ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
முழு ஊரடங்கு நாளில் மின் நுகர்வு 6 கோடி யூனிட் குறைந்தது
August 13, 2020 • Viduthalai • தமிழகம்

சென்னை, ஆக. 13- முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட கடந்த ஞாயிறன்று மின் நுகர்வு 6 கோடி யூனிட்கள் குறைந்தன.தமிழகத்தில் தினமும் சராசரியாக 30 கோடி யூனிட்கள்என்ற அளவில் மின்நுகர்வு உள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி தினசரி மின்நுகர்வு 36.99 கோடியாக அதிகரித்தது. இதுவே இதுவரை உச்ச அளவாக உள்ளது.

தற்போது ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு தொழிற்சாலைகள், வணிகநிறுவனங்கள் உள்ளிட்டவை செயல்படத் தொடங்கி உள்ள தால், தற்போது தினசரி மின்நுகர்வு 29 கோடி யூனிட்கள் என்ற அள வில் உள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் கடந்த ஞாயிறன்றுகடைகள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டன. இதனால், அன்றையதினம் மின்நுகர்வு 5.97 கோடியூனிட்கள் சரிவடைந்து, மின்நுகர்வு 22.57 கோடி யூனிட்களாக இருந்தது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

நூல்கள் வாசிப்பில் குழந்தைகளின்  ஆர்வத்தைத் தூண்டும் நடமாடும் நூலகம்

பள்ளி ஆசிரியரின் பாராட்டத்தக்க செயல்

சண்டிகர், ஆக. 13- பஞ்சாப் மாநிலம் மொகாலியைச் சேர்ந்த சந்தீப் குமார் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் குடிசைப் பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்காக நடமாடும் நூலகம் நடத்தி வருவதுடன், குழந்தைகள், மாணவர்களுக்குத் தேவையான புத்த கங்கள் மற்றும் பாட நூல்களையும் அளித்து ஏழை, எளிய மாணவர் கள் பயன்பெறும வகையில் பேருதவி செய்துவருகிறார்.

ஆசிரியர் சந்தீப்குமார் கூறுகையில்,”நான் ஒரு பள்ளி ஆசிரியர் என்பதால் மாணவர்களைப் பற்றி எனக்குத் தெரியும். அவர்களிடம் பென்சில், நோட்டுப் புத்தகங்கள் போன்ற அடிப்படைப் பொருட்கள் கூட இல்லை. அதனால்தான் இது போன்ற வழி மூல மாக அவர் களுக்கு உதவலாம் என்று முடிவு செய்தேன்” என்றார்.

 

கோவிட்-19 கட்டுப்படுத்த மருத்துவச் சேவை

சென்னை, ஆக. 13- தற்போதைய கரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள நெருக்கடியான சவால்களைச் சமாளிக்க, நவுக்ரி.காம் உடன் இணைந்து, இலாப நோக்கற்ற ஒரு சுகாதார நிறுவனமான  எகோ (Echo) இந்தியா இன்று கோவிட் ஹெல்த்கேர் ப்ரொஃபஷனல்ஸ் என்ற தனித்துவமான முயற்சியை அறிமுகப்படுத்தியது.

இந்தியா முழுவதும் அதிகரித்து வரும்  நோயாளிகளை நிர்வகிக் கவும், கட்டுப்படுத்தவும் மிகவும் திறமையான சுகாதார வல்லுநர் களுக்கும், சுகாதார வசதிகளுக்கும் இடையிலான தேவை மற்றும் அணுகல் இடை வெளியைக் குறைப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.

 கோவிட்-19 இலிருந்து வெளிவரும் பல சவால்களை எதிர் கொள்ள திறமையான நிபுணர்களின் பற்றாக்குறையை எதிர்கொள் ளும் பயிற்சி பெற்ற சுகாதார நிபுணர்களை சுகாதார வசதிகளை பயன்படுத்துவதன் மூலம் கரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான நாட்டின் போரில் முக்கிய பங்கு வகிப்பதில்  ஹெல்த்கேர் ப்ரொஃப ஷனல்ஸ் முயற்சி உறுதிபூண்டுள்ளது என  இந்நிறுவன தலைவர் டாக்டர் குமுத் ராய் தெரிவித்துள்ளார்.

 

முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை

ஆன்லைனில் நடத்த தமிழக அரசு அனுமதி

சென்னை, ஆக. 13- கடந்தாண்டு வரை சென்னை அண்ணா பல்கலை.யில்  முதுகலை பொறியியல் படிப்புகளுக்கு நேரடி கலந் தாய்வு நடைபெற்று வந்தது. இந்தநிலையில் கரோனா காரணமாக எம்.இ. எம்.டெக் போன்ற படிப்புகளுக்கு ஆன்லைன் கலந்தாய்வு நடத்த தமிழக அரசிடம்  அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி கேட்டிருந்தது. இந்நிலையில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக் கான கலந்தாய்வை ஆன்லைன் மூலம் நடத்த தமிழக அரசு அனு மதி வழங்கி உள்ளது.

முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் கலந் தாய்வு நடத்தப்படும் என  அண்ணா பல்கலைகழகம் அறிவித்து உள்ளது. கரோனா பரவல் காரணமாக நேரடி கலந்தாய்வுக்கு பதிலாக ஆன்லைனில் கலந்தாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

இணையதளம் மூலம் நிரந்தர

வைப்புத்தொகை அறிமுகம்

கோயம்புத்தூர், ஆக. 13- நாட்டின் மிகப் பெரிய ஆன்லைன் செல்வ மேலாண்மை ஆப் நாட்டின் முதலீட்டாளர்களுக்குச் சேவை செய்வதற்கான வாக்குறுதியின்படி,  பஜாஜ் ஃபைனான் சுடன் கூட்டு சேர்ந்து தொந்தரவில்லாத, இணையதள நிரந்தர வைப்புத் தொகையை வழங்கியுள்ளது. இந்த சமீபத்திய வழங்குதல் முதலீட்டா ளர்களுக்கு 7.35 சதவிகிதம் வரை உத்ரவாதமான வருமானத்துடன் எளிதான முதலீட்டு வாய்ப்பை அனுமதிக்கும்.

பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாக இருப்பதன் நம்பகத்தன்மை காரணமாக இந்தியர்கள் எப்போதும் மற்ற முதலீடுகளை விட நிரந்தர வைப்புகளை விரும்புகிறார்கள். இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளில் வங்கிகள் வழங்கும்  விகிதங்கள் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், பெரும்பாலான இந்தியர்கள் இப்போது பணவீக்கத்தை வெல்லக்கூடிய வருமானத்தை ஈட்டுகின்றனர்.  இன்  சலுகையுடன், மில்லியன் கணக்கான இந்திய முதலீட்டாளர்கள் இப்போது பல வங்கிகளுடன் ஒப்பிடும்போது அதிக வருமானத்தை ஈட்டுவதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளனர் என இந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி முகேஷ் கல்ரா தெரிவித்துள்ளார்.