ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
வடபுல சமூகநீதிப் போர்த்தளபதி இராம்விலாஸ் பஸ்வான் அவர்களுக்கு நமது வீர வணக்கம்!
October 9, 2020 • Viduthalai • இந்தியா

திராவிடர் கழகத் தலைவர் இரங்கல் அறிக்கை

லோக் ஜன்சக்தி கட்சியின் நிறுவனத் தலைவரும், மத்திய உணவு பொது விநி யோகத் துறை அமைச்சரும், சிறந்த சமூக நீதிப் போராளியுமான அருமை நண்பர் இராம்விலாஸ் பஸ்வான் அவர்கள் (வயது 74) டில்லியில் காலமான செய்தி நமக்கு அதிர்ச்சிக்குரிய பேரிடி போன்ற செய்தியாக உள்ளது!

அருமை நண்பர் இராம்விலாஸ் பஸ்வான் அவர்கள் சமூகநீதி, சமத்துவ உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து போராடிய தலைதாழாச் சிங்கம் போன்றவர். அரசியல் நிலைப்பாடுகளில் பல மாறுபட்ட நிலைகளை எடுத் தாலும்கூட, அடிப்படை லட்சியமான ஜாதி ஒழிப்பு, சமூகநீதி, சுயமரி யாதை உணர்வில் என்றும் உறுதியாகவே இருந்தவர். டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் கொள்கை லட்சியங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

முத்தமிழ் அறிஞர் கலைஞரிடமும், நம்மிடமும் மிகுந்த நட்பும், அன்பும் பாசமும் கொண்டவர். சென்னைக்கு வந்தால் நம்மைச் சந்திக்காமல் செல்ல மாட்டார்!

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்த  அவர் எடுத்த அளப்பரிய  முயற்சிகள் என்றென்றும் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை யாகும்.

1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 4.24 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கின்னஸ் சாதனை படைத்த தலைவர்.

அவரது மறைவு வட இந்திய  சமூகநீதித் தலைவர்களில் மூத்த ஒருவரை நம்மிடமிருந்து பறித்துவிட்டது!

அவரது இழப்பு ஒடுக்கப்பட்ட மக்களின் போர்த்தளபதி ஒரு வரின் இழப்பாக, ஈடுசெய்ய முடியாத இழப்பாக உள்ளது. அவரை இழந்துவாடும் அவரது வாழ்விணையர், அவர் மகன் சிராக் பஸ்வான் மற்றும் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும்!

ராம் விலாஸ் பஸ்வான் அவர்களுக்கு நமது வீரவணக்கம்! வீரவணக்கம்!!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

8.10.2020