ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
வெளிமாநிலங்கள் வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு கரோனா சோதனை கட்டாயம்: அய்.சி.எம்.ஆர். அறிவிப்பு
September 6, 2020 • Viduthalai • இந்தியா

புதுடில்லி, செப். 6- வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயம் கரோனா சோதனை நடத்தப்பட வேண்டும் என்று அய்.சி.எம்.ஆர் புதிய வழி முறைகளை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை அய்.சி.எம்.ஆர் வெளியிட்டுள்ளது. அதில், “நோய் கட் டுப்பாட்டு பகுதிகளில் ஆண்டிஜென் சோத னைகளை அனைவருக்கும் மேற்கொள்வது அவசியம். பிரசவம் உள்ளிட்ட அவசர சிகிச் சைகளின் போது கரோனா சோதனை செய் யவில்லை என்பதற்காக தாமதிக்கக் கூடாது.

கட்டுப்பாட்டு பகுதிகளில் நோய்க்கான அறிகுறியுள்ள, இணை நோய் தாக்கம் உள்ள 65 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா சோதனை எடுப்பது அவசியம். கரோனா தடுப்பு பணியில் உள்ள சுகாதார, களப்பணியாளர்களுக்கு அறிகுறிகள் இருப் பின் சோதனைக்குள்ளாக்கப்பட வேண்டும். நோய் எதிர்ப்புத் திறன் இல்லாத, இணை நோயாளர்களுக்கு வைரஸ் தொற்று இருப் பது உறுதியானால் அவர்களுக்கு 5 மற்றும் 10ஆம் நாள் கட்டாயம் மீண்டும் கரோனா சோதனை மேற்கொள்ள வேண்டும்.

முதலில் அதிவிரைவு ஆண்டிஜென் சோத னையும் பிறகு ஆர்டி பிசிஆர், ட்ரூநாட் அல் லது சிபிநாட் சோதனையை மேற்கொள்ள வேண்டும். வைரஸ் தொற்றுக்கு ஆளான தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கப்படும்போது ஒவ்வொரு முறையும் மார்பகங்களை சுத்தம் செய்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளைக் கையாளும்போது அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். வெளி நாட்டில் இருந்து திரும்பி 14 நாட்கள் ஆன வர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு ரேபிட் ஆண்டிஜென் சோதனைகள் அவசி யம் எடுக்க வேண்டும்.” எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதனிடையே வெளிநாடுகளிலிருந்து புது டில்லி விமான நிலையம் வரும் பயணிகளுக்கு கட்டாயம் கரோனா சோதனை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக பன்னாட்டு விமான நிலையத்தில் தனியார் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. பயணிக ளுக்கு நான்கு மணி நேரத்தில் சோதனை முடிவுகள் வழங்கப்படும். அதுவரை பயணி கள் விமான நிலையத்திலேயே தங்கியிருக்க வசதிகள் செய்யப்படும் என்று கூறப்பட்டுள் ளது. சோதனை முடிவுகள் வரும் வரை தங்கும் விடுதிகளில் பயணிகள் தங்கிக்கொள் ளவும் அனுமதிக்கப்படுவார்கள். இந்த நடை முறைகள் அடுத்த வாரம் முதல் அமலுக்கு வர உள்ளதாக விமானப் போக்குவரத்து துறை வட்டார தகவல்கள் கூறுகின்றது.