ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம்  முன்னாள் மத்திய அமைச்சர் ஆதரவாளர்களுடன் கைது
October 2, 2020 • Viduthalai • மற்றவை

அமிர்தசரஸ், அக்.2 மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப்பில் போராட்டம் நடத்திய முன்னாள் மத்திய அமைச்சர் ஹர் சிம்ரத் கவுர் தனது ஆதரவாளர் களுடன் கைது செய்யப்பட்டார்.

மத்திய அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் மசோதாக்கள் சட்டமாகி உள்ள நிலையில், இந்த மசோதாக் களுக்கு எதிராக விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் தீவிர மடைந்துள்ளது. வேளாண் மசோ தாக்கள் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட் டணியில் இருந்து வெளியேறிய சிரோமணி அகாலி தளம் சார்பிலும் பஞ்சாப், சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விவசாயி களுக்கு ஆதரவாக போராட்டங் களில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், பஞ்சாப்பின் பல் வேறு பகுதிகளில் நேற்று போராட் டம் நடைபெற்ற நிலையில் இரவு மொகாலி மாவட்டத்தில் திரண்ட விவசாயிகளும், சிரோமணி அகாலி தளம் கட்சியினரும் வேளாண் சட் டங்களுக்கு எதிராக போராட்டத் தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தை சிரோ மணி அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவரும், மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியின் அமைச்சரவையில் இருந்து விலகிய  முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் தலைமை தாங்கினார்.

மொகாலியின் சிரக்பூர் பகுதியில் போராட்டக்காரர்கள் பேரணிகாக செல்ல முற்பட்டபோது அவர்களை காவல்துறை  தடுத்து நிறுத்தினர். இதனால், காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட் டது.  மேலும், போராட்டக்காரர்கள் உடனடியாக கலைத்து செல்ல வேண்டும் என தெரிவித்தனர். ஆனால், போராட்டக்காரர்கள் தொடர்ந்து முன்னேறியதால் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய முன்னாள் மத்திய மந்திரியான ஹர்சிம்ரத் கவுரையும் காவல்துறையினர் கைது செய்தனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக  நாடு முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.