ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
விழுப்புரம் மண்டலத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
September 5, 2020 • Viduthalai • கழகம்

விழுப்புரம், செப். 5- விழுப்புரம் மண்டல திராவிடர் கழகத் தின் சார்பில் தந்தை பெரியார் 142ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என்பதன் அடிப் படையில் காணொலி வழி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மண்டலத் தலைவர் க.மு.தாஸ் துவக்க வுரையாற்றினார். பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் கருத்துரை யாற்றினார். மண்டல செய லாளர் குழ.செல்வராசு வர வேற்புரையாற்றினார். மண் டல மாணவர் கழக செயலா ளர் தா.தம்பி பிரபாகரன் ஒருங்கிணைத்தார்.

திண்டிவனம் கழக மாவட்ட தலைவர் மு.கந்தசாமி, கள்ள குறிச்சி மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் கோ.சா.பாஸ்கர், திண்டிவனம் மாவட்டச் செயலாளர் சே. பரந்தாமன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் பரணி தரன், விழுப்புரம் மாவட்ட இணைச் செயலாளர் பழனி வேல், மாவட்ட இணைச் செயலாளர் பாபு, மாவட்ட இளைஞரணி ஓவியர் செந் தில், அச்சரப்பாக்கம் ஒன்றிய செயலாளர் உ.பச்சையப்பன், விழுப்புரம் நகர இளைஞரணி சதீஷ்குமார், திண்டிவனம் கழக மாவட்ட மாணவர் கழக செயலாளர் தேவராஜ் மற்றும் நகர கழகம், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மண்டல இளை ஞரணி செயலாளர் தா.இளம் பரிதி நன்றியுரை கூறினார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

  1. தமிழர் தலைவர் ஆசிரி யர் தலைமையில் நடைபெற்ற தலைமை செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர், மாவட் டச் செயலாளர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துதல்.
  2. அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுதல் மற்றும் மாவட்டத்தில் உள்ள ஒன்றி யங்களில் கழக கொடி ஏற்றி இனிப்பு வழங்குதல்.
  3. இளைஞரணி சார்பாக தந்தை பெரியார் பிறந்த நாள் விழா சுவரொட்டி மற்றும் சுவர் விளம்பரம் செய்தல்.

இரங்கல் தீர்மானம்

நீதியரசர் ஏ.ஆர்.இலட்சு மணன், தேவக்கோட்டை சுயமரியாதை வீரர் சூறாவளி பொ.இலட்சுமணன், அய்வர் வழி மெய்யப்பன், தொழில திபர் மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார், கல்பாக்கம் வேம்பையன், அச்சரப்பாக்கம் ஒன்றிய செயலாளர் உ.பச் சையப்பன் தந்தையார் மு. உமாபதி ஆகியோர் மறை வுக்கு இக்கூட்டம் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது.