ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
வழக்குரைஞரைக் காவல் நிலையத்தில் தாக்கிய புகார்: காவல்துறையினர் எட்டுபேர் மீது சிபிசிஅய்டி வழக்கு
August 4, 2020 • Viduthalai • தமிழகம்

திருநெல்வேலி, ஆக 4-  திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து வழக்குரைஞர் செம்மணி என்ற இராஜரத்தினம் என்பவரைத் தாக்கியது தொடர்பான புகாரில் நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறை துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர்  உட்பட காவல்துறையினர் எட்டுபேர் மீது சிபிசிஅய்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் பழவூரைச் சேர்ந்த வழக்குரைஞர் இராஜரத்தினத்தை கடந்த 3.11.2017ஆம் தேதி இராதாபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தனிப்பிரிவு காவல்துறையினர் தாக்கியதாக புகார் அளித்திருந்தார்.

ஆனால், அதன்மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் சம்பந்தப்பட்ட காவல்துறையினர்மீது நடவ டிக்கை எடுக்கக் கோரி திருநெல்வேலி நீதிமன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் புகார்மீது விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்ய 2018இல் உத்தரவிட்டது. ஆனாலும் காவல்துறையினர் காலம் தாழ்த்தியதால் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இராஜரத்தினம் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை சிபிசிஅய்டி காவல்துறையினர் விசாரித்து நட வடிக்கை எடுக்குமாறு கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி உத்தரவிட்டி ருந்தது. அதன்படி திருநெல்வேலி சிபிசிஅய்டி காவல்துறையினர் விசாரணை செய்து அப்போதைய வள்ளியூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் குமார் மற்றும் பணகுடி காவல்துறை ஆய்வாள ராக இருந்த ஸ்டீபன் ஜோஸ், காவல்துறை உதவி ஆய்வாளர்கள் பழனி, விமல்குமார், முகமது சம்சீர், சிறப்பு பிரிவு காவல்துறையினர் செல்லதுரை, சாகர், ஜோஸ் ஆகியோர்மீது கொலைமிரட்டல், காயம் ஏற்படும் வகையில் தாக்குதல், வீடு புகுந்து தாக்கி ஆபாசமாக பேசியது உள்ளிட்ட 11 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

காந்தியாருக்கு நினைவு நாணயம் இங்கிலாந்து வெளியிடுகிறது

லண்டன், ஆக. 4- காந்தியாரின் நினைவைப் போற்றும் வகையில் இங்கிலாந்து அரசு காந்தியார் நினைவு நாணயம் வெளியிடுகிறது.

இங்கிலாந்தின் நிதிஅமைச்சர் ரிஷிசுனிக் கூறியதாவது: இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய காந்தியாரை நினைவு கூரும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட ராயல் மின்ட் அட்வைஸரி கமிட்டி ஆலோசித்து வருகிறது. மேலும் காந்தி கருப்பு, ஆசிய,பிற சிறுபான்மை இன மக்களை அங்கீகரிப்பதற்காக அரும்பாடுபட்டார் என்பதை ஆலோசனைக் குழுவிடம் தெரிவித்து உள்ளதாகக் கூறினார். மேலும் ராயல் மின்ட் அட்வைஸரி கமிட்டி வெளியிட்டுள்ள செய்தியில் காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயத்தை வெளியிட (ஆர்எம்ஏசி) முடிவு தற்போது பரிசீலித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

காதியில் பட்டு ஆடையில்

முகக்கவசம்-பரிசுப்பெட்டகம் விற்பனை

புதுடில்லி, ஆக. 4- மத்திய அரசின் காதி வாரியம் பட்டு மூலம் தயாரிக் கப்பட்ட முகக்கவசத்தை அறிமுகம் செய்துள்ளது. மேலும் 5 பட்டு முகக்கவசம் அடங்கிய பரிசு பெட்டகத்தையும் அறிமுகம் செய்துள் ளது. ரூ.500 விலையுள்ள இந்தப் பரிசு பெட்டகத்தை மத்திய அமைச் சர் டில்லியில் அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர், இந்த இக்கட்டான நேரத்தில் தரமான முகக் கவசம் குறைந்த விலையில் கிடைக்க காதி நல வாரியம் பட்டு முகக் கவசத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. விழாக்காலத்தில் பரிசளிக்க விரும்புவோர் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.