ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
வேளாண் துறைக்கான வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு
October 6, 2020 • Viduthalai • தமிழகம்

சென்னை, அக். 6- இந்தியாவின் முன்னணி டிராக்டர் உற்பத்தி யாளரும், இந்தியாவின் நெ. 1 டிராக்டர் ஏற்றுமதியாளரு மான சோனாலிகா டிராக் டர்ஸ் (Sonalika Tractors) கடந்த செப்டம்பர் மாதத்தில், இதற்கு முன் செய்த பல விற் பனை சாதனைகளை முறிய டித்து, மற்றொரு புதிய சாத னையைப் படைத்துள்ளது.

உள்ளூரில் நிலவிய சாத கமான சூழல் மட்டுமின்றி, ஏற்றுமதிச் சந்தையில் காணப் பட்ட ஆரோக்கியமான வளர்ச்சியும் சேர்ந்ததால், இந்த நிறுவனம் 2020ஆம் ஆண்டு செப்டம்பரில் மட் டும் 17,704 டிராக்டர்களை விற்பனை செய்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் (FY 2020-21 H1)  அரையாண் டில் சோனாலிகா 63,561 டிராக்டர்கள் மற்றும் 26,530 உபகரணங்களை விற்பனை செய்துள்ளது என இந்த சாதனை விற்பனை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்ட இந்நிறுவனத்தின் செயல் இயக்குநர் ரமன் மிட்டல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.