ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஹத்ராஸ் குடும்பத்திற்கு நீதி கேட்கச்சென்ற காங்கிரஸ் தலைவர் மீது தேசத் துரோக வழக்கு
October 9, 2020 • Viduthalai • இந்தியா

லக்னோ, அக். 9- காங்கிரஸ் தலைவர் ஷியோராஜ் ஜீவன், கடந்த மாதம் நான்கு பேரால் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டு கொலை செய்யப் பட்ட 19 வயது பெண்ணின் பூல்கரி கிராமத்திலிருந்து, உள்ளூர் மக் களை தூண்ட முயன்றதாக கேம ராவில் சிக்கியவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹத்ராஸ் மாவட்டத்தில் ஜாதி வன்முறையை தூண்டும் நோக் கத்துடன், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப் பட்ட மனிஷா வால்மீகி யின் குடும் பத்தினரையும், ஒட்டு மொத்த வால்மீகி சமூகத்தையும் தூண்டி விடும் வகையில், இவர் பல ஆத்திர மூட்டும் வார்த்தைகளை பயன்படுத் தியதாக தெரியவந்துள்ளது.

ஷியோராஜ் ஜீவன் மத்திய அமைச்சரவையில் முன்னாள் மாநில அமைச்சராக இருந்து, தற் போது அகில இந்திய காங்கிரஸ் குழுவின் தேசிய செயலாளராக உள்ளார்.

இவர் 19 வயது மனிஷா வால் மீகி நான்கு பேரால் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டு கொலை செய்யப் பட்ட பூல்கரி கிராமத்தை சந்தித்து மக் களைத் தூண்டிவிட்டதாக ஹத் ராஸ் காவல்துறை இவர் மீது தேசத் துரோக வாழ்க்கை பதிவு செய்துள்ளது.

ஷியோராஜ் ஜீவன் மீது இந்த வழக்கு நேற்று இரவு பதிவு செய் யப்பட்டுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை முன்னாள் மாநில அமைச்சர் மறுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து உத்தரப்பிர தேச முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத், ஷியோராஜ் ஜீவன் மாநி லத்தில் மக்களிடையே ஜாதி மத மோதலை உருவாக்க நினைக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஜாதி மத அடிப்படை யில் சமூகத்தை பிளவுபடுத்த யார் நினைத்தாலும், அவர்கள் கடுமை யாக தண்டிக்கப்படுவார்கள், என் மாநிலத்தில் யாரையும் நான் சட் டத்துடன் விளையாட அனுமதிக்க முடியாது என்றும் சாமியார் முதல் வர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு முன்னால் இருந்து குடும்பத்திரனை மிரட்டிய பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரஜ்தீப் சிங் மற்றும் போராட்டம் நடத்திய பாஜக வினர் மீது சாமியார் ஆதித்யநாத் அரசு இதுவரை எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.