பத்தி செய்யும் மக்கள் குருக்களை ஆதரிக்கவேண்டிய கடமையை ஏற்றனர் என்பது  இதிலிருந்து தெரிகிறது. இந்த வரி, உற்பத்தயில் இருபதில் ஒரு பங்கு என்று வரையறுக்கப்பட்டு அரசின் ஆதரவுடன் வசூலிக்கப் பெற்றது. ஆனால், பிராமணர்களின் அதிகாரம் வளர்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணம், அவர்கள் நில மானியம் பெற்றதே.

  1. கானே, தர்மசாஸ்திரத்தின் வரலாறு II, 117
  2. இந்தியன் ஆண்டிகுவரி, பம்பாய், VII, 75, 79, 85 எபிகிராபிகா இண்டிகா VIII, 20ஏ (கி.பி. 639-40) 20 பி (கி.பி.640-4).

பழங்கால இந்தியாவில் அரசியல் கொள்கைகள்

நிலையங்கள் சில தோற்றங்கள்

ஆர்.எஸ்.சர்மா