ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
‘‘ஊசி  மிளகாய்'' - ‘‘ஒண்ணுமே புரியல்லே! ஒண்ணுமே புரியல்லே!''
October 10, 2020 • Viduthalai • மற்றவை

இன்று வெளிவந்துள்ள 'தினத்தந்தி' நாளேட்டில் (10.10.2020, சென்னைப் பதிப்பு) 6 ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ள ஒரு செய்தி!

காதலனை மறக்க தியானம் செய்வதாக கூறி

சிறுமியிடம் சில்மிஷம் செய்த கோவில் அர்ச்சகர்

2 ஆண்டுகளுக்கு பிறகு கொடுத்த புகாரில்

போக்சோ சட்டத்தில் கைதானார்

பூந்தமல்லி, அக்.10  காதலனை மறக்க தியானம் செய்வதாக கூறி சிறுமியிடம்  செக்ஸ் சில்மிஷம் செய்த கோவில் அர்ச்சகர், 2 ஆண்டுகளுக்கு பிறகு கொடுத்த புகாரில் போக்சோ சட்டத்தில் கைதானார்.

சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்தவர் சந்திரமவுலி (வயது 50). இவர், அந்த பகுதியில் உள்ள  கோவில்களில் அர்ச்சகராக  பணிபுரிந்து வந்தார். இவர் மீது காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த 19  வயது இளம்பெண் ஒருவர் பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

2 ஆண்டுகளுக்கு முன்பு  நான் ஒருவரை காதலித்தேன். அந்த காதல் விவகாரம் எனது பெற்றோருக்கு தெரியாமல் இருக்கவும், எனது காதலனை நான் மறக்கவும் தியானம் செய்ய வேண்டும் என்று கோவில் அர்ச்சகர் சந்திரமவுலி கூறினார். அப்போது 17 வயது சிறுமியான என்னை அழைத்துச் சென்று தனி அறையில்  அடைத்து வைத்து தியானம் செய்தார்.

அப்போது நான் தியானம் செய்யும்போது எனது ஆடை களை களைந்து செக்ஸ் சில்மி ஷம் செய்தார். அதன்பிறகு என்னை பலமுறை மிரட்டி உல் லாசம் அனுபவித்தார். தற்போது  அது குறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

புகாரின் பேரில் பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் கோவில் அர்ச்சகர் சந்திரமவுலியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

- இதுதான் அந்தச் செய்தி!

50 வயது தாண்டிய அர்ச்சகர் சந்திரமவுலி- என்ன மாதிரி ‘‘பக்திப் பரவசத்தை'' பலமுறை நடத்தியுள்ளார் பார்த்தீர்களா?

19 வயது இளம்பெண் ஒருவரை எப்படி இந்த ‘பூதேவாள்' வன்கொடுமையில் ஈடுபட்டு கருவறை காமவேள் நடனசாலையாகப் பயன்படுத்தியுள்ளார் பார்த்தீர்களா?

மகாவெட்கக்கேடான இந்தக் குற்றவாளியைப்பற்றிய புகாரில் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்ய 2 ஆண்டுகள்!

என்னே நமது காவல்துறையின் சுறுசுறுப்புப் பார்த்தீர்களா?

கடலூரில் பெரியார் சிலைக்குக் காவலர்கள் மாலை போட்டால், தேசிய குற்றம்! அதைப் படம் எடுத்து  வெளியிட்டால் அது சர்வதேசிய குற்றம்!!

ஆனால், அவாள் - அதுவும் பகவத் கிருபையை பக்திமூலம் ‘டிஸ்ட்ரிபியூட்' செய்யும் பூசுரருக்கு என்றால் 2 ஆண்டுகளுக்குப் பிறகே கைது நடவடிக்கை!

நடப்பது மனுதர்ம ஆட்சியா?

அரசமைப்புச் சட்டப்படியான ஆட்சியா?

ஒண்ணுமே புரியல்லே! ஒண்ணுமே புரியல்லே!