ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ம.ம.கட்சியின் அமைப்புச் செயலாளர் அஸ்லம் பாஷா மறைவு
July 21, 2020 • Viduthalai • மற்றவை

மனித நேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும், ஆம்பூர் தொகுதி யின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான  அஸ்லம்  பாஷா (வயது52) இன்று (21.7.2020) அதிகாலை 5 மணியளவில்  மறைவுற்றார். 2011 முதல் 2016 வரை 14ஆவது சட்டமன்றத்தில் புதிதாகத்  தோற்றுவிக்கப்பட்ட ஆம்பூர் தொகுதியின் முதல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆம்பூர் தொகுதியின் வளர்ச்சிக்காக சிறப்பாக செயல்பட்டவர். அவருக்கு மனைவியும், மகளும். மகனும் உள்ளனர்.