ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
‘மனுநீதி வீழட்டும், சமூகநீதி வெல்லட்டும்’ என்ற முழக்கத்துடன் கொண்டாட தஞ்சை மண்டல கலந்துரையாடலில் முடிவு
August 25, 2020 • Viduthalai • கழகம்

பட்டி தொட்டி முதல், நகரங்கள் வரை தந்தை பெரியார் அவர்கள் 142ஆம் பிறந்த நாள் விழா

தஞ்சாவூர், ஆக. 25- தஞ்சாவூர் மண் டல கழகக் கலந்துரையாடல் கூட்டம் 23.8.2020 ஞாயிறுஅன்று காலை 10 மணி முதல் 12.30 வரை காணொலி மூலம் நடைபெற்றது. தஞ்சை மண் டலத் தலைவர் மு.அய்யனார்  தலை மையேற்று உரையாற்றினார்.

மண்டல செயலாளர் குடந்தை க.குருசாமி அனைவரையும் வர வேற்று உரையாற்றினார். கூட்டத் திற்கு கழக காப்பாளர்கள் இராஜகிரி கோ.தங்கராசு, நெய்வேலி வெ.ஜெய ராமன், தஞ்சை மாவட்டத் தலைவர்  வழக்குரைஞர் சி.அமர்சிங் மன்னார் குடி மாவட்டத் தலைவர்  ஆர்.பி .எஸ்சித்தார்த்தன், செயலாளர் வழக் குரைஞர் அருணகிரி, குடந்தை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி, செயலாளர் உள்ளிக்கடை துரைராசு, பட்டுக்கோட்டை மாவட் டத் தலைவர் அத்திவெட்டி பெ.வீரையன்,  செயலாளர் வை.சிதம்பரம், செயலாளர் கோ.கணேசன் ஆகி யோர் முன்னிலையேற்று உரையாற் றினார்கள்.

கழகப் பொதுச் செயலாளர்

இரா.ஜெயக்குமார்

கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் உரையில், மண்டல கழகத்தினுடைய கலந்துரையாடல் நோக்கம் பற்றியும், தந்தை பெரியார் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண் டாடுவது, கிராமம் முதல் நகரங்கள் வரை பெரியார் படங்கள், சுவரொட் டிகள், சுவர் எழுத்துகள், கழகக் கொடியேற்றுதல், எங்கு நோக்கினும் பெரியார், பெரியார் என்னும் முழக் கம் கேட்க வேண்டும். கழகத்தோழர் களிடம் கழகப் பொறுப்பாளர்கள் தொடர்போடு இருப்பது கரோனா காலத்தில் அவசியம் எனவும், கரோனா காலத்திலும் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்கள் ஓய்வின்றி இயங்குவதோடு, நம்மையும் இயங்கச் செய்துவருகிறார் என்றார்.

முனைவர் அதிரடி. அன்பழகன்

இறுதியாக கிராமபிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் சிறப்புரையாற் றினார்.

அவர் உரையில் குறிப்பிட்டதா வது: பி.ஜே.பி,ஆர்.எஸ்.எஸ், சங்பரி வார் அமைப்புகளின் மனு நீதி கொள் கைக்கு ஒரே மாற்று தந்தை பெரியா ரின் மனிதநேயம், சமூகநீதி, மானுடப் பற்று கொள்கைகளே, பெரியார்தான் வெல்வார், நூற்றாண்டுகள் பல கடந் தாலும் பெரியார்தான் பேசப்படுவார். மனித நேயத்திற்கு எதிரான மதவாதம் ஒருபோதும் வெல்லாது. தந்தை பெரியார் பிறந்த நாளை எழுச்சியோடு கொண்டாடுவோம் தந்தை பெரியார் காண விரும்பிய முழுமையான சமு தாயத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் வென்றெடுப்போம் என்றார்.

