ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
வெளிநாட்டுப்பெண்ணிடம் சாமியாரின் பாலியல் கொடூரம்
August 24, 2020 • Viduthalai • மற்றவை

பக்தியின் ஒழுக்கத்தைப் பாரீர்!

திருவண்ணாமலை, ஆக. 24 அமெரிக்க நாட்டைச் சேர்ந்த 32 வயது பெண்ணிடம் பாலியல் வன் முறை செய்ய முயன்ற சாமியாரை பொதுமக்கள் அடித்து உதைத்து  காவல்துறையினரிடம் ஒப்படைத் துள்ளனர்.  அமெரிக்காவை சேர்ந்த 32 வயதான பெண் ஒருவர் திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வர நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளார். வீட்டின் முதல் தளத்தில் தங்கி வந்துள்ள அவரிடம் சாமியார் ஒருவர், பாலியல் வன்முறை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனை யடுத்து, ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். தற்காப்புக்காக அந்த பெண், சாமியாரை கத்தியால் தாக்கி விட்டு கூச்சலிட்டார்.  மேலும், தலையில் அடிபட்ட நிலையில் அந்த பெண் கூச்சலிட்டதைத் தொடர்ந்து, பொதுமக்கள் கூடி, அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து சாமியாரை சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும், தலையில் காயமடைந்த அந்த பெண்மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, இந்த தகவல் அறிந்து  வந்த திரு வண்ணாமலை தாலுகா காவல் நிலைய அதிகாரிகள், அந்த சாமியாரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த முதற்கட்ட விசாரணையில் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அந்த சாமியார், கோவை மாவட் டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரிய வந்துள்ளது.