ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ரத்தத்தில் ஆக்சிஜன் அளவைக் கண்டறிய 43 ஆயிரம் ‘பல்ஸ் ஆக்சிமீட்டர்’ கருவிகள் வாங்க முதல்வர் உத்தரவு
July 13, 2020 • Viduthalai • தமிழகம்

சென்னை, ஜூலை 13- கரோனா பாதித்தவர்களுக்கு ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை எளிதாக கண்டறிய 43 ஆயிரம் ‘பல்ஸ் ஆக்சி மீட்டர்’ கருவியை வாங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ள தாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை குணப்படுத்துவதற்கு தேவையான மருந்தோ அல்லது தடுப்பூசியோ இல்லாத இன்றைய சூழலில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு குறைவான அறிகுறிகளுடன் உள்ள நோயாளிகள் கரோனா பரா மரிப்பு மய்யங்களிலும், மிதமான அறிகுறிகளுடன் கூடிய நோயாளி கள் கரோனா நல மய்யங்களிலும், தீவிர தொற்று அறிகுறிகளுடன் உள்ள நபர்கள் கரோனா மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்படு கிறார்கள்.

கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ள நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை தொடர்ந்து கண்காணிக்கவேண்டியது அவசியமாகிறது. ஏனெனில், அவர்களின் ரத்தத்தில் உள்ள ஆக்சி ஜன் குறையும் பொழுது மூச்சுத்திணறல் ஏற்பட்டு நோயாளிகள் உயிரிழக்கும் வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்கும் பொருட்டு நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை கணக்கிட ‘பிங்கர் பல்ஸ் ஆக்சிமீட்டர்‘ என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது.

கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை வெகு எளிதாக அளவிட ஏதுவாக இந்த கருவியை அதிக அளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர முதல்-அமைச்சர் உத்தரவிட்டதை தொடர்ந்து, தமிழ்நாடு மருத்துவ பணிகள் சேவை கழகத்தின் மூலமாக 43 ஆயிரம் ‘பிங்கர் பல்ஸ் ஆக்சிமீட்டர்‘ கருவிகளை கொள்முதல் செய்ய ஆணை வெளியிடப்பட்டு, இதுவரை 23 ஆயிரம் கருவிகள் தருவிக்கப்பட்டுள் ளன. மீதம் உள்ள கருவிகள் இன்னும் ஓரிரு நாட்களில் பெறப்படும். தேவையின் அடிப்படையில் இந்த கருவிகள் கூடுதலாக கொள்முதல் செய்யப்படும்.

இந்த கருவி, அறிகுறிகள் இல்லாமல் நோய்த்தொற்றால் பாதிக்கப் பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளின் இல்லங் களுக்கே நேரடியாக சென்று ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவினை கண்காணிக்கவும், காய்ச்சல் சிகிச்சை மய்யங்கள், கரோனா பரா மரிப்பு மய்யங்கள், கரோனா நல மய்யங்கள் மற்றும் மருத்துவமனை களில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவினை கண்காணிக்கவும் அதிக அளவில் பயன் பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரின் இது போன்ற மக்கள் நலன் காக்கும் பணிகள் கரோனா தொற்று மூலம் ஏற்படும் உயிரிழப்புகளை பெருமளவில் குறைக்க உதவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.