ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ராஜாஜி திணிக்க முயற்சித்ததை மோடி சர்க்கார் திணிக்கிறது
August 19, 2020 • Viduthalai • அரசியல்

சமூகநீதிக் கருத்தரங்கத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்

மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அவர்களின் உரை

சென்னை, ஆக. 19- ராஜாஜி இங்கே திணிக்க முயற்சித்த குலக்கல்வி முறையை, இன்றைக்கு மத்தியில் இருக்கிற மோடி சர்க்கார் வலுக்கட்டாயமாக நம்மிடத்திலே நாட்டிலே திணிக்க முயற்சிக்கிறது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள் உரை யாற்றினார்.

கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் சமூகநீதி கருத்தரங்கம்

கடந்த 7.8.2020 அன்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் சமூகநீதி கருத்தரங்கத்தில்' (காணொலிமூலம்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலா ளர் இரா.முத்தரசன்  அவர்கள் நினைவுரையாற்றினார்.

அவரது நினைவுரை வருமாறு:

பெருமதிப்பிற்கும், போற்றுதலுக்கும் உரிய கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில், அவருக்குப் புகழஞ்சலி செலுத்தக் கூடிய முறையில், சமூகநீதிக் கருத்தரங்கமாக ஏற்பாடு செய்து, பெரியார் திடலிலிருந்து காணொலிக் காட்சி வழியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்நிகழ் விற்குத் தலைமை ஏற்று சிறப்பாக நடத்திக் கொண் டிருக்கின்ற நம் அனைவருடைய போற்றுதலுக்குரிய, நமக்கு நல்ல வழிகாட்டுதலைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்ற திராவிடர் கழகத் தலைவர் பெரு மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கும், நிறைவாக இந்நிகழ்வில் மிகச் சிறப்பானதொரு உரையை ஆற்ற விருக்கின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழ கத்தின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணன் வைகோ அவர்களுக்கும்,

இந்நிகழ்வில் பங்கு பெற்று மிகச் சிறப்பான முறை யில் நல்ல கருத்துகளையெல்லாம் கூறியிருக்கின்ற, கூறவிருக்கின்ற மதிப்பு வாய்ந்த தலைவர்களுக்கும், இந்த நிகழ்வை காணொலிக் காட்சி வாயிலாகக் கண்டுகொண்டிருக்கின்ற, கேட்டுக் கொண்டிருக்கின்ற அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் சார்பில் முதலில் எனது அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கலைஞர் அவர்கள் என்றென்றும் நம்மோடு வாழ்கிறார், வாழ்ந்துகொண்டே இருப்பார்!

இன்றைய தினம் கலைஞர் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. பிரிந்து என்று சொல்கின்றபொழுது, ஆசிரியர் அவர்களும், மற்றவர்களும் குறிப்பிட்டதைப்போல, நம்முடைய நெஞ்சங்களில், தமிழ் மக்களின் அனை வருடைய நெஞ்சங்களில், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட அனைத்து மக்களுடைய நெஞ்சங்களில் நிலைத்து நிற்கக்கூடிய தலைவர். நாம் இயற்கையை ஏற்றுக் கொள்பவர்கள்; இயற்கையை மதிப்பவர்கள்; இயற்கையை நம்புகிறவர்கள்; இயற்கை விதிகளை ஏற்றுக்கொண்டவர்கள் என்கிற முறையில், இயற்கை விதியின்படி கலைஞர் மறைந்திருந்தாலும், அவர் என்றென்றும் நம்மோடு வாழ்கிறார், வாழ்ந்து கொண்டே இருப்பார் என்பதில் எந்தவிதமான அய்யப்பாடும் கிடையாது.

