ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
வரலாறாகிய பெரியார் பதித்த கொள்கைத் தடங்கள் (16)
July 25, 2020 • Viduthalai • மற்றவை

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்

உ டன் உண்ணல் (சமபந்தி போஜனம்) என்ற உரிமைப் போர்

ஆதரவில்லையா?

தஞ்சை ஜில்லா போர்டின் தீர்மானத்திற்குப் பொது ஜன ஆதரவு மிகுதியாக இருக்கிறது என்பதில் சந்தேக மில்லை. தஞ்சை ஜில்லாவில் எந்தப் பார்ப்பனரல்லா தாரும், அத்தீர்மானத்தைக் கண்டிக்கவில்லை. ஜில்லா போர்டில், அதை மாற்றுவதற்காகப் பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சிகள் வீணாயின.

இன்னும் திருச்சி ஜில்லா போர்டு, தஞ்சாவூர் போர்டின் தீர்மானத்தைப் பாராட்டி ஆதரித்திருக்கிறது. வடார்க்காடு ஜில்லா போர்டும் இது போலவே தஞ்சை ஜில்லாபோர்டு தீர்மானத்தை ஆதரிக்கிறது. இன்னும் பல பொதுக் கூட்டங்களில் ஆதரிக்கப் பட்டிருக்கின்றது. ஆதலால் தஞ்சை ஜில்லா போர்டு செய்த தீர்மானம் பொதுஜன ஆதரவில்லாதது என்று எந்தக் குருடனும் சொல்ல மாட்டான்.

எச்சரிக்கை!

இச்சமயத்தில் பார்ப்பன சமூகத்தாருக்கு நாம் உண்மையாகவே எச்சரிக்கை செய்ய விரும்புகின்றோம். இப்பொழுது உலகம் மனித சுதந்திரத்துக்காகவும் உயி ருக்காகவும் போராடிக் கொண்டிருக்கிறது. இச்சமயத்தில் நீங்கள் மானயீனமின்றிச் சோற்றுக்காகப் போராடுவீர் களானால் அது மிகவும் வெறுக்கத் தகுந்த செய்கை யாகும். இந்த நாட்டு மக்களுடன் ஒன்றாகக் கலந்து வாழ உங்களுக்கு விருப்பமில்லை என்பதையே உங்கள் செய்கை காட்டுகிறது. இது உங்களுக்கு நல்லதல்ல. ஜெர்மன் மக்களுடன் சமூக வாழ்வில் ஒத்துழைக்காமல், சுயநலவாழ்விலேயே கருத்துக் கொண்டு வாழ்ந்து வந்ததால் தான் யூதர்களை, ஹிட்லர் ஜெர்மனியை விட்டே வெளியேற்றினார். இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த நாட்டுக்குப் போதுமான அரசுரிமை கிடைக்குமானால் ஜெர்மனியில் யூதர்களுக்கு வந்த கதியே உங்களுக்கும் வரக்கூடும். இதற்குத்தான் இப் பொழுது நீங்கள் விதை போடுகிறீர்கள் என்று எச்சரிக் கிறோம். நாம் சொல்லுவது சரியா? அல்லவா? என்று யோசனை செய்து பாருங்கள்.

வழி காட்டிற்று

தஞ்சை ஜில்லா போர்டு தீர்மானத்தின் மூலம் ஒரு நல்ல உண்மையை உணர்ந்து கொண்டோம். பார்ப்ப னர்கள் எந்த உயர்ந்த பதவியில் இருந்தாலும் அல்லது எந்த ஈனத்தனமான செய்கைகளைச் செய்து கொண்டி ருந்தாலும், அவர்கள் தங்கள் ஜாதி உயர்வைக் காப் பாற்றிக் கொள்ளுவதற்குத் தவறவே மாட்டார்கள் என் பதே அந்த உண்மை. இதைக் காங்கிரசிலுள்ள பார்ப் பனரல்லாத தோழர்களும் தெரிந்து கொள்ளத் தஞ்சை போர்டு வழிகாட்டியிருப்பது மறுக்க முடியாததாகும்.

