ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
மீண்டும் சோசலிசத்தை நோக்கி பொலிவியா - வை.கலையரசன்
October 31, 2020 • Viduthalai • உலகம்

தென்னமெரிக்காவில் உள்ள பொலிவியா நாட்டிற்கு சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஈவோ மோரலஸ் தலைமையிலான சோசலிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. சோச லிசத்திற்கான இயக்கம் என்னும் எம்ஏஎஸ் கட்சியின் அதிபர் வேட்பாளரான லூயி ஆர்சே அடுத்து அதிபராக பதவியேற்கவுள் ளார். இவர் முன்னாள் அதிபர் ஈவோ மோர லஸ் அமைச்சரவையில் நிதி அமைச்சராக பணியாற்றியவர். ஈவோ மோரல்ஸ் இலத்தீன் அமெரிக்காவின் பூர்வ குடி இனமான செவ் விந்திய இனத்தைச் சேர்ந்தவர். அரிதாகக் கிடைக்கும் உலோகமான லித்தியம் சீனாவைத் தவிர பொலிவியாவில் பெரிமளவில் (உலக கையிருப்பில் 90 சதவீதம்) கண்டறியப்பட்டது.. லித்தியம் கார்கள் மற்றும் மொபைல் போன் களில் பயன்படும் பேட்டரி தயாரிக்க தேவைப் படும் பொருளாகும். இதனை நாட்டுடைமை யாக்க முயன்ற சூழலில் அவரது ஆட்சியை கவிழ்க்கும் சூழ்ச்சி நடைபெற்றது.

இந்த சதியில் ஈடுபட்டதாக அமெரிக்க தூதரை நாட்டை விட்டு வெளியேற்றியதுடன், அமெரிக்காவுடனான தூதரக உறவுகளை முறித்துக் கொண்டார் அதிபர் ஈவோ. ஆனா லும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் துணை யுடன் முதலாளித்துவவாதிகள் மற்றும் இன வாதிகள் இணைந்து சரி செய்து கொண்டு இருந்தனர். 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தேர்தலில் சோசலிஸ்ட் கட்சி முறைகேடு செய்ததாக "அமெரிக்க அரசுக ளின் அமைப்பு"  அறிவித்தது. இந்த அமைப்பு அமெரிக்காவால் 1948 இல் உருவாக்கப்பட்ட அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த அறிவிப்பின் காரணமாக அதிபர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதிபர் ஈவோ மோரேல்ஸ் ராணுவத்தால் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் இப்பொழுது அர்ஜெண்டினாவில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் இடைக்கால அதிபராக வலதுசாரிக் கட்சியை சேர்ந்த கார்லோஸ் மேசா செயல்பட்டு வந்த நிலையில் தற்போது நடைபெற்ற தேர்தலில் மீண்டும் அந்த சோசலிஸ்ட் கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள் ளது.   இந்த வெற்றியிலும்  50 விழுக்கா£ட்டிற்கு மேல பெண்கள் வெற்றியடைந்துள்ளது, குறிப்பிடத்தக்கது, தற்போது அதிபராக பொறுப்பேற்கவுள்ள  சிறந்த பொருளாதார மேதையான லூயி ஆர்சே, லா பாஸில் உள்ள நடுத்தரக் குடும் பத்தில் பிறந்தவர். பொலிவியாவில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகமான மேயர் சான் ஆன்ரெஸ் பல்கலைக்கழகத்திலும், இங்கி லாந்தின் வார்விக் பல்கலைக்கழகத்திலும் பொருளாதாரம் பயின்றவர். தன் பதினான் காவது வயதில் காரல் மார்க்ஸைப் படிக்க ஆரம்பித்து, அதையே தன் அரசியல் கொள் கையாகக் கொண்டவர். மேலும் "இனியும் அதை மாற்றிக்கொள்ள மாட்டேன். என்னும் நிலைபாட்டில் உள்ளார்" லூயி ஆர்சே.