கலந்துகொண்டவர்கள்

கழக மாநில அமைப்பாளர் உரத்த நாடு இரா. குணசேகரன், பகுத்தறி வாளர் கழக மாநிலத் தலைவர் கல்வி யாளர் மா.அழகிரிசாமி, துணைத் தலைவர் கோபு. பழனிவேல், பகுத் தறிவு ஆசிரியரணி மாநில அமைப் பாளர் இரமேஷ், மாணவர்கழக மாநில அமைப்பாளர் செந்தூர்பாண் டியன், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் வெற்றிக்குமார் மற்றும் குடந்தை நகரத் தலைவர் கவுதமன், திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியச்  செயலாளர் முருகானந்தம், தெற்கு செயலாளர் குமாரமங்கலம் சங்கர், குடந்தை மாவட்ட மகளிர் பாசறை பொறுப்பாளர் ராணிகுருசாமி, தஞ்சை மாவட்ட இணைச்செயலாளர் ஞானசிகாமணி, மன்னை மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ்.அன்பழகன், மன்னை மாவட்ட பகுத்தறிவு ஆசிரி யரணி அமைப்பாளர் கோபால், மன்னை வணங்காமுடி, தஞ்சை மாவட்ட கலை இலக்கிய அணி அமைப்பாளர் நாராயணசாமி, பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் வீரமணி, தஞ்சை மாவட்டத் துணைத் தலைவர் சந்துரு, உரத்தநாடு உத்தி ராபதி, பொதுக்குழு உறுப்பினர்  பள் ளத்தூர் நல்லதம்பி, பகுத்தறிவாளர் கழக மன்னை நகரத் தலைவர் கோவி.அழகிரி, பட்டுக்கோட்டை நகரத் தலைவர் சிற்பி சேகர், தஞ்சை மாநக ரத் தலைவர் நரேந்திரன், செயலாளர் முருகேசன், குடந்தை மாவட்ட அமைப்பாளர் அழகுவேல், வலங்கை மான் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ரமேஷ், பூதலூர் ஒன்றியத் தலைவர் அல்லூர் பாலு, செயலாளர் புகழேந்தி, பட்டுக்கோட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரத்தினசபாபதி, திருவிடைமருதூர் ஒன்றிய துணைச் செயலாளர் குணா, தஞ்சை மாவட்ட தொழிற்சங்க அணி அமைப்பாளர் ஏகாம்பரம், பிள்ளை யார்பட்டி முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி நீலகண்டன், மண்டல மகளிரணிச் செயலாளர் கலைச்செல்விஅமர்சிங், பாக்கியம் தஞ்சை மாவட்ட இளைஞரணி செய லாளர் வெங்கடேசன், மதுக்கூர் இராதாகிருஷ்ணன், ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் லெட்சுமணன், நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளர் சக்திவேல், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு இராம லிங்கம், மன்னை மாவட்டத் துணை செயலாளர் புஷ்பநாதன், தஞ்சை மாநகர அமைப்பாளர் தமிழ்ச்செல் வன், மன்னை நகரச் செயலாளர் இராமதாஸ், குடந்தை மாவட்ட இளைஞரணித் தலைவர் க.சிவக் குமார், பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் தொழிற்சங்க அணி அமைப்பாளர் முத்து துரைராஜன், ஆசிரியர் சாமிநாதன், ரெங்கசாமி, வேலூர் மண்டலத் தலைவர் சட கோபன், சோழிங்கநல்லூர் மாவட் டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன், மன்னை மாவட்ட பகுத்தறிவு ஆசிரிய ரணித் தலைவர் நீடாமங்கலம் தங்க.வீரமணி, மன்னை மாவட்ட பகுத்தறி வாளர் கழகச் செயலாளர் கல்யாண சுந்தரம், மன்னை இளைஞரணித் தலைவர் மணிகண்டன், திருவையாறு ஒன்றியத் தலைவர் கண்ணன், செய லாளர் ஸ்டாலின், வீதி நாடக மாநில அமைப்பாளர் பெரியார்நேசன், தலைமைக்கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

தீர்மானம் 1.

இரங்கல் தீர்மானம்.

