ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
விவசாயிகள் - சிறு வணிகர்களை பாதிக்கும் 3 சட்டங்கள்: மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்து செப். 28-ல் ஆர்ப்பாட்டம்!
September 22, 2020 • Viduthalai • கழகம்

மாவட்டத் தலைநகரங்களில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் இடங்கள்!

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 21-9-2020 அன்று காலை, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களை பாதிக்கும் மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றி யுள்ள மூன்று சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் - அதற்கு துணை போகும் ஆளும் அ.தி.மு.க. அரசைக் கண்டித்தும் மாவட்டத் தலைநகரம் - நகரம் - ஒன்றியம் - பேரூர்களில் நடைபெற உள்ள “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் இடங்கள் வருமாறு:

கலந்து கொள்வோர்                                           மாவட்டம்

மு.க.ஸ்டாலின் அவர்கள்,                              - காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்

தலைவர், திராவிட முன்னேற்றக் கழகம்      

கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்,                     - சென்னை மேற்கு

துணைத் தலைவர், திராவிடர் கழகம்,

கே.எஸ்.அழகிரி அவர்கள்,                            - சென்னை வடக்கு

தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி,     

வைகோ, எம்.பி., அவர்கள்,                           - சென்னை தெற்கு

பொதுச்செயலாளர், ம.தி.மு.க..,            

கே. பாலகிருஷ்ணன், அவர்கள்,                             - சென்னை கிழக்கு

செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

இரா. முத்தரசன், அவர்கள்,                         - தஞ்சாவூர்

செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன் அவர்கள்     - திருச்சி

தலைவர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்,

தொல். திருமாவளவன், எம்.பி., அவர்கள்,      - கடலூர்

தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி

எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள்,         - தாம்பரம்

தலைவர், மனித நேய மக்கள் கட்சி    

 ஈ.ஆர். ஈஸ்வரன் அவர்கள்,                          - கோவை

பொதுச்செயலாளர், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி

ரவி பச்சமுத்து, அவர்கள்                               - பெரம்பலூர்

தலைவர், இந்திய ஜனநாயக கட்சி

மேற்கண்ட மாவட்டங்களைத் தவிர, மற்ற மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட் டத்தில் கலந்து கொள்வோர் - நடைபெறும் இடம் ஆகியவற்றை, மாவட்ட தோழமைக் கட்சித்தலைவர்களுடன் கலந்து பேசி, முடிவு செய்து, அதனை பத்திரிகைச் செய்தியாக அளித்திட வேண்டுமென மாவட்டச் செயலாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.