ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
‘ஆன்லைன்' ரம்மி சூதாட்டத்தைத் தடை செய்யக் கோரிய ‘விடுதலை' அறிக்கைக்குக் கிடைத்த பலன்!
July 25, 2020 • Viduthalai • ஆசிரியர் அறிக்கை

ஆன்லைன்  சூதாட்டங்களைத்  தடை செய்ய உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் வரவேற்கத்தக்கது!

மத்திய - மாநில அரசுகள் உடனே தடை செய்க!

கடந்த ஜூன் 19 ஆம் தேதி ‘விடுதலை'யில் வெளியிடப்பட்ட ‘ஆன்லைன்' ரம்மி சூதாட்டத்தைத் தடை செய்யக் கோரிய அறிக் கைக்குப் பலன் கிடைக்கும் வகை யில், சென்னை உயர்நீதிமன்றம்  மத்திய - மாநில அரசுகள் ‘ஆன்லைன்' ரம்மி சூதாட்டத்தைத் தடை செய்யவேண்டும் என்று  அறிவுறுத்தியிருப்பது வரவேற்கத் தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி. வீரமணி அவர்கள் அறிக்கை விடுத் துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

19.6.2020 நாளிட்ட ‘விடுதலை'யில் ‘‘குடும்பங்களை - இளைஞர்களை நாசப் படுத்தும் ‘ஆன்லைன் ரம்மி' சூதாட்டத்தைத் தடை செய்யவேண்டும் என்ற அடிப் படையில் முக்கிய அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தோம்.

இந்தச் சூதாட்டத்தில் தொடக்கத்தில் இலாபம் - வருவாய் வருவதுபோல போக்குக் காட்டி, அடுத்த கட்டத்தில் சொத்தையே இழக்கும் அளவுக்கு இந்த ‘ஆன்லைன்' சூதாட்டப் போதையையும், இதனால் பல குடும்பங்கள் சீரழியும் என் பதையும் சுட்டிக்காட்டி, இந்தச் சூதாட் டத்தை உடனடியாக  தடை செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தி இருந்தோம்.

அதற்கு இப்பொழுது சென்னை உயர்நீதிமன்றத்தின்மூலம் பலன் கிடைத் திருப்பது மகிழ்ச்சிக்குரியது - வரவேற் புக்குரியது - பாராட்டுக்குரியதும்கூட!

‘‘தமிழ்நாட்டில் மட்டுமல்ல, நாடு முழுவதும் ரம்மி, பாஸியன், லியோவேகாஸ், ஸ்பார்டன்போக்கர், போக்கர் டங்கல், பாக்கெட் 52, ஜீனியஸ் கேசினோ போன்ற ‘ஆன்லைன்' விளையாட்டுகள் களான்கள் போல முளைத்துக் கொண்டு இருக்கின்றன.

இவை அனைத்தும் வேலை இல்லாமல் வீட்டிலிருக்கும்  இளைஞர்களைத் தூண்டும் வகையில் செயல்படுகின்றன. அதாவது வீட்டில் இருந்தபடியே எளிதாகப் பணம் சம்பாதிக்கலாம் என இளைஞர் களைத் தூண்டுகின்றன.

தமிழகத்தில் ‘ஆன்லைன்' விளை யாட்டுச் சூதாட்டத்தில் ஈடுபடும் இளைஞர் களால், அவர்களின் குடும்பத்தில் நிதி நெருக்கடியை ஏற்படுத்துகிறது.

தெலங்கானா மாநில அரசு, தெலங்கானா விளையாட்டுச் சட்டத்தை 2017 ஆம் ஆண்டிலேயே திருத்தம் செய்து பணம் செலுத்தி ஆன்லைனில் விளையாட முடி யாத அளவுக்கு ஆக்கிவிட்டது. ஒழுக்கத் துக்காகவும், உடலை சீராக வைக்கவும் விளையாட்டுகளை வகைப்படுத்தியுள் ளோம். ஆனால், தற்போது வளர்ந்துவரும் ‘ஆன்லைன்' விளையாட்டுகளை சமாளிக்க ஒழுங்குமுறை அமைப்பைக் கொண்டு வருவது காலத்தின் கட்டாயம்'' என்று உயர்நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி விரி வாகக் கூறி, ‘ஆன்லைன்' சூதாட்டத்துக்குத் தடை விதிக்கவேண்டும் என்று மத்திய - மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஜூன் 19 ஆம் தேதி ‘விடுதலை'யில் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருக் குறளிலிருந்து ஒரு குறளை எடுத்துக் காட்டியிருந்தோம்.

இழந்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்

உழத்தொறூஉம் காதற்று உயிர் (குறள் 940)

துன்பம் அடையுந்தோறும் உயிரின்மேல் ஆவலே உண்டாகும். அதுபோலவே, சூதாட் டத்தில் பொருள் இழப்பு ஏற்படுந்தோறும் அந்தச் சூதாட்டத்தை விடாது ஆடும் ஆவலே மிகும் என்ற குறளை, இப்பொழுது குடியைக் கெடுக்கும் இணைய தள ரம்மி சூதாட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது.

காலத்தால் அளிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மத்திய - மாநில அரசுகள் இந்த ‘ஆன்லைன்' சூதாட்ட விபரீதத்தை உடனடியாகத் தடை செய்து இளைஞர்களையும், அவர்களைச் சார்ந்த குடும்பங்களையும், நல்லொழுக் கத்தையும் காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம் - வலியுறுத்துகிறோம்!

 

கி. வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

25.7.2020