ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
வடகலை - தென் கலைப் பிரிவினரிடையே மோதல்
October 25, 2020 • Viduthalai • மற்றவை

தமிழர்கள் கோவிலுக்கு வெளியே தான் தமிழில் பாடவேண்டுமாம்! வரதராஜப் பெருமாள் கோவில் பார்ப்பனர்களின் திமிர்த்தனம்

காஞ்சிபுரம், அக்.25 காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மணவாள மாமுனி களின் உற்சவ விழாவில் பார்ப்பனர் அல்லாதவர்கள் கோவிலுக்கு உள்ளே நுழைந்து  திவ்யப் பிரபந்தம்  தமிழில் பாட அனுமதி இல்லை என மறுக்கப்பட்டுள்ளது.

 காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தமிழில் நாலாயிர திவ்யப் பிரபந்தம் பாடுவதில் பார்ப்பனர்களுக்கும் பார்ப் பனர் அல்லாதவர்களுக்கும்  இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால், பெரும் பர பரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம்  வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள மணவாள மாமுனிகளின், 650ஆவது உற்சவ விழா, கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. 10 நாட்கள்  நடக்கும் இந்த உற்சவம் கரோனா தொற்று காரணமாக, இந்தாண்டு எளிமையாக நடந்தது. விழாவின், 10ஆவது நாளான  நேற்று முன்தினம் இரவு சாற்று முறை உற்சவம் நடந்தது. இதில் மணவாள மாமுனிகள் சன்னதியில் சமத்துவ வழி பாடு நடத்த வேண்டும். இந்து அறநிலையத் துறை ஆணையர் உத்தரவை நடை முறைப்படுத்த வேண்டும். திவ்யப் பிரபந்த பாடல்களை தமிழில் பாட வேண்டும் என பார்ப்பனர் அல்லாதவர்கள் முயன்றனர். ஆனால், அவர்களை பார்ப்பனர்கள் தடுத்தனர்.

இதனால், இரு தரப்பினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டது.  அந்த நேரத்தில், மணவாள மாமுனிகள் சன்னதியில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி திவ்யப் பிரபந்தம் தமிழில் பாட முயன்ற திருமாலடியார் மாதவ ராமானுச தாசன் என்பவரை தள்ளிவிடும் நோக்கில் பார்ப்பனர்கள் நடந்துகொண்டதால் மிகவும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து விஷ்ணு காஞ்சி காவல் துறையினர் அங்கு சென்று இரு தரப் பினரையும் எச்சரித்து விலக்கி விட்டனர். காவல்துறையினர், கோயில் நிர்வாக அலு வலர், இரு தரப்பினரையும் சமாதானப் படுத்தி மணவாள மாமுனிகள் சன்னதியில் உள்ளே ஏற்கெனவே பாடிக்கொண்டிருந்த தென்கலை பிரிவை சேர்ந்த பார்ப்பனர் களையும் எழுப்பி வெளியே அனுப்பி விட்டனர்

இதுகுறித்து வடகலை பார்ப்பனர்கள் கூறுகையில், ”கோயிலில்  பார்ப்பனர் அல்லாத இந்துக்கள் வாசற்படி வெளியே மட்டுமே நாலாயிர திவ்யப் பிரபந்தம் பாடமுடியும். இவர்கள் மாமுனிவர் மண்டபத்தில் உட்புறம் சென்று பாடல் ஓதிடவும், சடாரி, பிரசாதம், தீர்த்தம் ஆகியவை பெறவும் அனுமதி கிடையாது" என்று கூறினர்.

இது குறித்து பக்தர்கள் கூறும் போது ”தமிழில் திவ்யப் பிரபந்தம் பாட வருப வர்களை அனுமதிக்காமல், தள்ளிவிட்டு தடுக்கப்படுவதை கண்டித்து இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு பலமுறை புகார் தெரிவிக் கப்பட்டுள்ளது. இதேபோல் இராமானு ஜரின் 1000ஆவது ஆண்டிலும் இக் கொடுமை தொடர்வதற்கு மணவாள மாமுனிவர் சந்நிதி தரப்பினர் தொடர்ந்து காரணமாக உள்ளனர்” என்றனர்.

2018 ஆம் ஆண்டு சந்நிதியில் தமிழில் பாட தடைவிதிக்கவேண்டும் என்று வடகலை சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, அந்த வழக்கு விசாரணையின் போது கோவில் என்பது அனைவரின் வழிபாட்டுக்கு உரிய இடம் என்றும், இதில் வடகலை தென்கலை பிரிவினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது மோசமானது என்று   நீதிபதி வேதனை தெரிவித்தார்.

உலகம் இருக்கும் வரை, இந்த வேறுபாடு தீராது போலும். நாங்கள், மனித குலம் என, கூறிக்கொள்வோர், முதலில், மனித குலம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் தங்களுக்குள் குல உயர்வு பார்ப்பதை விடுத்து, எல்லோரும் மனிதகுலம் என்பதை உணர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். பின்னர் மாவட்ட நிர்வாகம் கோவில் நிர்வாகம் இந்த விவகாரம் தொடர்பாக முடிவெடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.