ஆகவே நாம், பார்ப்பனர்களே நமது சமூகத்திற்கு விரோதிகள்; அவர்களுடைய கொள்கையின் காரண மாக அவர்களால் நம்முடன் ஒத்துப்போக முடியவில்லை; ஆதலால் பார்ப்பனர்களின் கொள்கைகளுக்கு ஆதர வளிக்கும் எல்லா வசதிகளையும், வேரோடு கில்லி யெறியவேண்டும்; என்று கூறிவருகிறோம். இப்பொழு தாவது பார்ப்பனர்களின் சுயநலப் போக்கை உணர்ந்து கொண்டீர்களா? (‘விடுதலை’ 07-04-1941)

ஓட்டலில் சமத்துவம்!

3.8.1945 இல் நடைபெற்ற திருநெல்வேலி நகராட்சி மன்றக் கூட்டத்தில், ‘‘நெல்லை ஓட்டல்களில் ஆதிதிரா விடருக்கு லைசென்சுகள் ரத்து செய்யப் படவேண்டும்'' என்ற தீர்மானத்தை விளக்கிப் பேசுகையில், கவுன் சிலரும், திராவிடர் கழகத் துணைத் தலைவருமான தோழர் ஏ.அருணாசலம் ‘இத்தீர்மானம் நிறைவேறா விடில், தம்மைச் சேர்ந்தவருடன் தாம் இஸ்லாம் ஆகி விடுவதாக'க் கூறினார்.

பின்னர் ஓட்டல்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேறியது.

- ‘குடிஅரசு', 25.8.1945

‘பிராமணாள்’ ஜாதிப் பெயர் ஒழிப்பு

1957 ஜாதி ஒழிப்பு புதிய களம்!

1957இல் ஓட்டல்களில் ‘பிராமணாள்’ ஓட்டல் என்று ஜாதி ஆதிக்கத்தைப் பறை சாற்றி விளம்பரப்படுத்துவதை எதிர்த்து, கவர்னருக்கும், அரசுக்கும் ஓர் அறிக்கை - நோட்டீஸ் அனுப்புவது போல அனுப்பி, “லைசென்ஸ் தரும் அரசு, ஓட்டல்களில் பிராமணாள் கஃபே என்று போடக்கூடாது மற்றதில் ஜாதியைக் கேட்காதே என்று கூறும் பார்ப்பனர்கள் (வகுப்புவாரி உரிமையிலிருந்து தப்பித்து உள்ளே நுழைவதற்காகவே இப்படி ஒரு தந்திர மான வாதம்) இந்த பெயர்ப் பலகையில் “பிராமணனை எடு, நீக்கு! என்று கூறுவதில்லையே ஏன்?” என்று கேட்டார் பெரியார்!

“ஜாதியின் அனுபவ ஆதிக்கமெல்லாம் பெரிதும் உணவிலே தான் வரையறுக்கப்படுகிறது; ஜாதியை ஒழிக்க வேண்டுமென்பவர்கள், அதே உணவுத் தன்மை யில் தான் ஒழிக்கப் பாடுபடவேண்டும். அப்படியிருக்க, எதற்காக உணவு விடுதியில் ஜாதிப் பேர் போட அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்? இப்படி அனு மதிப்பது அரசாங்கத்தின் கொள்கைக்கும் நடப்பிற்கும் முரண்பட்டதாகும். இதை அரசாங்கம் சீர்திருத்தவில்லை யானால் மக்கள் முயற்சித்துச் செய்ய வேண்டியது அவ சியமாகிறது” - விடுதலை அறிக்கை, 27.4.1957

அதற்கு சிலர்,  'அவர் ஓட்டலில்'தானே அவர் அப் படி விளம்பரப் படுத்திக் கொள்ளுகிறார் - அதில் என்ன தவறு என்றும் கேட்கிறார்கள். அதற்கு 27.8.1958இல் கூட பெரியார் விளக்கம் அளித்துப் பேசினார் பல ஊர்களில் - விடுதலை, 30.8.1958

