ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
மானமிகு கல்பாக்கம் வேம்பையன் மறைந்தாரே!
August 29, 2020 • Viduthalai • கழகம்

பெரியார் பெருந் தொண்டர் கல்பாக்கம் வேம்பையன் தன் 84ஆம் வயதில் நேற்றிரவு (28.8.2020) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

தை முதல் நாள்தான் தமிழ் புத்தாண்டு என்ப தற்காக அவர் வெளியிட்ட துண்டறிக்கைகள் கொஞ்ச நஞ்சமல்ல. தமிழ் உணர்வும் இனவுணர்வும் மிக்கவர். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணியாற்றிய காலந் தொட்டு, பகுத்தறிவாளர் கழகத்தின் பணியை நேர்த்தியாக செய்தவர். பணி ஓய்வுக்குப்பின் மறைமலைநகரில் பகுத்தறிவுப் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தவர்.

அவர் பிரிவுக்குப் பெரிதும் வருந்துகிறோம். அவர் பிரிவால் துயருறும் மகன்கள் தொல் காப்பியன், திருவள்ளுவன், இளங்கோ ஆகி யோர்களுக்கும், தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் இரங்கலையும், ஆறுதலையும் தெரி வித்துக் கொள்கிறோம்.

 

- கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

29.8.2020