இன்றைக்கு அவருடைய நினைவு நாளில், இந்தக் கருத்தரங்கில் எனக்கு முன்பு உரையாற்றிய மதிப்பு மிக்க ஆசிரியர் அவர்களும், கவிஞர் அவர்களும், ரவிக்குமார் அவர்களும், அழகிரி அவர்களும், அதே போன்று நம்முடைய சுப.வீ. அவர்களும் பல நல்ல கருத்துகளை, சிறப்பான கருத்துகளை எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

குறிப்பாக கல்வி குறித்து மிக அதிகமான கருத்து களை எல்லாம் மிகச் சிறப்பான முறையில், இன்றைய தேவை கருதி வழங்கியிருக்கிறார்கள். கரோனாவின் கொடிய காலம் இது. கடந்த ஜனவரி மாதம் முதற் கொண்டே கரோனா வைரஸ் பரவி விட்டது என்று சொன்னாலும், அதுகுறித்து மத்திய - மாநில அரசுகள் சிறிதும் கவலைப்படாமல், வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டு இருந்து, பிறகு மார்ச் மாதம் திடீரென விழித்துக் கொண்டவர்களைப் போல ஊர டங்கு அறிவித்து, இன்றைக்கும் ஊரடங்கு அமலில் இருக்கிறது.

இல்லையென்று சொன்னால், இன்றைக்கு இதே நாளில், தமிழ்நாடு முழுவதும் இந்நிகழ்ச்சி நடைபெற் றுக் கொண்டிருக்கும். இங்கே இருக்கின்ற நாம் அனைவரும், எங்கோ ஓரிடத்தில் இருந்து கலைஞர் அவர்களுடைய பெருமைகளைப்பற்றி, சிறப்புகளைப் பற்றி மணிக்கணக்காக பேசுவதற்கு வாய்ப்பு உண்டு. கரோனாவின் காரணமாக, காணொலி வாயிலாக இந்தக் கூட்டத்தை நடத்தவேண்டிய நிலையில் இருக்கிறோம். அதை பெரியார் திடலில் இருந்து நடத்துகின்றபொழுது, அது நமக்குப் பெருமையாக இருக்கின்றது.

இந்தக் கரோனா தொற்று காலத்தில் நாம் பலரை இழந்திருக்கின்றோம். குறிப்பாக, திராவிட முன்னேற் றக் கழகச் சட்டமன்ற உறுப்பினர் தோழர் அன்பழ கனை இழந்திருக்கின்றோம். தோழர் திருமாவளவன் அவர்களுடைய சகோதரி பானுமதி அவர்களை இழந்திருக்கின்றோம். இதுபோன்று பல நண்பர் களையும், தோழர்களையும் நாம் இழந்திருக்கின்றோம். லட்சக்கணக்கான மக்கள் கரோனா தொற்றால் பாதிக் கப்பட்டு இருக்கிறார்கள்.

‘‘கடவுளுக்குத்தான் தெரியும்'':

முதலமைச்சரின் பதில்!

இந்தக் கரோனா தொற்று எப்பொழுது முடியும் என்று முதலமைச்சரிடம் கேட்டபொழுது, ‘‘கடவுளுக் குத்தான் தெரியும்'' என்று கைகழுவி விட்டார். கரோனா தொற்று நீடித்துக் கொண்டிருக்கின்றதே, ஊரடங்கும் நீடித்துக் கொண்டிருக்கிறதே என்று இதைப்பற்றி நாம் கவலைப்படுகிறோம். இது எப்பொ ழுது முடிவுக்கு வரப் போகிறது? மக்கள் காப்பாற்றப் படவேண்டும்; மக்கள் நிம்மதியாக இருக்கவேண்டும். மக்கள் எல்லாம் பீதியிலும், கவலையிலும் இருக் கிறார்கள்; அவர்களை அந்தப் பீதியிலிருந்தும், கவலையிலிருந்தும் மீட்கவேண்டும் என்று நாம் மக்களைப்பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக் கின்றபொழுது, மத்தியிலும், மாநிலத்திலும் ஆண்டு கொண்டிருப்பவர்கள், இந்தச் சூழலை தங்களுக்கு மிக சாதகமான அரசியல் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இதனை எனக்கு முன் உரையாற்றிய, ஆசிரியர் தொடங்கி அத்துணை பேருமே, மதச்சார்பின்மை கொள்கை குறித்து மிக வலுவான முறையில் தங்களது கருத்துகளை எடுத்துக் கூறினார்கள்.

