ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
வரலாற்றுத் திரிபுகளுக்கு வழிவகுக்கும் கலாச்சார ஆய்வுக்குழுவை கலைத்திடுக!
September 25, 2020 • Viduthalai • இந்தியா

 குடியரசுத் தலைவருக்கு 32 எம்.பி.க்கள் கடிதம்

புதுடில்லி, செப்.25 இந்திய கலாச்சார வரலாற்றை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு நாட்டின் பன்மைத்துவத்தை பிரதிபலிக்கக்கூடிய வகையில் இல்லை. எனவே மத்திய அரசு அமைத் துள்ள இக்குழுவை கலைக்க அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர்  பிரகலாத் படேல்  நாடாளுமன்றத்தில் செப்டம்பர் 14 அன்று எழுத்துருவில் அளித்த பதிலில் இந்தியாவின் கலாச் சார தோற்றுவாய் பற்றியும், அதன் பரிணாமம் குறித்தும் 12 ஆயிரம் ஆண்டுகள் வரை பின் னோக்கிச் சென்று ஆய்வுக்குட்படுத்த ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்திய நாடு பன்மைத்துவ கலாச்சாரத்தை தன்ன கத்தே கொண்ட பெருமை மிக்க மரபு வழியைக் கொண்டதாகும். ஆகவே அதன் ஆய்வுக்கு இம் மாபெரும் நாட்டின் பன்மைத்துவ  கலாச்சாரங்கள் குறித்த ஆழமான உட்பொருள்கள் இயல்பாகவே தேவைப்படுகின்றன.

நாங்கள் உங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர விழைவது என்னவெனில், இத்தகைய பன்மைத்துவத்தை பிரதிபலிக்கக் கூடியதாக அந்த 16 பேர் கொண்ட நிபுணர் குழு இல்லை. தென் னிந்தியர்கள் எவரும் இல்லை. வடகிழக்கு இந்தி யர்கள் இல்லை. சிறு பான்மையினர் இல்லை. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் இல்லை. பெண்கள் இல்லை. அநேகமாக அக்குழுவின் எல்லா உறுப்பினர்களுமே இந்திய சமூகத்தின் ஜாதிய அடுக்கில் உச்சத்தில் அமர்ந்திருக்கிற ஒரு சில சமூகக் குழுக்களைச் சார்ந்தவர்களே. தென்னிந்திய மொழிகளின், பெருமைமிக்க வரலாற்றையும் மத்திய அரசாலேயே செம்மொழியாக அங்கீகரிக்கப் பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட, ஆய்வாளர்கள் யாரும் அக் குழுவில் இல்லை.

அக் குழுவின் உள்ளடக்கம் பல கேள்விகளை எழுப்புகிறது. விந்தியமலைக்கு கீழே இந்தியா இல்லையா? வேத நாகரிகம் தவிர வேறு நாகரிகம் இல்லையா? சமஸ்கிருதம் தவிர தொன்மை மொழி ஏதும் இங்கு இல்லையா? பாலின பார்வையற்ற, தனித்துவமிக்க பன்மைத்துவ  தேசிய இனங்கள், பல்வேறு சமூகக் குழுக்களைப் புறம்தள்ளியுள்ள இக் குழுவின்உள்ளடக்கம் இது அமைக்கப் பட்டுள்ள நோக்கம் குறித்த அய்யங்களையே எழுப்புகிறது.மிகச் சிறந்த ஆய்வாளர்களான ஜான் மார்ஷல், சுனித் குமார் சாட்டர்ஜி, அய்ராவதம் மகாதேவன், டோனி ஜோசப், ஆர். பாலகிருஷ்ணன் போன்றவர்கள் இத் துறைக்கு பெரும் பங் களிப்பை நல்கியுள்ளனர். இந்த நேர்மறையான பங்களிப்பு களையெல்லாம் இக்குழு சிதைத்து விடுமோ என அஞ்சுகிறோம். இத்தகைய உள்ள டக்கம் கொண்ட இக்குழு அறிவியல் பார்வையோடு ஆய்வு செய்ய இயலாது. மேலும் வரலாற்றுத் திரிபுகளுக்கு வழி வகுத்துவிடும் எனக் கருதுகிறோம்.

இப்பிரச்சினையில் தாங்கள் தலையிட்டு, அரசு அமைத்துள்ள இக்குழுவை கலைக்க அறி வுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குடி யரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பும் பணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக் களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் முன்முயற்சி மேற்கொண்டு ஒருங்கிணைத்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழு தலைவர் பி.ஆர்.நட ராஜன் மற்றும் ஏ.எம்.ஆரிப் ஆகியோரும் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.