ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
‘புனித’ங்களை உடைத்து மனிதர்களுக்காக எழுதியவர்கள் திராவிட இயக்க எழுத்தாளர்கள்
August 21, 2020 • Viduthalai • கழகம்

திராவிடர் கழக இளைஞரணி காணொலிக் கூட்டத்தில் எழுத்தாளர் இமையம் பெருமிதம்

விருத்தாசலம், ஆக. 21- திராவிடர் கழக இளைஞரணி சார்பில் "திராவிட இயக்க எழுத்தாளர்களின் இலக்கியப் பங்களிப்பு" எனும் தலைப்பில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி காணொலி வழி சிறப்பு சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் வடசென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் வரவேற்புரையாற்றினார். விழுப்புரம் மண்டல  இளைஞரணிச் செயலாளர் தா.இளம் பரிதி தலைமை வகித்தார்.கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். பொதுக் குழு உறுப்பினர் நம்பியூர் மு.சென்னியப்பன்  தொடக்க உரையாற்றினார். மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன் இணைப்புரை வழங்கினார்.

‘திராவிட இயக்க எழுத்தாளர்களின் இலக்கியப் பங்களிப்பு’ எனும் தலைப்பில் எழுத்தாளர் இமையம் சிறப்புரையாற்றினார்.

அவர் உரையில் குறிப்பிட்டதாவது, "பார்ப்ப னர்கள் அல்லது அவர்கள் சார்ந்த குழு" இவர்கள் தான் இங்கே நவீன இலக்கியவாதிகள்! புரியாமல் எழுதுவதும், ஒரு செய்தியை நேரடியாக எழுதாமல் சுற்றி வளைத்துச் சொல்வதும்தான் இலக்கியம். மரம் என்று சொல்லக்கூடாது. விருட்சம் என்று எழுத வேண்டும். பிரக்ஞை, சிருஷை போன்ற புரியாத சொற்களைப் பயன்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட வழக்கொழிந்த தேய்ந்துபோன எழுத்துகள்தான் இங்கே இலக்கியமாகக் கருதப் படுகின்றன. அவர்கள் சொல்லும் இதிகாச, வேத, புராண மரபுகளைப் புறம் தள்ளி புதிய தமிழ்மரபை உருவாக்கியவர்கள் திராவிட இயக்க எழுத்தாளர் கள். அந்த மரபு அறிவு மரபாக, அறிவியல் மரபாக, அறிவியல் சிந்தனை மரபாக, சமூக அறிவு மரபாக, சமூக நீதி மரபாக, சமூக அரசியல் மரபாக இருந்தது. அதை எப்படி அவர்களால் ஏற்க முடியும்? சொர்க்க லோகம், நரக லோகம், முற்பிறப்பு, அடுத்த பிறப்பு, கர்மா, ஆன்மா, தோஷம், ஏழரை நாட்டு சனி, பேய், பிசாசு, பில்லி சூன்யம், ஜோதிடம் போன்ற மூட நம்பிக்கைகளை திராவிட இயக்க எழுத்தாளர்கள் எழுதவில்லை. எனவே நவீன இலக்கியவாதிகள் என்று சொல்லிக்கொண்ட பார்ப்பன சமூகம் அதை இலக்கியமாக ஏற்க மறுத்தது. தமிழ் இலக்கிய மரபு என்னை இழிவு படுத்துவதாக, அவமானப்படுத்துவதாக, என்னுடைய மொழியை, பண்பாட்டை, கலாச்சாரத்தை இழிவுபடுத்துவதாக இருந்ததை நாம் எப்படி நவீன இலக்கியம், மரபு இலக்கியம் என்று ஏற்றுக்கொள்ள முடியும்? இந்த மரபை எப்படி மீறாமல் இருக்க முடியும்? அவர்கள் சொன்ன இலக்கியம் ஜாதியை, மதத்தை, ஆண் டான் அடிமை முறையை காப்பாற்றியது. "பழைய காலம் போன்று இப்போது ஊர் இல்லை!" என் கிறார்கள். கிராமத்தில் அப்போது பண்ணை வேலை செய்தார்கள். அடிமைகள் இருந்தார்கள். இப்போது இளைஞர்கள் படிக்கிறார்கள். வேலைக்குப் போகிறார்கள். சட்டம் பேசுகிறார்கள். அதனால் ‘புனிதம்’ கெட்டுவிட்டது என்கிறார்கள். இந்த 'புனித'த்தைப் பற்றிப் பேசும்போது அவர் களுக்குள் இருக்கும் ஜாதி வன்மம் தெரிகிறது. அவர்களுக்குள் ஒரு ஆதிக்க வெறி இருப்பது வெளிப்படுகிறது. அந்த ஆதிக்க உணர்வுதான் அந்த இலக்கியத்திலும் இருக்கிறது.