மத்தியில் எந்தக் கட்சி வேண்டுமானாலும், ஜனநாயக முறைப்படி ஆட்சிக்கு வரலாம். ஆனால், அப்படி வருகின்ற அந்தக் கட்சி ஆட்சி நடத்துகின்ற பொழுது, அது மதச்சார்பின்மை என்கிற கொள்கை யைப் பின்பற்றித்தான் ஆட்சி நடத்தவேண்டும் - நம்முடைய அரசமைப்புச் சட்டப்படி!

மத்திய அரசு, மதச்சார்பின்மை என்ற மகத்தான கொள்கையை குழிதோண்டி புதைத்துவிட்டது

ஆனால், கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி, மத்திய அரசு, மதச்சார்பின்மை என்ற மகத்தான கொள்கை யைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டது. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் கடந்த 5 ஆம் தேதி என்ன செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

தமிழ்நாட்டில் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, காஞ்சிபுரத்தில் ரயில் நிலையத் திறப்பு விழா நிகழ்ச்சியில், காஞ்சி சங்கராச்சாரியார் திறந்து வைப்பார் என்று அழைப்பிதழில் அச்சிடப் பட்டு இருந்தது. அந்த அழைப்பிதழில், தமிழ்நாட்டு அமைச்சரும் கலந்துகொள்வார் என்று அச்சிடப்பட்டு இருந்தது.

தோழர் சுப்பராயன்

சட்டப்பேரவையில், தற்போது நம்முடைய அணி யின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற தோழர் சுப்பராயன், அன்றைக்குச் சட்டமன்ற உறுப் பினராக இருந்தார்.

அவையில் ஓர் ஒழுங்குப் பிரச்சினையைக் கிளப் பினார். "நம்முடைய அரசு மதச்சார்பற்ற அரசு. கலைஞர் அவர்களுடைய தலைமையில் இருக்கின்ற அமைச்சரவையில் அங்கம் பெற்றிருக்கின்ற அமைச் சர், சங்கராச்சாரியார் கலந்துகொள்கின்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாமா? இது மதச்சார்பின்மைக் கொள்கைக்கு எதிரானது அல்லவா?" என்று கேள்வி எழுப்பினார்.

கலைஞர் அவர்கள், சுப்பராயன் அவர்களுக்குப் பதில் கூறுகிறபொழுது, ‘‘ஆம், உண்மைதான்! அதில் மற்றவர்களையும் பங்கு பெற்றிருக்கச் செய்திருக்க வேண்டும். கிறித்தவர்களையும், இஸ்லாமியர்களையும் பங்கு பெற்றிருக்கச் செய்யவேண்டும். சுப்பராயன் சொல்வது உண்மைதான்'' என்று சொன்னாரே தவிர, தன் அமைச்சரவையில் உள்ள அமைச்சர் அந்த விழாவில் கலந்துகொள்கிறார் என்பதற்காக, அதனை நியாயப்படுத்திப் பேசவில்லை.

ஆனால், இன்றைக்கு நிலைமை என்ன என்பதை, கடந்த 5 ஆம் தேதி நாம் பார்த்துவிட்டோம். நாட்டினு டைய பிரதமர், இன்னும் மற்றவர்களும் - மதவெறி பிடித்தவர்களோடு சேர்ந்து அடிக்கல் நாட்டுகிற நிகழ்ச்சியில் பங்கேற்றதை நாம் பார்த்தோம்.

ஆக, மதச்சார்பின்மைக் கொள்கை என்ன ஆனது என்ற கேள்வி எழுகிறது. இது ஏதோ நமக் குரிய, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இருக்கின்ற மதச்சார்பற்ற கட்சிகளைச் சார்ந்தவர்க ளுடைய பிரச்சினை மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டு நலன் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதை இங்கே நான் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

அதுமட்டுமல்ல, கடந்த மார்ச் மாதம் முதல் இன்றுவரை குறிப்பிட்ட காலத்திற்குள்ளாக, இன் றைக்கு நாம் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை நினைவுகூர்ந்து, அவர் ஆற்றிய பணிகளையெல்லாம், அவருடைய சிறப்புக ளைப்பற்றியெல்லாம் இங்கே எடுத்துக் கூறுகிற பொழுது, அவர் ஆட்சியில் எத்தகைய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதோ,  அவற்றுக்கெல்லாம் இன் றைக்குச் சாவு மணி அடிக்கிற அல்லது சவக்குழி தோண்டுகிற காரியத்தை மிகுந்த துணிச்சலோடு மத்தியில் இருக்கிற ஆட்சி மேற்கொண்டிருக்கிறது.

