ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
மும்பையில் இந்தி மற்றும் மராத்தி மொழியில் தந்தை பெரியாரின் சமூக நீதிக் கருத்தரங்கம்
September 7, 2020 • Viduthalai • கழகம்

மும்பை,செப்.7 அறிவுலக ஆசான் தந்தை  பெரியாரின் கொள்கைகளை இந்தியாவின் அனைத்து மொழி பேசும் மக்களிடையே எடுத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை இந்தியா வில் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதை மனதில் கொண்டு அய்ந்து கட்ட சொற்பொழிவு நிகழ்சியை வர இருக்கின்ற 300 நாட்களில் திராவிட மறுமலர்ச்சி மய்யம், டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் ஸ்மிர்தி ப்ரேர்னா கேந்த்ரா உடன் இணைந்து நடத்த முடிவெடுக்கப்பட்டது.

இதன் முதல் நிகழ்வாக, மும்பை பகுத்தறிவாளர் கழகத்தின் உதவி யோடும், மும்பை திராவிடர் கழகத் தின் ஒத்துழைப்போடும் 3.9.2020 வியா ழக்கிழமை அன்று மாலை 7 மணியிலிருந்து 8.30 மணி வரை மராட்டிய, இந்தி மொழிகளில் காணொலி வழியாக- சொற்பொழிவு நடை பெற்றது.

இக்கூட்டத்தின் செயல்பாட் டினை அண்ணல் அம்பேத்கர் ஸ்மிர்தி ப்ரேர்னா கேந்த்ரா அமைப்பாளர் பேராசிரியர் சச்சின் பன்சுடே நிகழ்த்த, திராவிட மறுமலர்ச்சி மய்ய நிறுவனர் ஸ்டீபன் ரவிக்குமார் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், 3 மணித் துளிகளில், சமுகநீதி பற்றி சித்திரங்கள் கொண்டு ஆங்கிலத்தில் அறிமுக உரையாற்றினார்.

மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன் நிகழ்ச்சியின் சிறப்புப் பேச்சாளரை அறிமுகம் செய்து வைத்தார். மும்பை பகுத்தறி வாளர் கழகத் தலைவர் அ.இரவிச் சந்திரன் Ôபெரியாரின் சமுகநீதிச் சிந்தனைகளும், செயல்பாடுகளும்Õ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

மிகவும் சிறப்பான முறையில் தந்தை பெரியார் அவர்களின் சமூகநீதி, மூட நம்பிக்கை ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, சுயமரியாதை, மனிதநேயம் இப்படி பல்வேறு தலைப்புகளில் தந்தை பெரியார் கொள்கைகள்குறித்து விளக்கமாக சிறப்புரை ஆற்றினார்.

வைக்கம் போராட்டம், சேரன் மாதேவி குருகுல ஜாதிமத பேதம், மதத்தின் பெயராலே மனிதனை பிளவுபடுத்தப்பட்டதுகுறித்தும், மராட்டிய மாநிலத்தில் மகாத்மா ஜோதிபா பூலே, சாகுமகாராஜ் ஆகி யோரின் சமூக நீதி கொள்கைகளையும், சிந்தனைகளையும் எடுத்து சொன் னார். சமூக நீதிக்காக போராடிய ஜோதிபா புலே, சாகு மகாராஜ், நாராயணகுரு, தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம் பேத்கர் அவர்களின் தொண்டுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

கேள்வி -பதில் நிகழ்வின்போது இலெமூரியா அறக்கட்டளையின் நிறுவனர் சு.குமணராசன் தோழர் களின் கேள்விகளுக்கு விரிவாக விளக்கம் அளித்தார்.

பெரியார் பன்னாட்டு மய்யத்தின் தலைவர் மருத்துவர் சோம.இளங் கோவன், அம்பேத்கர்,  அமெரிக் காவைச்சேர்ந்த பெரியார் கொள் கைப்பற்றாளர்  சுத்தமல்லி கங்காநிதி, திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன், யூனியன் வங்கியின் ஓய்வு பெற்ற அதிகாரி எஸ்.நல்லசேகரன், மும்பை மனிதநேய இயக்க ஒருங்கிணைப்பாளர் சங்கர் டிராவிட் , மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வதிலை பிரதாபன், மும்பை கவிதாயினி புதிய மாதவி, பாவலர் பைந்தமிழ், ஜெரிமேறி தமிழ்ச் சங்கத் தலைவர் கோ.சீனிவாசகம்,  அண்ணல் அம்பேத்கர் ஸ்மிர்தி ப்ரேர்னா கேத்ரா தலைவர் சவான், பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் சண்முகசுந்தரம், மும்பை திராவிடர் கழகப் பொரு ளாளர் அ.கண்ணன் மற்றும் ஏராளமான அம்பேத்கர் , பெரியார் சமூக பற்றாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண் டனர்.

நிகழ்ச்சியின் முழு வடி வத்தையும் பேராசிரியர் ராஜேஷ் புர்க்கே முழு மையாக மிகவும் சிறப்பாக தொகுத் தளித்தார். இறுதியாக பேராசியர் சுஹாஸ் சவான் நன்றி உரை கூற நிகழ்ச்சி இரவு 10 மணியளவில் கூட்டம் நிறைவு பெற்றது.