ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
‘அ.தி.மு.க. யாரையும் கூட்டணிக்காகத் தேடிச் செல்லாது!’ அமைச்சர் ஜெயக்குமார்
August 23, 2020 • Viduthalai • அரசியல்

சென்னை, ஆக.23  சட்டமன்றத் தேர்தல் கூட்டணிக்கு ‘அ.தி.மு.க. யாரையும் தேடிச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை’ என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஹலோ எப்.எம். வானொலியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசுகினார். அதில், அ.தி.மு.க. கட்சியில் அவரவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கருத்துகள் இருக்கும் என்றும், அவர்கள் அதை தெரிவிப்பதால் அது கட்சியின் கருத்தாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க.மீது பாரதீய ஜனதா தலை வர்கள் தொடர் விமர்சனம் வைத்த போதும் எதிர் வினையாற்றாத அ.தி.மு.க.வினர், எச்.ராஜாவுக்கு எதிராக இவ்வளவு கடுமையாகச் செயல்படுவது ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளிக் கையில், தங்களை பார்த்து தரம் தாழ்ந்து விமர்சிக்கும் போது சும்மா இருக்க முடியாது என்றும், அ.தி.மு.க. தொண் டன் என்ற முறையில் தட்டிக்கேட்பது தனது கடமை என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் தொடர்ந்து பேசுகை யில்,

தமிழகத்தைப் பொறுத்தவரையில் அ.தி.மு.க.வின் தலைமையின்கீழ் நாடா ளுமன்ற தேர்தலுக்கு அமைக்கப்பட்ட கூட்டணி தொடர்வதாகவும், சட்ட மன்றத் தேர்தலில் கூட்டணிக்கு அ.தி. மு.க.வை நோக்கித்தான் அனைவரும் வரவேண்டுமே தவிர, நாங்கள் யாரையும் தேடிச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.