ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
‘குருமூர்த்தி புரூடா!'
September 6, 2020 • Viduthalai • மற்றவை

கேள்வி: 'இல்லறம்  அல்லது நல்லறம் அன்று' என்று அறநூல்கள் கூறும்போது, காஞ்சி பெரியவர் போன்றவர்கள் ஏன் துறவறம் மேற்கொண்டனர்?

பதில்: ஆசைகள் இருப்பவர்களுக்கு அதை அனுபவிக்க நியமம் விதிக்கிற நல்லறமான இல்லறம் அவசியம். அந்த ஆசைகளை அறுத்த ரமண மகரிஷி, காஞ்சி மஹான் போன்றவர்களுக்கு நியமமே ஆசையற்று இருப்பதுதான். ஆசையுள்ளவர்களுக்கான இல்லறம், ஆசையற்ற அவர் களுக்கு ஒவ்வாது. இல்லறத்தை ஏற்ற பிறகும், துறவியாக வாழ்ந்த ராமகிருஷ்ண பரமஹம்ஸர் இல்லறமும், துறவறமும் ஒன்றுடன் ஒன்று ஒவ்வாது என்பதை உலகுக்கு காட்டியவர்.

- 'துக்ளக்', 9.9.2020, பக்கம் 24

கம்யூனல் ஜி.ஓ. விஷயத்தில் பிராமணர்களுக்காக நான் கம்யூனலாகவே சொல்கிறேன் என்று 'தெய்வத்தின் குரல்' (காஞ்சி பெரியவாள்தான் சொன்னது) பேசுகிறதே - இதுதான் பற்றற்றவர் என்பதற்கு அடையாளமா? காஞ்சி மடத்தில் கன்னிகாதான டிரஸ்ட், பிராமண பெண்களுக்காக என்று தெய்வத்தின் குரல் பேசுகிறதே - இதுவும் பற்றறுத்த ஏகாந்த நிலைதானா?

சரி, அந்தப் பெரிய மனுஷனை விட்டுத் தள்ளுங்கள். 'அனுராதா ரமணன் புகழ்' ஜெயேந்திர சரஸ்வதியும் ஆசைகள் அறுத்த நியமத்துக்குச் சொந்தக்காரர்தானா?

ரமணரிஷியைப்பற்றியும் சிலாகித்து உள்ளதே 'துக்ளக்' - தனது மரணத்துக்குப் பின் சொத்துக்களையெல்லாம் தன் அண்ணன் மகனுக்கு எழுதி வைத்த பேர்வழியாயிற்றே - நீதிமன்றத்தில் இது தொடர்பாக - சந்நியாசிக்கு சொத்து எதற்கு என்று கேட்டபோது, 'யார் சொன்னது? நான் சந்நியாசமே வாங்கவில்லை' என்று சொன்னவராயிற்றே அந்த மகரிஷி - அடேயப்பா குருமூர்த்தியின் புரூடாவுக்கு ஓர் அளவேயில்லையா?

'குரூமூர்த்தி புரூடா' என்ற ஒன்றை காயின் பண்ணலாமோ!