ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
விடுதலை சந்தா புதுப்பித்தல், கிளைக்கழகக் கூட்டங்களை நடத்திட உரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழகக் கலந்துரையாடலில் முடிவு
July 30, 2020 • Viduthalai • கழகம்

உரத்தநாடு, ஜூலை 30- 23.7.2020 அன்று மாலை 6.30 முதல் இரவு 9.30 வரை உரத்த நாடு பெரியார் மாளிகையில் உரத்தநாடு ஒன்றிய திரா விடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன உறுப்பினர் நெடுவை கு.அய்யாத்துரை தலைமை வகித்து உரையாற் றினார். கழகப் பொதுச் செய லாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா. குணசேகரன், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாவட்ட செயலாளர் அ. அருணகிரி ஆகியோர் முன் னிலையேற்று உரையாற்றி னர். ஒன்றியச் செயலாளர் ஆ.லெட்சுமணன் அனைவ ரையும் வரவேற்று உரையாற் றினார்.

தொடர்ந்து ஒன்றிய அமைப்பாளர் மாநல்.பரம சிவம், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் அ.இராமலிங்கம், பெரியார் நகர் அ.உத்திராபதி, சக்கரைகோட்டை மதியழ கன், பூவை இராமசாமி, நக ரத் தலைவர் பேசி.ரவிச்சந் திரன், பூ.செந்தில்குமார், பேபி. ரமேஷ், மாதவன், ஒக்கநாடு மேலையூர் வினோத், திரா விடச் செல்வன், தெற்கு நத் தம் சுப்ரமணியன், மாவட்ட இளைஞரணித் தலைவர் ரெ. சுப்ரமணியன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் நா.வெங்கடேசன், கண்ணை கிழக்கு இரா.செந்தில்குமார், சிவ.தாயுமானவன், ஒக்கநாடு மேலையூர் கவிபாரதி, இளந் தென்றல், தமிழ்ச்செல்வன், இளமாறன், சாமிநாதன், கும ரவேல், மண்டலக்கோட்டை மோகன்தாஸ், சற்குணன், தென்னவன், மணிராசு தஞ்சை மாநகர அமைப்பாளர் தமிழ்ச்செல்வன், வீரத்தமி ழன் வெள்ளூர் இராமச் சந் திரன், மெய்யழகன், நெடுவை ஜெயசிலன், முக்கரை கார்வேந்தன், கை.மு.அறிவுச் செல்வன், ஒன்றிய ப.க. தலை வர் கு.நேரு, ஒக்கநாடு கீழை யூர் கவுதமன், மாநில பெரி யார் வீரவிளையாட்டுக் கழக செயலாளர் நா.இராமகிருஷ் ணன், மாநில வீதிநாடக குழு அமைப் பாளர் பெரியார் நேசன், ஒக்க நாடு மேலையூர் பாலகிருஷ் ணன், வழக்குரை ஞர் மாரிமுத்து, ஒக்கநாடு அ.இராசப்பா, முக்கரை சுடர்வேந் தன், தெற்கு நத்தம் குமரவேல், ஒன்றியத் தலை வர் த.செக நாதன் ஆகியோர் உரையாற் றினர். கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

தீர்மானம் 1: இரங்கல் தீர்மானம்

கழக அறக்கட்டளைக்கு ஆலோசகராகவும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுக்கு பெருந்துணையா கவும் திகழ்ந்த வரியியல் அறி ஞர் இராஜரத்தினம் அவர் கள் மறைவிற்கும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தொண்டராம்பட்டு ஆசிரி யர் மாரியப்பன் மறைவிற்கும், கரோனா பெருந்தொற்றால் மறைவுற்றவர்களுக்கும் இக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2:

கரோனா தொற்றால் விடு தலை விநியோகத்தில் சிக்கல் உள்ள நிலையில் உரத்தநாடு, வடசேரி மற்றும் தஞ்சை பகு தியில் நேரிடையாக விடுதலை விநியோகிக்கப்படும். விடு தலை சந்தா ஜூலை மாதத் தோடு முடிவடைகிறது. அந்த சந்தாக்களை புதுப் பித்து வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 3:

உரத்தநாடு ஒன்றியத்தில் கிளை வாரியாக திராவிடர் கழகக் கலந்துரையாடல் மற் றும் பயிற்சி முகாம்களை நடத்துவது என முடிவு செய் யப்படுகிறது.

தீர்மானம் 4:

தந்தை பெரியார் சிலையை அவமதித்தும் தந்தை பெரி யார் மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களையும் முக நூலில் தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் சங்பரிவாரக் கும் பலுக்கு வன்மையான கண்ட னத்தை இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது. வன் முறையைத் தூண்டும் வகையில் செயல்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசை இக் கூட்டம் வற்புறுத்துகிறது.

புதிய பொறுப்பாளர்கள்

அறிவிப்பு

மேற்குப் பகுதிச் செயலா ளர் இரா.மோகன்தாஸ்

தெற்குப் பகுதிச் செயலா ளர் முக்கரை சுடர்வேந்தன்

ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் சமயன்குடிக் காடு க.அறிவரசு

உரத்தநாடு அரசு மேனி லைப் பள்ளி மாணவர் கழக அமைப்பாளர் ஒக்கநாடு மேலையூர் இளமாறன்.