ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
மேல்நிலைப்பள்ளி வகுப்புகள் எப்போது தொடங்கும்
August 22, 2020 • Viduthalai • தமிழகம்

மேல்நிலைப்பள்ளி வகுப்புகள் எப்போது தொடங்கும்?

தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை,ஆக.22- கரோனா பரவல் காரணமாக எஸ்.எஸ். எல்.சி. பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்தது. காலாண்டு மற் றும் அரையாண்டு தேர்வுக ளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வருகைப்பதிவின் அடிப் படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, மதிப் பெண் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் பள்ளிகளில் படிக்காமல் நேர டியாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத ‘ஹால் டிக்கெட்’ பெற் றிருந்த தனித்தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக் கக்கோரி, சென்னை உயர்நீதி மன்றத்தில், கோவையை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “தனித்தேர் வர்களுக்கான தேர்வுகள் வரு கிற செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும், பிளஸ்-1 வகுப்புக்கான மாண வர் சேர்க்கையும், பாலிடெக் னிக் மாணவர் சேர்க்கையும் வருகிற 24ஆம் தேதி தொடங்க உள்ளதால், தனி தேர்வர்களை யும் தேர்ச்சி பெற்றதாக அறி விக்க உத்தரவிடவேண்டும். அதுவரை, மேல்நிலைப்பள்ளி மற்றும் பாலிடெக்னிக் மாண வர் சேர்க்கையை தள்ளி வைக்கவேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர், “மேல்நிலை மற்றும் பாலி டெக்னிக் வகுப்புகள் எப் போது தொடங்கப்பட உள் ளது? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு, விசார ணையை 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.