தென் அமெரிக்காவின் மிகவும் வறுமை யான நாடு என்று பெயர் பெற்றிருந்த பொலி வியாவை, ஈவோ மொரேல்ஸ் ஆட்சியின் போது நிதி அமைச்சராக இருந்தபோது லூயி ஆர்சே வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் சென்றார். பொலிவியா நாட்டின் இயற்கை வாயு கச்சா பொருட்கள் உள்ளிட்ட அனைத்து இயற்கை வளங்களையும் நாட்டுடைமை ஆக்கினார். அதன் காரணமாக உலக சந்தை யில் கனிம வளங்களின் விலை அதிகரிப்பால் கிடைத்த பெருமளவு நிதி கோடிக்கணக்கான பொலிவிய பூர்வீக குடிமக்களை வறுமையி லிருந்து உயர செய்வதற்கு பயன்பட்டது அது அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தியது அதன் மூலம் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.6 என்ற அளவை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் செலவினங்களில் சில சிக்கன நடவடிக்கைகள் தேவைப்படும் என்பதை அவர் ஒப்புக்கொண்டாலும், பொது செலவி னங்களுக்கான தொகையைக் குறைக்க மாட் டேன் என்று லூயி ஆர்சே உறுதியளித்து உள்ளார். பொலிவியாவின் வளர்ச்சியின் ராஜபாட்டை முடிவடையவில்லை என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.

எங்களால் பல்வேறு வழிகளில் செயல் பட்டு, அதில் சாதித்துக்காட்ட முடியும் என் பதை உலகுக்கு நிரூபித்துக்காட்டியுள்ளோம். என்றும் லூயி ஆர்சே தெரிவிக்கிறார்.

ரிச்சர்ட் வுல்ஃப் என்ற அமெரிக்கப் பொருளாதாரவியல் அறிஞர், "பொலிவிய வாக்காளர்கள் 20% வாக்கு வித்தியாசத்தில் ஒரு சோசலிச அரசைத் தேர்ந்தெடுக்கின்றனர். லூயி ஆர்சே பெற்ற இந்த வாக்குகள் சென்ற ஆண்டு ஈவோ மொரேல்சுக்கு எதிராக நடத்தப்பட்ட வலதுசாரி ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையை  நிராகரித்திருக்கிறது.

அமெரிக்காவுக்கும் வெனிசுலாவுக்கும் இடையேயான பிரச்சனைக்கு எதிர்வினை யாக பொலிவியா சோசலிசத்துக்கு வாக்க ளித்துள்ளது" என்று ட்வீட் செய்துள்ளார்.

பொலிவியாவில் நடைபெற்ற இந்த அரசியல் மாற்றம் மேனாள் அதிபர் ஈவோ அவர்களையும், லத்தின் அமெரிக்காவின் பிற நட்பு நாடுகளின் தலைவர்களையும் மகிழ்ச்சி யில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது அர்ஜென்டினாவில் வாழ்ந்து வரும் ஈவோ மொரேல்ஸ், "சகோதர சகோத ரிகளே, மக்களின் விருப்பம் நிலைநாட்டப் பட்டுள்ளது. மகத்தான வெற்றி கிடைத் துள்ளது. நமது அரசியல் இயக்கத்துக்கு இரண்டு அவைகளிலும் பெரும்பான்மை கிடைத்துள்ளது. இப்போது நாம் மக்களின் கௌரவத்தையும் சுதந்திரத்தையும் மீட்கப் போகிறோம்" என்று ட்வீட் செய்துள்ளார்.

பிரேசிலின் தொழிலாளர் கட்சித் தலை வர், "பொலிவிய மக்கள் வாழ்க! ஜனநாயகம் வாழ்க!" என்று ட்வீட் செய்திருக்கிறார்.

வெனிசுலாவின் தலைவர் நிக்கோலஸ் மதுரோ, "மகத்தான வெற்றி!, ஒன்றுபட்டு, விழிப்புணர்வோடு பொலிவிய மக்கள் நமது சகோதரர் ஈவோவுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பை தோற்கடித்திருக்கிறார் கள்" என்று ட்வீட் செய்திருக்கிறார்.

ஈவோ மொரேல்ஸ் வெளியேற்றப்பட்ட பிறகு ஆட்சியில் அமர்ந்த ஆனேசின் பழை மைவாத அரசுக்கு இது ஒரு கடுமையான கண்டனமாக அமைந்திருக்கிறது என்பது உறுதி.