பெரியார் பல்கலைக்கழக இணை வேந்தர் வரியியல் அறிஞர் இராச ரத்தினம், தஞ்சை மாவட்டம் திருவை யாறு ஒன்றியம் திருப்பழனம் பெரி யார் பெருந்தொண்டர் கலியபெரு மாள், தஞ்சை புலவர் அமர்சிங் இணையர் கவுரி அம்மையார், பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் நெடுவாக்கோட்டை அய்யாதுரை அவர்களது சகோதரர், உரத்தநாடு அகிலன் மளிகை கடை உரிமையாளர் லிட்டில்ரோஸ் பள்ளி தாளாளர் கு.வீரமணி, திருச்சி இனம்பூண்டி பாரதி அவர்களின் தாயார் மலர் கொடி, பட்டுக்கோட்டை மாவட்டம் பேராவூரணி சந்திரமோகன் அவர்க ளின் தந்தையார் சின்னையா, பெரி யார் பெருந்தொண்டர் பட்டுக் கோட்டை நாகராஜன், மன்னார்குடி கழக மாவட்டம் விக்கிரபாண்டியம் கணேசன், கும்பகோணம் கழக மாவட்டம் திருநாகேசுரம் தி.க.விஜய குமார் அவர்களது தாயார் க.கோவிந் தம்மாள், பாபநாசம் நகர அமைப்பா ளர் கே.கருணாகரன், மன்னார்குடி ஒன்றியம் உள்ளிக்கோட்டை கிளைக் கழக தலைவர் கே. ராஜேந்திரன் விஏஓ ஓய்வு ஆகியோர் மறைவிற்கு தஞ்சை மண்டல திராவிடர் கழகத் தின் சார்பில் வீரவணக்கத்தை தெரிவிப்பதுடன் இவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கி றோம்.

தீர்மானம் 2

விடுதலையை பரப்புவோம்.

சமூக நீதிக்கு ஏற்படும் ஆபத்துகள் மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்குகள் ஆகியவைகளை கண்டித்தும் மத்திய மாநில அரசுக ளுக்கு வழிகாட்டிடும் நிலையிலிருந்து சங்கநாதம்புரிந்துவரும் விடுதலை நாளிதழை றிஞிதி ல் பல லட்சம் நபர்களி டம் சேர்க்கும் பணியில் அனைத்து தோழர்களும் ஈடுபட இக்கலந்துரை யாடல் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 3

தலைமைசெயற்குழு தீர்மானங்களை செயல்படுத்துவது.

1.8.20 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர் களுடைய தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழு மற்றும் மாவட்டத்தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது எனதீர்மானிக்கப் படுகிறது.

தீர்மானம் 4

தந்தை பெரியார் 142 வது பிறந்தநாள் விழா!

அறிவுலக ஆசான் தந்தை  பெரியார் அவர்களின் 142ஆவது பிறந்த நாள் விழாவினை வரும் செப்டம்பர் 17 அன்று திராவிடர்களின் தேசிய விழாவாக மிக எழுச்சிமிக்க வகையில்

தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஊர்தோறும் இல்லங் கள்தோறும் பெரியார் படம் வைத்து மாலை அணிவித்து கழக கொடிகளை ஏற்றுவது என்றும் பெரியார் படங் கள் தாங்கிய வண்ண சுவரொட்டி களை அச்சடித்து ஊர்தோறும் ஒட் டுவது என்றும் சுவர் எழுத்து விளம் பரங்கள் செய்தும் இனிப்புகள் வழங் கியும் எழுச்சிமிக்க செயல்பாடுகளு டன் மிகச்சிறந்த முறையில் கொண் டாடுவது எனவும் முடிவு செய்யப் படுகிறது

தீர்மானம் :

புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையான புதிய குலக்கல்வித்திட்டத்தை முற்றிலுமாக புறக்கணித்திடுமாறு தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது. தாழ்த் தப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஒடுக் கப்பட்ட கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை இரத்து செய் திடுமாறு மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது. இறுதியாக பட்டு கோட்டை மாவட்ட அமைப்பாளர் சோம.நீல கண்டன் நன்றி கூறினார்