ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
மாதந்தோறும் காணொலி மூலம் பிரச்சார நிகழ்ச்சிகள்
September 7, 2020 • Viduthalai • கழகம்

சிதம்பரம் கழக மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்

சிதம்பரம், செப். 7- சிதம்பரம் கழக மாவட்ட  கலந்துரையாடல் 30.8.2020 ஞாயிறு மாலை 5.30 மணிக்கு, காணொலி மூலமாக நடைபெற்றது.

கழகப் பொதுச் செயலாளர் முனை வர் துரை.சந்திரசேகரன் தலைமை யேற்றார். மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வரவேற் புரையாற்றினார். மண்டலத் தலைவர் அரங்க.பன்னீர்செல்வன் முன்னிலை ஏற்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலாளர் யாழ்.திலீபன், மாவட்ட ப.க. செயலாளர் கோ.நெடுமாறன், பெரியார் படிப்பகத் துணைத் தலை வர் ஆறு.கலைச் செல்வன், முன்னாள் மாவட்ட அமைப்பாளர் கு.தென் னவன், மாவட்ட அமைப்பாளர் கா. கண்ணன், நகர அமைப்பாளர் இரா.செல்வரத்தினம், வேலூர் மண்டலத் தலைவர் குடியாத்தம் சடகோபன், முதலியோர் கருத்துரை வழங்கினர். மாவட்ட ப.க. தலைவர் பூ.வே. அசோக்குமார், மாவட்ட துணைத் தலைவர் மழவை கோவி.பெரியார் தாசன், ஆசிரியர் செங்குட்டுவன் ஆகியோர் இணைப்பு கிடைக்காமை யால், தொடர்பில் வரவில்லை என்று பிறகு தொலைபேசி மூலம் தெரிவித்தனர்.

நிகழ்ச்சிக்குத் தலைமையேற்ற பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தன் உரையில்: இந்த ஆண்டு பட ஊர்வலம், பொது நிகழ்ச்சி போன்றவை இல்லையென்றா லும், தனிமனித இடைவெளியோடு கழகக் கொடியேற்றுதல், வீட்டுக்கு வீடு அய்யா படம் வைத்து மாலையிடுதல் - எங்கெங்கு பெரியார் சிலை உள்ளதோ அங்கெல்லாம் மாலை அணிவித்தல் - சுவரெழுத்து எழுதுதல், மாவட்டம் முழுதும் சுவரொட்டி ஒட்டுதல் போன்ற பணிகளைச் செய்து தந்தை பெரியார் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்றார்.

தீர்மானங்கள்

தந்தை பெரியாரின் 142ஆம் ஆண்டு பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட மாவட்டமெங்கும் சுவ ரெழுத்து எழுதுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல் - வீட்டுக்கு வீடு பெரியார் படம் வைத்து மாலை அணிவித்தல் என்று தீர்மானிக்கப்பட்டது. பெரி யார் சிலைகளுக்கு மாலை அணி விப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தங்கள் தெருக்களில் அனைவருக் கும் இனிப்புகள் வழங்குவது. பெரி யார் பற்றிய துண்டறிக்கைகள் விநி யோகிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

மாதந்தோறும் காணொலி மூலம் பிரச்சார நிகழ்ச்சிகள் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

17.9.2020 அன்று மாலை காணொலி காட்சி மூலமாக பெரியார் பிறந்த நாள் விழா நடத்துவது என தீர்மா னிக்கப்பட்டது.