ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
வழக்குகள் தாமத்தால் பொருளாதாரம் பாதிக்கப்படும்
July 19, 2020 • Viduthalai • இந்தியா

உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி பேச்சு

புதுடில்லி, ஜூலை 18- தமிழ கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாமி யார் பிரே மானந்தா வழக்கில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி ஆர்.பானுமதி ஞாயிறன்று ஓய்வு பெறுகி றார்.

தர்மபுரி மாவட்டத்தில், சாதாரண குடும்பத்தில் பிறந் தவர் ஆர்.பானுமதி. சட்டம் படித்து, 1981-ஆம் ஆண்டு வழக் குரைஞர் தொழிலில் அடியெ டுத்து வைத்தவர். கடந்த 1988-ஆம் ஆண்டு நீதிமன்றப் பணி யில் சேர்ந்து செசன்சு நீதி மன்ற நீதிபதியாக ஆர்.பானு மதி பணி யைத் தொடங்கி 30 ஆண்டுகள் பணியாற்றியுள் ளார். 2003-ஆம் ஏப்ரல் 3-ஆம் தேதி சென்னை உயர் நீதி மன்ற நீதிபதியாக நியமிக்கப் பட்ட பானுமதி, பின்னர் 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்று அங்கு மாற்றப்பட் டார்.

உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட ஆறாவது பெண் நீதிபதி, உச்சநீதிமன்ற கொலிஜியத்தில் இடம் பெற்ற இரண்டாவது பெண் நீதிபதி பானுமதி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத் தில் பெரும் பரபரப்பை ஏற் படுத்திய சாமியார் பிரே மானந்தா வழக்கில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி  ஆர்.பானுமதி அப்போது புதுக் கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி யாக இருந்தார். அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணு கோபாலால் "ஒரு சிறந்த நீதி பதி" என்று பாராட்டப்பட்ட நீதிபதி பானுமதி, 2012 டிசம் பர் 16 ஆம் தேதி நாட்டையே அதிர வைத்த நிர்பயா பாலி யல் கும்பல் பலாத்கார வழக் கில் குற்றவாளிகள் நான்கு பேரும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் அனைத்தையும் நிராகரித்து, அவர்களுக்குத் தூக்குத் தண் டனையை உறுதி செய்தார். தூக்குத் தண்டனை நிறை வேற்றப்படும் சில மணி நேரத்துக்கு முன்பு தாக்கல் செய்த மனு வைக் கூட விசாரித்து, அந்த மனுவையும் நிராகரித்து, தூக்குத் தண்ட னையை உறுதி செய்தவர் நீதிபதி பானுமதி.  கடந்த 30 ஆண்டுகால நீதிமன்றப் பணியை முடித்து இன் றுடன் (ஞாயிறு) நீதிபதி ஆர். பானு மதி ஓய்வுபெற உள்ளார். இதற்காக வெள்ளிக் கிழமை நடத்தப்பட்ட பிரிவு உபச் சார நிகழ்ச்சியில் நீதிபதி பானுமதி காணொலி வாயி லாகப் பங்கேற்றார். அப் போது அவர் பேசி யதாவது:

‘’நான் இரண்டு வயதாக இருந்தபோது எனது தந்தை ஒரு பேருந்து விபத்தில் உயி ரிழந்துவிட்டார். அவருக் கான இழப்பீடு கேட்டு என் தாய் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். நீதிமன் றம் எங்களுக்குச் சாதகமான தீர்ப்பளித்தாலும், நீதி மன்றத் தின் பல்வேறு குழப்பமான நடைமுறைச் சிக்கல்கள், போதுமான சட்ட உதவி கள் இல்லாததால் அந்தப் பணத் தைப் பெற முடியவில்லை. நீதிமன்றத்தின் செயல் முறை தாமதத்தால் நான், எனது தாய், எனது இரு சகோ தரிகள் பாதிக்கப்பட்டோம். நான் ஓய்வுபெறும் இந்த நாள்வரை அந்த இழப்பீட் டைப் பெறவில்லை. நீதி மன்றப் பணியில் ஏராளமான மலையளவு தடைகள் வந் தன. அவற்றைக் கடந்து தான் வந்துள்ளேன். நான் நீதிமன் றத்தில் நுழைந்தபோது வழக் குகள் தொடர்ந்து தேக்கமடைந் துள்ளன என்ற பேச்சு தான் வரும். இப்போதும் அப்படித் தான் பேசுகிறார்கள். வழக் குகள் தாமதத்தால் பொருளா தாரம் பாதிக்கப்பட்டதாகக் கடந்த காலத்தில் பேசினார் கள்" இவ்வாறு ஆர்.பானு மதி பேசினார். உச்சநீதிமன்றத்தில் தற் போது மூன்று பெண் நீதிபதிகள் உள்ளனர். இதில் பானுமதி தவிர்த்து இந்து மல் ஹோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் மற்றவர்கள்.