ஜாதிப் பெருமையும், ஆண்டான் அடிமையும் பேசிய அந்த இலக்கிய மரபை நாம் எப்படி ஏற்க முடியும்? அதனால்தான் அதை மீறுகிறோம். அதற்கு மாறாக சமூகத்தை மேம்படுத்த, உயர்த்த திராவிட இயக்க எழுத்தாளர்கள் எழுதத் தொடங் கினார்கள். அந்த இலக்கியம் நம்மை யோசிக்க வைத்தது. பெரியார் மொழியில் எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேட்க வைத்தது. நமது இலக்கியத்தில் மறுமலர்ச்சியும், புத்துணர்ச்சியும் ஏற்பட்டது. பெரியார் 200க்கு மேற்பட்ட நூல் களை எழுதியிருக்கிறார். அவருக்கு ஈடாக தமிழில் ஒருவரும் இல்லை. அவர் எழுதிய "பெண் ஏன் அடிமையானாள்?" புத்தகத்திற்கு ஈடு இணையே இல்லை! ஆசிரியர் கி.வீரமணி 100-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். நமது எழுத்துக்கு இலக்கிய அங்கீகாரம் கொடுக்க இவர்கள் யார்? இந்த 'அங்கீகார' தேடல் என்பதே இழிவானது! இவ்வாறு எழுத்தாளர் இமையம் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி மாநில இளைஞர ணித் தலைவர் ராசா, சென்னை மண்டல இளைஞ ரணி அமைப்பாளர் சோ.சுரேஷ், கோவை மண்டல இளைஞரணிச் செயலாளர் வழக்குரைஞர் பிர பாகரன், திருச்சி மண்டல இளைஞரணிச் செயலா ளர் அன்பு ராஜா, மதுரை மண்டல இளைஞரணிச் செயலாளர் அழகர்,  தென்சென்னை மாவட்ட இளைஞரணிச் செயலாளர் மணிதுரை, சோழங்க நல்லூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் நித்தி யானந்தம், ஈரோடு மண்டல இளைஞரணிச் செய லாளர் ஜெபராஜ் செல்லதுரை,  திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேக ரன், கழகத் துணைப் பொதுச்செயலாளர் ச.இன் பக்கனி, புதுவை மாநிலத் தலைவர் சிவ.வீரமணி, மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ் ,விருத்தாசலம் மாவட்டச் செயலாளர் ப.வெற்றிச்செல்வன், விருத்தாசலம் மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ராமராஜ், தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், தஞ்சை மாநகர இளைஞரணி அமைப்பாளர் பெரியார் செல்வம், கடலூர் மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் ரமாபிரபா ஜோசப், மத் தூர் அரங்க.ரவி, கோவை குணசேகரன், பிரான்ஸ் ரமேஷ், மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் சே.மெ.மதிவதனி, தருமபுரி மண்டல இளைஞரணிச் செயலாளர் ஆறுமுகம், நீடாமங்கலம் ரமேஷ், கடலூர் மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல், அள்ளூர் பாலு, ராஜமாணிக்கம், துரைராஜன்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிறைவாக அரியலூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் சு.அறிவன் நன்றி கூறினார்.