ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
மலேசிய கொள்கை மணி மானமிகு சிவப்பிரகாசம்  முனியாண்டிக்கு வீர வணக்கம்
October 4, 2020 • Viduthalai • மற்றவை

பெரியார் பெருந்தொண்டர், கழகச் சுட்டி, மானமிகு சிவப்பிரகாசம் முனியாண்டி (வயது 58) அவர்கள்   (தாப்பாரோடு, பேரா மாநிலம்) 3.10.2020 அன்று  மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தோம்.

பேரா மாநில பெரியார் பாசறையின் துணைப் பொதுச் செயலாளர், தீவிரமான கழகக் கொள்கைப் பற்றாளரான சுயமரியாதை வீரர் சிவப்பிரகாசம் முனியாண்டி அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக மறைவுற்றார் என்ற செய்தி மிகுந்த துயரத்திற்கும், மாளாத துன்பத்திற்குமுரிய  ஒன்றாகும். சீரிய கொள்கையாளர், சிறந்த பண்பாளர்.

அவரை இழந்து வாடும் அவரது வாழ்விணையர் திருமதி மகாலட்சுமி, குடும்பத்தினர், கழகப் பாசறையினர் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவிக்கிறோம்.

அவருக்கு நமது வீர வணக்கம்.

 

கி.வீரமணி,

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

4.10.2020