கல்வி குறித்து, ரவிக்குமார் அவர்களும், சுப.வீ. அவர்களும், ஆசிரியர் அவர்களும் நிறைய கூறி னார்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, குறிப் பிட்ட ஒரு சிறு பகுதியினர் மட்டும்தான் கற்பதற்கும், கற்பிப்பதற்கும் உரிமை படைத்தவர்கள் என்று மனு தர்மம் சொல்லுகிறது. அந்த மனுதர்மம் இன்றைக்கு உறுதிப்படுத்தப்படுகிறது.

இராஜாஜி அவர்கள் தமிழ்நாட்டில் முதலமைச் சராக இருந்தபொழுது, பாதி நேரம் கல்வி; பாதி நேரம் தந்தை செய்கிற வேலை என்ற முறையைக் கொண்டு வந்தார்.

மோடி சர்க்கார் வலுக்கட்டாயமாக

நாட்டிலே திணிக்க முயற்சிக்கிறது

அன்றைக்குத் திராவிட இயக்கமும், கம்யூனிஸ்ட் பேரியக்கமும் அதனைக் கடுமையாக எதிர்த்தன. நம்மோடு சேர்ந்து இராஜாஜியை முதலமைச்சராக அமர்த்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களும் எதிர்த்தார்கள். அதனைக் குலக்கல்வி என்று சொன்னோம். "என்னு டைய கட்சிக்காரர்களே, நான் கொண்டு வந்த சட்டத் தைக் ஏற்காத காரணத்தினால், நான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்" என்று சொல்லி, ராஜாஜி  முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

அதே குலக்கல்வி முறையை, ராஜாஜி இங்கே திணிக்க முயற்சித்த குலக்கல்வி முறையை, இன்றைக்கு மத்தியில் இருக்கிற மோடி சர்க்கார் வலுக்கட்டாயமாக நம்மிடத்திலே நாட்டிலே திணிக்க முயற்சிக்கிறது.

சகோதரர் ஸ்டாலின் அவர்கள்

சொன்ன யோசனை!

ஆக, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலமாக கல்வி உனக்குக் கிடையாது - நீ கற்பதற்கு உரியவனல்ல - கற்பிக்கப்படுவதைக் கேட்பதற்கும் உனக்கு உரிமையில்லை. அப்படி மீறி கேட்டால், காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்று எந்த மனுதர்மம் சொன்னதோ, அந்த மனுதர்மத்தை இன்றைக்கு அமல்படுத்துவதற்காக - புதிய தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரால், இன்றைக்குக் கொண்டு வருகிறார்கள். இதனை எதிர்த்து நமது அணியில் உள்ள கட்சிகள், மிக ஒற்றுமையோடு போராடினோம். தனித்தனியாக அறிக்கை விட்டாலும்கூட, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் பேரன்பிற்குரிய சகோதரர் ஸ்டாலின் அவர்கள் ஒரு யோசனையை சொன்னார்; நாம் அத்துணை பேரும் சேர்ந்து கையொப்பமிட்டு, முதலமைச்சருக்குக் கடிதம் அனுப்புவோம் என்று சொன்னார். அதன்படியே முதலமைச்சருக்குக் கடிதம் அனுப்பினோம். அதற்குப் பிறகுதான், முதலமைச்சர், இருமொழிக் கொள்கை யைத்தான் நாங்கள் ஏற்போம்; மும்மொழிக் கொள் கையை ஏற்கமாட்டோம் என்று தெரிவித்திருக்கிறார்.

- தொடரும்