ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதா
September 20, 2020 • Viduthalai • அரசியல்

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதா?

அ.தி.மு.க.வுக்கு தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை, செப். 20- தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் எதை கடுமை யாக எதிர்த்து அதன் மத்திய அமைச்சராக இருந்த ஹர் சிம்ரத் கவுர் பாதல் பதவி விலகல் வரை சென்றுள் ளாரோ அதற்கு காரண மான, மத்திய பா.ஜ.க. அர சின் சட்டங்களுக்கு விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கும் சட்டங்களுக்கு மக்களவையில், அந்த சட் டங்கள் விவசாயிகளின் நல னுக்கு முற்றிலும் எதிரா னவை என அறிந்தே அ.தி. மு.க. மகிழ்ச்சியுடன் ஆதர வளித்துள்ளதற்கு தி.மு.க. வின் சார்பில் கடும் கண்ட னத்தை தெரிவித்துக்கொள் கிறேன்.

மன்னிக்க முடியாத துரோகம்

விவசாயிகளின் விளை பொருட்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் பதுக்கி வைத் துக்கொள்ள வழிவகுப்பது, அத்தியாவசியப் பொருட் கள் திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி ஊக் குவிப்பு சட்டமும், விவசாயி களுக்கு விலை உத்தரவாதம் வழங்கும் வேளாண் சேவை கள் திருத்தச் சட்டமும் தமி ழக விவசாயிகள் மட்டு மின்றி ஒட்டுமொத்த இந் திய விவசாயிகளின் வாழ் வில் சாவு மணி அடிக்கும் சட்டங்களாகும். ஆனால் இந்த சட்டங்களை விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங் கும் சட்டங்கள் என்றும், தமிழக பொருளாதாரத்தை உயர்த்தும் சட்டங்கள் என் றும் கூறி அ.தி.மு.க. ஆதரித் திருப்பது, விவசாயிகளுக்கு இதுவரைசெய்த பாதகமெல் லாம் போதாது என்று மன் னிக்க முடியாத துரோகத்தை யும் தற்போது செய்திருக் கிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

அராஜக சட்டங்கள்

மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள இந்த 3 சட்டங்கள் கார்ப்பரேட் டுகளின் கையில் விவசாயி களை அடமானம் வைக்கும் அராஜக சட்டங்கள். தமிழ கத்தில் உள்ள வேளாண் விற்பனைக்கூடங்களுக்கும், தி.மு.க. ஆட்சியில் தொடங் கப்பட்ட உழவர் சந்தைத் திட்டத்திற்கும் முற்றிலும் எதிரானது. பா.ஜ.க. அரசின் சூழ்ச்சியை புரிந்துகொண்டு தான் விவசாயிகளுக்கும் தமிழக வேளாண் முன் னேற்றத்திற்கும் எதிரான இந்த சட்டங்களை தி.மு.க. மக்களவையில் கடுமையாக எதிர்த்துள்ளது.

புரையோடி போயிருக்கும்

ஆனால் ஊழல்களில் புரையோடி போயிருக்கும் அ.தி.மு.க. அரசு வழக்குகளில் இருந்து தப்பித்து, தங்களை பாதுகாத்துக்கொள்ள எஞ்சிய இன்னும் சில மாதங்கள் பா.ஜ.க.வின் பாதுகாப்பில் ஒளிந்துகொண்டு, கஜா னாவை மேலும் கொள்ளை யடிக்க மத்திய அரசின் இந்த விவசாயிகள் விரோத சட்டங்களுக்கு மண்டி யிட்டு எடப்பாடி பழனி சாமி ஆதரவளித்து விவசா யிகளின் நலன் குறித்து, கொஞ்சம் கூட இரக்கமின்றி நடந்து கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை நான் ஒன்றே ஒன்றை மட் டும் கேட்டுக்கொள்கி றேன். இனியொரு முறை மேடை களில் நின்று ‘நான் ஒரு விவசாயி’ என்று மட்டும் சொல்லாதீர்கள் “ப்ளீஸ்”.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.