“.... நானும் இருபது வருடமாகச் சொல்லுகிறேன்; பார்ப்பானை ‘பிராமணாள்’ என்று சொல்லாதே; அவனை பிராமணன் என்றால் நீ யார்? ஒருத்தி உன் தெருவில், தன் வீட்டின் முன்பு “இது பதிவிரதை வீடு‘ என்று போர்டு போட்டுக் கொண்டால் மற்றவர்கள் வீடு என்ன என்று அர்த்தம்?” என்று கேட்டு அதை அகற்ற நாடு தழுவி, நடத்திய போராட்டம் 1957 மே மாதத்தில் தொடங்கி  விளம்பரப் பலகைகளில் ‘பிராமணாள்’ என்று இருப்பதை அழிக்க மாபெரும் கிளர்ச்சி செய்தார். தமிழ்நாடெங்கும் பெரும் பகுதி ‘பிராமணாள்’ என்ற சொல் விளம்பரப் பலகைகளில் மறைந்தது!

சென்னை திருவல்லிக்கேணியில் பைகிராப்ட்ஸ் சாலையில் இருந்த ‘முரளீஸ் கஃபே’ என்ற ஓர் ஓட்டலில் ‘பிராமணாள¢ கபே’ பெயரை எடுக்க மாட்டேன் என்று அந்த பார்ப்பனர் பிடிவாதம் பிடித்தார். தந்தை பெரியார் தார் சட்டியுடன் சென்று அப்பெயரை அழித்தார்!

அந்தப் போராட்டம் நாள்தோறும் மறியல் கைது என்று பல மாதங்கள் தொடர்ந்து நடந்து வந்தது. ஜாதி ஒழிப்புக்கான இந்தப் போராட்டத்தில் அன்னை ஈ.வெ. ரா.மணியம்மையார் உட்பட 1023 பேர் கைது, தண்டனை. பல மாதம் கடுங்காவலுடன் சிறையேகி விடுதலை ஆகினர்.

பிறகு அந்த ஓட்டலில் (முரளீஸ் கஃபே) பலகையில் ‘பிராமணாள்’ 22.3.1958இல் ஒழிந்தது! முதலில் வீம்பு பேசிய அந்த ஓட்டல் முதலாளி பார்ப்பனர் சென்னையில் தந்தை பெரியாரை நேரில் சந்தித்து, தனது செயலுக்கு வருத்தமும் தெரிவித்துக் கொண்டார்!

தந்தை பெரியார் அன்பொழுக அவரை வரவேற்று தனது அருகே அமர்த்தி, அவர்மீது காட்டிய அன்பினால் அந்த உரிமையாளர் மிகவும் நெகிழ்ந்து போனார் என்பது வரலாறு!

அதன் தொடர்ச்சிதான், ஜாதியைப் பாதுகாக்கும் வர்ணாசிரம அரசியல் சட்டப் பிரிவுகள் எரிப்புப் போராட்டம் 26.11.1958இல் நாடு தழுவியதாக நடந்து என்பதும் வரலாறு. அரசமைப்புச் சட்ட நகலைக் கொளுத்தியவர் 10,000 பேர் கைது செய்யப்பட்டனர், 3,000 பேருக்கு  6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை கடுங்காமல் விதிக்கப்பட்டது. போராட்டத்தில் தண்டனை அடைந்த பல தோழர்களில், சிறையிலும் - வெளியிலும் மாண்டவர்கள் 18 பேர்கள் என்பது எங்கும் கேட்டிடாத ஜாதி ஒழிப்பு வரலாறு ஆகும்.

திராவிடர் இயக்கம் என்னும் மனித உரிமை இயக்கம் படிப்படியாக நிகழ்த்திக் காட்டிய ஆயுதம் ஏந்தாத புரட்சிகளின் விளைச்சலை அல்லவா இன்று நாம் ஒன்றாக அமர்ந்து ருசித்துக் கொண்டிருக்கிறோம். சமத்துவ உலகிற்கான தலைவாசலாம் சம உரிமைக்கான போராட்டத்தில், அந்தத் தலைவாசலைத் திறந்துவிட்ட தலைமகனாம் நம் தலைவரின் பணியைத் தொடர்வோம்! சமத்துவ உலகம் படைப்போம்!

தொடரும்