ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
முதல் சட்ட அமைச்சரும் ஒரு தாழ்த்தப்பட்டவர் பாகிஸ்தானின் அம்பேத்கர் ஜோகேந்திரபாபு மண்டல்
October 12, 2020 • Viduthalai • மற்றவை

 ஜோகேந்திர நாத் மண்டல். 29 ஜனவரி 1904 அன்று இன்றைய பங்களாதேஷில் இருக்கும் பாகேர்கஞ் (பாரிஷால்) பகுதியில் பிறந்தார்.  மேற்குவங்கத்தில் இருந்த கடுமையான ஜாதிய அடக்குமுறையின் காரணமாக இவரது பெற்றோர் குறித்த எந்த தகவலும்  இவரும் பிற்காலத்தில் எதுவும் சொல்லவில்லை. இவர் தன்னைப் பற்றியும் தனது ஜாதி பற்றியும் வெளியில் சொல்வதே கிடையாது அந்த அளவு கடுமையான அடக்கு முறைகளை சந்தித்த இவர்   இவர் 1937இல் பிரதேச சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட போதுதான் இவர் நாமசூத்திரர் என்று பலருக்குத் தெரிவித்தார். இவரது கல்விப் புலமை மற்றும் முற்போக்குச் சிந்தனை பேச்சு, எளிமையாக அணுகும் குணம் போன்றவை மக்களிடையே பெரிதும் கவர்ந்துவிட இவர் தனக்கு எதிராக போட்டியிட்ட பிரபல காங்கிரஸ் தலைவர் சாத்குமார் தாதா என்பவரை தோற்கடித்து. பிரிட்டீசாரின் வங்கமாகாணத்தின்  சட்டசபை உறுப்பினராக  நுழைந்தார். தனது பதவிகாலம் முழுவதும் ஒடுக்கப்பட்டோர் நலனுக்காக பாடுபட்டார்

இவர் நேதாஜி மீது மிகுந்த பற்றுக் கொண்டவர். 1940ல் நேதாஜி காங்கிரஸில் இருந்து விலகிய போது இவரும் விலகினார். எக்காலத்திலும் காந்தியை இவர் நம்பவே இல்லை. பூனா ஒப்பந்தத்தின் போது காந்தியின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவேண்டாம் என்று இரண்டு தலைவர்கள் அம்பேத்கரிடம் கூறினார்கள் ஒருவர் தெற்கி லிருந்து தந்தை பெரியார், மற்றொருவர் கிழக்கிலிருந்து ஜோகேந்திரநாத் மண்டல் அவார்.  வங்கமாகாணத்தின் சுஹ்ரவர்தி அமைச்சரவையில் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது.

இதே வேளையில் அம்பேத்கருடன் சேர்ந்து வங்கத்தில் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் கூட்டமைப்பை உருவாக்கினார் மண்டல்.  இவரை இஸ்லா மியர்களின் கைக்கூலி என்று பொய் பிரச்சாரம் செய்து வங்கத்தின் தாழ்த்தப்பட்ட இனமக்களை  ஹிந்து மஹாசபையில் சேர்ப்பதற்கு கடுமையான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டது,  ஆனால் அவர் அந்த அமைப்பு ஹிந்துவாத அமைப்பு உங்களை இந்த நிலைக்கு ஒதுக்கி வைக்கும் ஒரு அமைப்பில் உங்களைச் சேர்ப்ப வர்கள் தனக்குச் சமமாக உங்களை மதித்தால் நானும் உங்களோடு சேர்ந்து மஹாசபையில் சேர்வேன் என்று கூறினார்.

