ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ரிசர்வ் வங்கி - சி.பி.அய் . - தேர்தல் ஆணையம் - ஊடகங்கள் அனைத்துமீதும் ஆதிக்கம்!
September 4, 2020 • Viduthalai • இந்தியா

சர்வாதிகாரத்தின் பிடியில் இந்தியா?

‘தி வயர்' இணைய தளத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்றவர் தீட்டிய கட்டுரை

புதுடில்லி, செப்.4   தன்னாட்சி  ஆதிக்கம் கொண்ட நிறுவனங்கள் அனைத்தும் பி.ஜே.பி. ஆட்சியில் முடக்கப்பட்டு, சர்வாதிகார ஆட்சி இந்தியாவில் நடைபெறுகிறது என்று ‘சாகித்ய அகாடமி' விருது பெற்ற பிரபல எழுத்தாளர் தேவனூரா மகாதேவா ‘தி வயர்' இணைய தளத்தில் கட்டுரையாகத் தீட்டியுள்ளார்.

கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

பிரஷாந்த் பூஷன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அவருக்கு ஒரு ரூபாய் அபராதம் அல் லது 3 மாதங்கள் சிறைத் தண்டனை, மூன்றாண் டுகள் வழக்குரைஞர் தொழில் செய்யத் தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது பற்றி, எனது நண்பரான ரவி வர்மாகுமாருடன் பேசி னேன். அப்போது, “நீதித்துறையே ஒரு குற்றச் சாட்டை முன்வைக்கிறது; அந்தக் குற்றச்சாட்டை அதுவே விசாரிக்கிறது; பின்னர் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு விட்டதாகக்கூறி  ஒரு தீர்ப்பை வழங்குகிறது; இதுதான் உச்சநீதிமன்றத்தில் நடந் துள்ளது” என்றார் அவர். உண்மையும் அதுதான்.

நீதிமன்றத்தின் நிலை!

மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தனது உத்தரவுகளை நிறைவேற்றுவதற்கு முன்பு பூஷன் சமர்ப்பித்த பதிலைக் கூட தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டிருப்பதைப் போன்று, இந்தத் தீர்ப்பும் கண்களைக் கட்டிக்கொண்டு, உண்மை யைப் பார்க்காமல் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய நிலையில், பயம் என்பது நீதித்துறையை மட்டும் ஆட்டுவிக்கவில்லை. மாறாக, நிர்வாகம், சட்ட அவைகள் மற்றும் மீடியாவையும் பீடித்துள்ளது. எந்தவொரு தன்னாட்சி அமைப்பும், இன்று தன்னாட்சியுடன் செயல்பட முடியவில்லை. ‘ரஞ்சன் கோகோய், தான் பதவி வகித்தபோது (அவரை நீதிபதி என்று நான்அழைக்க மாட்டேன்), பாஜக அரசின் முன்பாக மண்டியிட்டு, ஒட்டுமொத்த உச்சநீதிமன்றத்தையும் அவர்களிடம் கையளித்து விட்டார்’ என்று  மார்க்கண்டேய கட்ஜூ கூறியி ருந்ததை நாம் இங்கே நினைத்துப் பார்க்கலாம்.

அரசமைப்புச் சட்டத்தை எரிப்பதுகூட இங்கு நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகாது. அதனால்தான், அரசமைப்பின் பெயரில் பதவியேற்கும் அந்த  அரசியல் தலைவர்கள், “நாங்கள் அரசமைப்பை மாற்ற வந்திருக்கிறோம்” என்று கூறும்போது, ​​யாரும் அதனை நீதிமன்ற அவமதிப்பு என்று குற்றம் சாட்டத் துணிவதில்லை. அவர்கள் அரசமைப்பை எரித்தாலும், அது நீதிமன்றங்களை அவமதிப்பதாக இருக்காது. ஆனால் நீதிமன் றத்தின் கவுரவத்தைப் பாதுகாக்க முற்படும் பிரசாந்த் பூஷனின் டுவீட்டுகள் மட்டும் இந்த நீதிபதிகளால் அவமதிப்பாகி  விடுகின்றன. நீதி மன்றத்தின் கண்ணியம் காக்கப்பட வேண்டுமென குரல்கொடுத்த பூஷன், நீதிபதிகளுக்கு குற்ற வாளியாக தெரிந்துள்ளார்.

இந்தியா இதற்கு முன்னதாக இப்படியொரு சூழலை சந்தித்தது இல்லை. இந்திரா காந்தி அமல்படுத்திய நெருக்கடி நிலையின்போதுகூட, நீதித்துறையில் நல்ல  விழுமியங்கள் இருந்தன. அதேபோன்று தேர்தல் ஆணையம், மத்திய ரிசர்வ் வங்கி, சிபிஅய், மீடியா உள்ளிட்ட பல வற்றிலும் அப்படியேதான். அந்த நெருக்கடி நிலையானது ஒருவகையில் புலியைப் போன்றது. அது எதையும் நேரடியாக எதிர்கொண்டது. முகத் திற்கு   முகம் என்பதாகஇருந்தது. ஒடுக்குமுறைகள் இருந்தாலும், போராட்டங்களும் நடைபெற்றன.

பசுத்தோல் போர்த்திய புலி

ஆனால், இன்றைய நெருக்கடி நிலையானது, பசுத்தோல் போர்த்திய புலியாக உள்ளது. இது காப்பான் போல் முகமூடிபோட்டுக் கொண்டு வருகிறது. இது எதையும் முகத்திற்கு நேராக எதிர்கொள்வதில்லை.  ஆனால், இப்போதுதான் நாட்டின்அனைத்துத் தன்னாட்சி அமைப்புகளின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன. சுதந்திரமான தன்னாட்சி  நிறுவனங்கள் பாதி  உயிருடனேயே இருக்க வேண்டிய நிலையிலும், சர்வாதிகாரியின் விருப்பத்தின்படி செயலாற்ற வேண்டிய நிலை யிலும் உள்ளன. இந்தியாவின் நிலை தற்போது மாபெரும் ஆபத்தில் உள்ளது. வேலையின்மை நம்மை உண்ணுகிறது. நாட்டில்வறுமை என்பது பசிக்கொடுமை என்ற நிலைக்கு மாறிச் செல்கிறது. பொதுச்சொத்துக்களை தனியார் நிறுவனங் களுக்கு விற்றால் மட்டுமே அரசாங்கத்தால் இயங்க முடியும் என்ற நிலை உள்ளது. இது தொடர்பான மக்களின் கோபங்களை அடக்கு வதற்காகவே  பிரஷாந்த் பூஷனின் ‘டுவிட்டர்' பதிவை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி, பொது நலனுக்கான குரலை நசுக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு தேவனூரா மகாதேவா கூறியுள்ளார்.