ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
விநாயகர் ஊர்வலத்துக்கு அனுமதி இல்லை
August 21, 2020 • Viduthalai • தமிழகம்

தமிழக அரசு அறிவிப்பு

சென்னை,ஆக.21, தமிழகத்தில் கரோனா நோய் தொற்றுத் பரவுதலை தடுக்கும் வகையில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலம் நடத்தவும் அனுமதி இல்லை என்று மீண்டும் தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. மேலும், வீடுகளிலேயே சிலைகளை வைத்து வழிபட வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு வருகிற 31ஆம் தேதி வரை அமலில் உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று (ஆக.20) வெளியிட்டுள்ள அறிக்கை:

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 22ஆம் தேதி (நாளை) கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் 29ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையின்படி மதம் சார்ந்த விழாக்கள், கூட்டு வழிபாடுகள் ஆகியவை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தடை செய்யப் பட்டுள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டு தலின்படியும், மாநிலத்தில் கரோனா தொற்றினால் நிலவிவரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டும், கரோனா நோய் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் அமைப்பதையும், பொது இடங்களில் வழிபாடு நடத்துவதையும், ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதையும், பொதுமக்கள் நலன் கருதி தடை செய்யப்பட்டு ஏற்கெனவே ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட அறிவுறுத்தப் பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு பொதுநல வழக்குகளை விசாரித்த நீதிமன்றமும் அரசின் ஆணைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. எனவே, மத்திய மற் றும் மாநில அரசுகளின் ஆணைகளையும், வழிகாட்டி நெறிமுறைகளையும் பின் பற்றி, கரோனா நோய் தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேணடும் என அனைத்து தரப் பினரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.