அவர் கூறியதைப் போலவே இந்துமஹாசபை பட்டியலினமக்களை இந்து முஸ்லீம் கலவரத்தில் ஈடுபட்டது .அதன் பிறகு இவர் மாகாணம் முழுவதும் பயணம் செய்து தன் மக்களை கலவரத்தில் ஈடுபடவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்ததன் பேரில் பட்டியல் இன மக்கள் ஹிந்து மஹாசபையின் சூழ்ச்சியைப் புரிந்துகொண்டு விலகினர். அதன் பிறகு அங்கு காங்கிரஸ் மற்றும் இந்துமகாசபை தலையெடுக்கவே இல்லை.

 1946ல் இந்திய இடைக்கால அரசு அமைந்தபோது முஸ்லிம் லீகின் பிரதிநிதிகள் ஐவரில் ஒருவராக ஜின்னா இவர் பெயரையும் சேர்த்தார். பிரிட்டிஷ் மன்னரின் ஒப்பு தலுக்குப் பிறகு மண்டல் சட்ட அமைச்சர் ஆனார். பிரி வினையின் போது  நம் ஜாதியினர் அனைவரும் பாகிஸ் தானிலேயே இருங்கள் அங்கே சென்றால் பெரும்பான்மை ஜாதி இந்துக்களுக்கு அடிமைகளாகத்தான் என்று கூறினார்.

பாகிஸ்தான் அரசியல் நிர்ணய சபையின் 69 உறுப்பினர்களில் மண்டல் ஒருவராக இருந்தார். சபையின் தற்காலிக தலைவராக மண்டலைத் நியமித்தார் ஜின்னா. மண்டல் அகமகிழ்ந்தார். பிரிவினைக்குப் பின்னர் சுதந்திர பாகிஸ்தானின் முதல் சட்ட மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் ஆனார் மண்டல்.

1947ல் இருந்து 1950 வரை கராச்சியில் (அப்போதைய பாகிஸ்தான் தலைநகர்) வகித்தார். பின்னர் கிழக்குப் பாகிஸ்தானில் வங்க மொழி புறக்கணிக்கப்படுவதாகவும் தம் மீது மேற்குப் பாகிஸ்தானின் அரசு உருதுமொழியை வலுக்காட்டாயமாக திணிப்பதாகவும் கூறி மொழிப் பிரச்சினை பிறகு பெரும் கலவரமாக உருவானது, இந்தக்கலவரத்தின் போது   10000 பேர் கொல்லப்பட்டனர்

 தனது தாய்மொழியான வங்கமொழிக்கு பாகிஸ்தானில் மரியாதை இல்லை என்று தெரிந்த உடன் அமைச்சர் பதவியைத் துறந்து  இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார்.

பிரிவினைக்குப் பிறகு மேற்குவங்கத்திற்கு வந்த இவர் 1930-ல் விடுத்த எச்சரிக்கையை மக்கள் அப்படியே பின்பற்றி இருப்பதைக் கண்டார், ஆம் இந்தியா முழுவதும் காங்கிரஸ் வளர்ந்த போது மேற்குவங்கத்தில் தலையெடுக்க முடியாமல் இருந்தது, ஆனால் பிரிவினைக்குப் பிறகு மேற்குவங்க மக்கள் யோகேந்திர நாத் மண்டலை மறந்து போயினர்.  கல்கத்தாவில் இருந்து போது,  பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபட்டார். 1967ல் வங்கத்தில் சட்டசபைத் தேர்தலில் இவர் போட்டியிட முயன் றார்.  இவர் மீது நெடுநாள் கோபத்தில் இருந்த  காங்கிரஸ் இவரின் அரசியல் நுழைவை மறைமுகமாக எதிர்த்தது, ஆகையால் இவர்  சுயேச்சையாக போட்டி யிட்டார். அப்போதும் இவரை  ஜோகேந்திர அலி  ஜோகேந்திர நாத் முல்லா என்று இன்றைய சங்கிகளைப் போல் அன்று காங்கிரஸ் பிரச்சாரம் செய்து இவரைத் தோற்கடித்தது,

1968 அக்டோபர் 5ஆம் தேதி பண்காம் என்ற ஊரில் வைத்து இவர் காலமானார்.